இந்திய சீன எல்லையில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், சீனா இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
சீனாவின் இந்தத் திடீர் மனமாற்றத்திறக்கு என்ன காரணம்..? சீனா பொருளாதாரம் மோசமான நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், இதைச் சரி செய்ய இந்தியாவுடன் நட்புபாராட்ட முடிவு செய்துள்ளதா..? சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியது என்ன..?
கொரோனா தொற்று
கொரோனா தொற்று பாதிப்பாலும், ரியல் எஸ்டேட் வீழ்ச்சியாலும், அதிகப்படியான கடன் நெருக்கடியால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ள நிலையில் சீனாவின் நுகர்வோர் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது, இதேபோல் தொடர்ந்து லாக்டவுன் காரணமாக உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா - சீனா
இந்த இக்கட்டான சூழ்நிலையில் 2019 முதல் இந்தியா - சீனா மத்தியில் இருக்கும் பிரச்சனையைச் சமாளிக்கும் விதமாகச் சீன இந்திய உடனான பிரச்சனையைத் தீர்க்க முதல் படியை எடுத்துள்ளது. இந்தியா சீனாவுக்கான பெரிய சந்தை மட்டும் அல்லாமல் பெரும் போட்டியாகவும் உள்ளது, இதன் காரணமாகப் பிரச்சனையைப் பெரிதாக்காமல் முடிக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது.
வெளியுறவு அமைச்சர் வாங் யி
இந்த நிலையில் தான், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி 2020 முதல் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைச் சுமூகமாக முடிக்கவும், இரு நாடுகள் மத்தியிலான உறவில் உறுதிப்பட்டை கொண்டு வரவும், இருதரப்பு உறவுகளின் "நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சிக்கு" ஆதாரமாக முடிவுகளை எடுக்கவும் சீனா தயாராக இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
வெளிநாட்டு உறவுகள்
2022 சர்வதேச நிலைமை மற்றும் சீனாவின் வெளிநாட்டு உறவுகள் குறித்த சிம்போசியத்தில் உரையாற்றிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் அரசு தரப்பிலும், ராணுவ தரப்பிலும் தொடர்பைப் காத்து வருகின்றனர் என வாங் யி பேசியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பதவிக்குச் சமீபத்திய கட்சி காங்கிரசின் போது வாங் யி பதவி உயர்வு பெற்றார், இவர் சீன அதிபரான ஜி ஜின்பிங்-க்கு மிகவும் நெருங்கியவர் என்பதாலேயே அவருக்கு இந்த முக்கியமான பதவி கொடுக்கப்பட்டது.
உக்ரைன் போர்
பிற நாடுகள் உடனான சீனாவின் பணிகள் குறித்த வாங் யி நீண்ட உரையில் பேசிய போது, உக்ரைன் போருக்குப் பிறகும், அமெரிக்காவுடனான சீனாவின் சிக்கலான உறவுகள் மற்றும் ரஷ்யாவுடன் வளர்ந்து வரும் உறவு ஆகியவைற்றைக் குறித்து அதிகக் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
17 முறை பேச்சுவார்த்தை
இந்த உறையில் இந்தியா சீனா குறித்துச் சில நிமிடம் மட்டுமே பேசினாலும் இந்தியுடன் சுமூகமாகச் செல்ல சீனா தயாராக உள்ளதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் இரு நாடுகளும் 2022 முதல் சுமார் 17 முறை ராணுவ அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
வாங் யி பேச்சு
17 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், சீனா தொடர்ந்து இந்திய எல்லையில் இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேச்சு நடைமுறைக்கு வந்தால் மட்டுமே நம்ப முடியும்.


Click it and Unblock the Notifications