விஜய்சேதுபதி சேரன் எல்லாம் இருக்கட்டும்.. இந்த சீன தந்தையை பாருங்க..!!

இந்தியாவில் உள்ள சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் செலவுகளுக்கு பணம் கொடுப்பவர்களும் உண்டு. அப்படி பணத்தை கொடுத்தால் அவர்கள் கெட்டுவிடுவார்கள் என்று நினைப்பவர்களும் உண்டு. செல்வந்தர்களாக இருப்பின் தங்களது பிள்ளைகளுக்கு தினமும் பாக்கெட் மணியை அள்ளி கொடுப்பார்கள். அதுவே சாதாரண குடும்பத்தில் வளர்பவர்களுக்கு அது ஒரு ஏக்கமாகவே இருக்கும்.

இன்றைய தலைமுறையில் பாக்கெட் மணியை பெற்றோர்கள் வாரி வழங்குகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தமிழ் நாட்டில் நடந்துள்ளது. ஆம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மகனான சூர்யா சேதுபதி தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அவருடைய அப்பா விஜய் சேதுபதி தினமும் வெறும் 500 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகவும் கூறி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு திரைப்பட தயாரிப்பாளர் சேரன் எங்க அப்பா பாக்கெட்டில் ஒரு நாளைக்கு 10 ரூபாய் பார்ப்பதே அரிது அப்புறம் எங்க என் பாக்கெட்டில் என பதிவிட்டுள்ளார்.

விஜய்சேதுபதி சேரன் எல்லாம் இருக்கட்டும்.. இந்த சீன தந்தையை பாருங்க..!!

இது ஒருபுறம் இருக்க, சீனாவில் ஒரு தந்தை தன் மகன் பெரியவனாகும் வரை தனக்கு இருக்கும் சொத்துக்களை அவருக்கு காண்பிக்காமல் மறைத்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இறுதியாக அவர் தனது மகன் படிப்பை முடித்த பின் தனக்குள்ள சொத்துக்களை கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இப்போது அவரது மகன் தந்தை நிறுவனத்தின் வேலை செய்கிறார்.

ஜாங் யூடாங் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர் சீனாவில் கோடீஸ்வர தொழிலதிபர். தனக்கு சொத்துக்கள் அதிகம் இருந்தும் அதனை 20 ஆண்டுகளாக தன் மகனிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்.

ஜாங் யூடாங் (Zhang Yudong) மாலா பிரின்ஸ் என்ற பிரபல ஹூனான் ஸ்பைசி குளுட்டன் ஸ்நாக் பிராண்டின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். அறிக்கைகளின்படி இந்த நிறுவனம் ஆண்டுக்கு சுமார் ரூ.692 ​​கோடி வருவாய் ஈட்டும் தனித்துவமான பிராண்டாகும். அவரது சிறந்த சாதனை இருந்தபோதிலும், அவர் தனது மகன் ஜாங் ஜுல்லாங்குடன் (Zhang Xilong) மிகவும் சாதாரண வாழ்க்கையை நடத்தினார். ஒரு சிறிய குடியிருப்பில் 20 வருடங்கள் தன் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்

ஜியுபாய் நியூஸ் (Xuepai News) நேர்காணலின் படி, ஜாங் ஜிலாங், தனது தந்தை வைத்திருந்த பிராண்டைப் பற்றி தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். ஆனால் அவரது தந்தை தன்னிடம் குடும்பம் நிறைய பணம் கடன்பட்டிருப்பதாக எப்போதும் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி சேரன் எல்லாம் இருக்கட்டும்.. இந்த சீன தந்தையை பாருங்க..!!

தந்தை ஜாங் யூடாங் தனது மகனை பிங்ஜியாங் கவுண்டியில் உள்ள ஒரு சாதாரண குடியிருப்பில் வளர்த்தார். அவர்களின் வாழ்க்கை குடும்ப உறவுகள் இல்லாமல் இருந்தது. மகனுக்கு நல்ல கல்வியைக் கொடுத்துள்ளார். அவரது தந்தை ஜாங் ஜிலாங்கிடம் தனது ஒட்டுமொத்த சாம்ராஜ்ஜியத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் தனது படிப்புக்குப் பிறகு குடும்ப வரவு செல்வு திட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு 6,000 யுவான் சம்பாதிக்கும் வேலையை தொடங்கியுள்ளது.

மகன் தனது வெற்றியின் பலனை பெற கடினமாக உழைக்க வேண்டும் என்று அவரது யூடாங் விரும்பினார். அதனாலேயே 20 வருடங்களாக தனது அதிர்ஷ்டத்தை நிராகரித்து மகனுடன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார். விஷயங்களை உணர்ந்த பிறகு, ஜாங் யுடாங் தனது மகன் ஜாங் சிலாங்குடன் 10 மில்லியன் யுவான் (US$1.4 மில்லியன்) மதிப்புள்ள புதிதாக கட்டப்பட்ட வில்லாவில் குடியேறினார்.

ஜாங் சிலாங் தற்போது தனது தந்தையின் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தனது தந்தையின் நிறுவனத்தில் இ-காமர்ஸ் பிரிவில் பணிபுரிகிறார். அவர் வணிகத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லவும், சந்தைகளை சர்வதேசமயமாக்கவும் முயற்சிக்கிறார். சிலோங் தனது தகுதியை நிரூபித்தால் மட்டுமே நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பேன் என்று ஜாங் யுடாங் மகனிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இப்படியொரு தந்தை இருந்தால் பெற்றோர் சேர்த்து வைத்த சொத்துக்களை அழிக்காமல், கஷ்டப்பட்டு அனைத்து பிள்ளைகளும் பெரிய நிலையை அடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+