சீனாவினை ஒரு புறம் கொரோனா பதம் பார்த்து வந்தாலும், மறுபுறம் தனது உற்பத்தியினை யாருக்காகவும் விட்டுவிட முடியாது என்பது போல ஒவ்வொரு நடவடிக்கையாக தொடங்கியுள்ளது.
உலகின் உற்பத்தி ஆலையாக இருக்கும் சீனா, தன் இடத்தை தக்க வைத்து கொள்ள, அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க தயாராகி விட்டது.
ஏற்கனவே அதற்கான சில அறிவிப்புகளை கொடுத்துள்ளது. அதில் ஒன்று தான் சீனாவின் 1 ட்ரில்லியன் யுவான் அறிவிப்பு. சீனா செமிகண்டக்டர் உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக, 1 ட்ரில்லியன் யுவானை (143 பில்லியன் டாலரை) ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிகிறது.
இது தான் காரணமா?
சீனாவின் இந்த நடவடிக்கையானது சீனா - தாய்வான் இடையேயான பதற்றமான நிலைக்கு மத்தியில், தாய்வானை சார்ந்திருப்பதை குறைக்கும் விதமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மற்றொரு காரணம் அமெரிக்கா எனலாம். இது அமெரிக்காவினை எதிர்கொள்ள சீனா எடுக்கும் முக்கிய முடிவாகவும் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஆதரவும் காரணமா?
சீனா தாய்வான் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், அமெரிக்கா தாய்வானுக்கு ஆதரவு அளித்து வருகின்றது. இதற்கிடையில் சீனா செமிகண்டக்டர் உற்பத்தியில் பெரியளவில் தாய்வானையே சார்ந்துள்ளது. இதனால் சீனாவுக்கு எதிராக தாய்வானை பகடைக் காயாக அமெரிக்கா பயன்படுத்தலாம் என்ற அச்சமும் சீனா மத்தியில் இருந்து வருகின்றது.
சிப் உற்பத்தியாளர்களுக்கு சலுகை
அதோடு சீனாவின் டெக்னாலஜிகளை அமெரிக்கா முடக்கும் விதமாக ஒவ்வொரு முட்டுக்கட்டையாக போட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் பார்வை தற்போது செமிகண்டக்டர் பக்கம் திரும்பியுள்ளது. இதற்கிடையில் தான் பெய்ஜிங் இப்படியொரு மாபெரும் நிதியினை செமிகண்டக்டர் ஊக்குவிப்புக்காக ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிதியானது அடுத்த 5 ஆண்டுகளில் செய்யப்படலாம் என்றும், இது தவிர வரி சலுகை என பல சலுகைகளை உற்பத்தியாளார்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசின் கவனம்
நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், சப்ளையில் தாக்கம் இருந்து வருகின்றது. இதனால் சர்வதேச நாடுகள் பலவும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. ஏற்கனவே வாகன உற்பத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் அரசு நேரடியாக இந்த துறையில் கவனம் செலுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் போட்டி
இது மேற்கொண்டு அமெரிக்காவுக்கும் கடும் போட்டியாளராக மாற வழிவகுக்கலாம். ஏற்கனவே சீனாவின் உற்பத்தியினை கருத்தில் கொண்டு தங்களது உற்பத்தியினை அதிகரிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கட்டமைப்புகளை தொடங்கி விட்டன. இதற்கிடையில் தான் சீனா அவசரமாக இப்படி ஒரு திட்டத்தினை கையில் எடுத்திருக்கலாம் என தெரிகிறது.
அமெரிக்காவின் தடை திட்டம்
அமெரிக்காவின் வர்த்தக துறையானது கடந்த அக்டோபர் மாதமே ஒரு விரிவான அறிவிப்பினை வெளியிட்டது. அதில் அமெரிக்க அரசு சீனா-வில் இருக்கும் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எல்லாவிதமான உபகரணங்களை அளிப்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிக்க முடிவு செய்தது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பெரியளவில் பற்றாக்குறை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல முக்கிய காரணிகள்
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் செமிகண்டக்டர் உற்பத்தியினை அதிகரிக்க, 53 பில்லியன் டாலர் மானியத்தினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இதில் 24 பில்லியன் டாலர் வரி சலுகையும் அடங்கும். இதேபோல இந்தியாவும் தனது பி எல் ஐ திட்டத்தின் மூலம் செமிகண்டக்டர் உற்பத்திக்கு வரி சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. இப்படி பல காரணங்களுக்கு மத்தியில் தான் சீனா தற்போது ஒரு திட்டத்தினை திட்டமிருக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications