சீனாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் செலவு மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக, உலகளாவிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றத் தொடங்கியுள்ளன. குறிப்பாக டிரம்ப் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு சீனாவில் இருந்து அதிகப்படியான நிறுவனங்கள் வெளியேற துவங்கியுள்ளது. இதனால் சீனா பிளஸ் ஒன் மீண்டும் தலைதூக்க துவங்கியுள்ளது.
இந்த 'சீனா பிளஸ் ஒன்' கொள்கை இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பை வழங்குகிறது. அதிலும், தமிழ்நாடு இந்த வாய்ப்பை பெரிய அளவில் பயன்படுத்திக் கொண்டு வருகிறது என முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Centre for Social and Economic Progress என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பேசிய அரவிந்த் சுப்ரமணியன், சீனா, தைவான், வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா FDI ஈர்ப்பதில் மிகவும் போராடி வருவதாக சுட்டிக்காட்டினார். உலகளாவிய சப்ளை செயினில் இந்திய நிறுவனங்கள் முழுமையாக இணைக்கப்படாததால், குறிப்பாக மனிதர்கள் அதிகம் ஈடுப்படும் துறைகளில் இந்தியாவின் ஏற்றுமதி திறன் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியன், இந்தியாவின் உற்பத்தித் துறை, குறிப்பாக மனிதர்கள் அதிகம் ஈடுப்படும் துறைகள், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சிறு நிறுவனங்களின் ஆதிக்கம் போன்ற காரணங்களால் சரியாக செயல்படவில்லை என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், "சீனா பிளஸ் ஒன்" போக்கு இந்தத் துறையை புத்துயிர்ப்பிக்கவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வாய்ப்பளிக்கிறது.
சீனா பிளஸ் ஒன் கொள்கை மூலம் சீனாவில் உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்களும் பிற நாட்டு நிறுவனங்களும் தற்போது மாற்று இடங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது இதற்கு முக்கியமான காரணம் டிரம்ப் வெற்றி தான்.
டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா நாட்டின் அதிபராக 2வது முறையாகப் பதவியேற்கும் நிலையில் சமுக வலைத்தளத்தில் முக்கியமான பதிவைச் செய்துள்ளார். டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த உடனே மெக்சிகோ மற்றும் கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட உள்ளதாகவும், சீனா மீதும், சீன பொருட்கள் மீதும் 25 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சீனா+1 கொள்கை மூலம் இதுவரையில் அதிகம் நன்மை அடைந்தது என்றால் அது இந்தியா தான். இதன் வாயிலாக சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பிற நாட்டு நிறுவனங்களும் தனது தொழிற்சாலையை இந்தியாவுக்கு மாற்றும் முயற்சியில் இறங்கும்
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications