பெய்ஜிங், சீனா: உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு சீனா. ஆனால் தற்போது சீனாவுக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் காரணியாக பணவீக்கம் சொல்லப்படுகிறது.
பொருட்களின் விலை ஏறுவதும் அதை வாங்குவதற்கான பணத்தின் மதிப்பு குறைவதையுமே நாம் பணம் வீக்கம் என அழைக்கிறோம். ஆனால் தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை பணவாட்டம். அதாவது பொருட்களின் விலை வேகமாக சரிவடைந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு வேகமாக குறைந்து வரும் அதே வேளையில் அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு வேகமாக அதிகரித்து வரும் இதனையே பணவாட்டம் என அழைக்கிறோம்.

பணவாட்டம் என்பது வாடிக்கையாளர்களுக்கு சாதகமானதாக இருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது சீனாவில் பல்வேறு பொருட்களின் உற்பத்தி அதிகரித்துவிட்டது , இதன் காரணமாக சந்தையில் அவற்றின் விலை குறைந்த வண்ணம் இருக்கிறது. சீனா மத்திய வங்கியான பீப்பிள் பேங்க் ஆஃப் சீனா தற்போதைக்கு சீன கரன்சியான யுவானின் மதிப்பை நிலைப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது. எனவே பணவாட்டம் பிரச்சனையை கவனிக்க தவறிவிட்டது.
அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தால் தான் இது சரி சரியாகும் என சிட்டி குரூப் மற்றும் நோமோரா ஹோல்டிங்ஸ் ஆகிய நிதி சார்ந்த நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கின்றன.சீனாவில் பல்வேறு பொருட்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு குவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் விற்பனை நிறுவனங்கள் பெரிய அளவில் தள்ளுபடிக்கு பொருட்களை விற்பனை செய்த வண்ணம் இருக்கின்றன. இது கடந்த சில மாதங்களாகவே சீனாவில் நிகழ்ந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பொருட்களுக்கு தள்ளுபடிகளை அறிவிப்பதால் பணவாட்டம் ஏற்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் பார்க்கும்போது சீனாவில் ஒரே நாளில் நான்கு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. இதன்படி 236 யுவான் மதிப்புள்ள பொருள் பொருட்களை 20 யுவான் மதிப்புக்கு விற்பனை செய்தார்களாம். துணிமணி, வீட்டு உபயோக பொருட்கள், திண்பண்டங்கள் என பல்வேறு நிறுவனங்களும் இப்படி போட்டி போட்டுக் கொண்டு பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளன. உணவகங்களும் உணவு பொருட்களின் விலையை குறைத்து இருக்கின்றன.
மின்சார கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி வாகனங்களின் விலையில் 10,000 டாலர் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக பொருட்களின் விலை குறைவதால் சீனாவில் வாடிக்கையாளர் விலைக்குறியீடு கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவாக 0.7 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.
இது பல மாதங்களுக்கு நீடிக்கும் போது அங்கே பொருளாதாரம் மந்த நிலை ஏற்படும். அதாவது பொருட்கள் விலை குறையும்போது பொருளாதாரத்தில் தேவை குறையும், தொடர்ந்து தேவை குறைந்தால் உற்பத்தி குறையும், உற்பத்தி குறையும் போது தொழில் வருமானம் குறையும். இதனால் வேலை இழப்புகள் அதிகமாகும். இது இறுதியாக பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே சீனாவில் இந்த பொருளாதார சூழல் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications