சீனா: உலகமே கொரோனா வைரஸைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் சீனாவோ அந்த கொரோனா வைரஸையே எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறது.
வெறும் பத்தே நாளில் கொரோனாவைஸுக்கு என்றே தனியாக மருத்துவமனைகளைக் கட்டியது, தன் விளையாட்டு அரங்கங்களை சில நாட்களில் மருத்துவமனைகளாக மாற்றியது என உண்மையாகவே போர் கால அடிப்படையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டு இருக்கிறது சீனா.
அரசு என்ன தான் காசு பணம் கொட்டினாலும் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆள் இல்லை என்றால் எப்படி..? இந்த முறை கொரோனா களத்தில் இருப்பவர்கள் சீன மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்.
பாதிப்பு & மரணம்
இதுவரை சீனாவில் சுமாராக 425 பேர் இந்த கொடூரமான கொரோனா வைரஸால் இறந்துவிட்டார்கள். சுமார் 10,000 பேருக்கு மேல் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனச் செய்திகள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும் எத்தனை பேர் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்கிற பதற்றத்தில் ஒட்டு மொத்த உலகமும் கதி கலங்கி நிற்கிறது.
கொரோனா வைரஸ்
கடந்த சில வாரங்களாக,
1. கொரோனா வைரஸ் நோயாளிகளைப் பார்த்துக் கொள்ளும் தன் செவிலித் தாய்கு ஒரு சிறுமி உணவு கொண்டு வந்து கொடுத்தது,
2. கொரோனா வைரஸ் மரண எண்ணிக்கை தெரிந்த பின்னும், தன் மனைவிக்கு அன்பு முத்தம் கொடுத்து பிரியும் கணவன்,
போன்ற காட்சிகளை எல்லாம் பார்த்து, உலகத்தில் மனிதம் அத்தனை அழகாக மலர்ந்தது.
பெண்கள்
தன் 72 வயதிலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை மேற்பார்வையிடும் பேராசிரியர் லி லான் ஜுவான் (Li Lan Juan), கவச உடைகளுடனேயே உட்கார்ந்த படி சோர்வில் தூங்கி வழியும் செவிலியர்... என சரமாரியாக புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் முகத்தில் காயங்களுடனும், மாஸ்க்கின் அழுத்தமான வடுக்களுடனும் வெளியான சீன செவிலியர்களின் படங்கள் பலரின் உள்ளத்தை உருக்கி இருக்கின்றன.
12 மணி நேரம்
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, கிட்டத்தட்ட காற்று புகாத அளவுக்கு இறுக்கமான கவச உடை, முகத்தில் மாஸ்க், கண்ணாடி என எல்லாம் அணிந்து கொண்டு தான் சிகிச்சை அளிக்க முடியும். அப்படி சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் பல செவிலியர்கள், மருத்துவர்கள் இப்போது வரை சீனாவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இடைவேளை
12 மணி நேரத்தில், ஒரு நல்ல இடைவேளை கூட எடுத்துக் கொள்ளாமல், மிக சொற்ப நிமிடங்களை மட்டும் ஓய்வுக்கு எடுத்துக் கொண்டு, முழுக்க முழுக்க இந்த கவச உடை, முகத்தில் மாஸ்க், கண்ணாடி என அணிந்து கொண்டு இருக்கிறார்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள். அந்த நாளுக்கான வேலையை முடித்துக் கொண்டு செவிலியர்களும், மருத்துவர்களும் தங்கள் முகத்தில் அணிந்திருந்த மாஸ்கை கழட்டிய பின் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும் போது நமக்கு ஏனோ கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது.
சோர்வு
சிந்தும் வியர்வை,
படு சோர்வன கண்கள்,
வாடி வதங்கிய முகம்,
வறண்ட உதடுகள்,
12 மணி நேரமாக அணிந்து இருந்த மாஸ்கை கழட்டும் போது,
நெற்றி கண்ணம் என எங்கு பார்த்தாலும் மாஸ்க்கின் கோரமான வடுக்கள், இறுக்கமாக மாஸ்க் அணிந்து இருந்ததால் முகத்தில் ஏற்பட்டு இருந்த காயங்கள் எல்லாம் நம் மனிதத்தை கீறிவிட்டுச் செல்கின்றன.
அடுத்த நாளும்
தொடர்ந்து முகத்தில் இறுக்கமாக மாஸ்க் அணிவதால், காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அந்த காயங்களைப் பொறுத்துக் கொள்ளலாம் என ஒரு துண்டுபிளாஸ்திரியை ஒட்டிக் கொண்டு,
மீண்டும் தங்கள் கவச உடை தறித்து,
கொரோனா உடன் போராட்டத்தில் குதிக்கும் இவர்கள்
செவிலியர்கள் அல்ல,
சீனாவின் சாமி தேவதைகள்.
கொரோனா ஒழியட்டும்,
மனிதம் மலரட்டும்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications