இந்தியாவில் எப்படி எலக்ட்ரிக் கார் வாங்க மக்களுக்கு அதிகப்படியான ஆர்வம் இருந்தும் விலையின் காரணமாக மக்கள் வாங்க தயங்குகிறார்களோ, அதேபோல் 5ஜி சேவையை பயன்படுத்த ஆசை இருந்தும் காஸ்ட்லியான போனாக இருக்கும் காரணத்தால் 5ஜி சேவை வாடிக்கையாளர்கள் அனைவரும் ப்ரீமியம் வாடிக்கையாளராகவே உள்ளனர்.
இந்தியாவில் பல சீன நிறுவனங்கள், கொரிய நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் விற்பனையில் இருந்தாலும் இதுவரையில் யாரும் பட்ஜெட் விலையில் 5ஜி போன் வெளியிடவில்லை. இது மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பாக பார்த்த சீனாவின் Transsion Group-ன் Itel பிராண்ட் தனது இணையதளத்தில் புதிதாக பவர் 55 என்ற மாடல் போன்-ஐ 9999 ரூபாயில் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி விற்பனையை துவங்க உள்ளது.

சீன நிறுவனமான Itel இந்தியாவில் முதல் முறையாக இதுவரையில் யாரும் செய்திடாத வகையில் 10000 ரூபாய் என்ற பட்ஜெட் விலை பலகையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது. 10000 ரூபாய் பலகை என்பது இந்தியாவில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கொண்ட ஒரு பிரிவு, இப்பிரிவில் இடம்பிடித்து தான் இன்று பல சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செய்து வருகிறது.
Itel பிராண்டின் 9999 ரூபாய் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் மாஸ் மார்கெட் செய்ய சிறந்த தேர்வாக இருக்கும், இது டெலிகாம் சேவை நிறுவனங்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள், கூடுதல் வருமானத்தை கொடுத்து மாபெரும் ஜாக்பாட் ஆக அமைய உள்ளது என சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் விற்பனை செய்வதற்காக சீனாவின Itel பிராண்ட் அமேசான் உடன் இணைந்து ஆன்லைன் வாயிலாகவும், தனது டிஸ்ரிபியூஷன நெட்வொர்க் வாயிலாக சிறிய டவுன், நகரங்கள் வரையில் ரீடைல் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளதாக Itel பிராண்டின் இந்திய தலைவர் ஆர்ஜித் தலாபத்ரா தெரிவித்தார்.
மேலும் ஆர்ஜித் கூறுகையில் இந்தியாவில் 10000 ரூபாய் ஸ்லாப் அளவின் வர்த்தகம் குறைந்து வந்தாலும் இப்பிரிவில் அதிகப்படியான வர்த்தக வாய்ப்பு உள்ளது. எனவே இப்பிரிவுக்கு தேவையான வர்த்தகத்தை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஸ்டாக் வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்த போனை சிறப்பாக மார்கெட் செய்ய ரிலையன்ஸ் ஜியோ உடன் கூட்டணி வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெற்ற அனைத்து வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் தற்போது ITEL பிராண்டுக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications