சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய உச்ச அளவான 6.5% வளர்ச்சி விகிதத்தில் இருந்து தற்போது 4.6% ஆக குறைந்துள்ளது. இந்த மந்த நிலையில் இருந்து மீள முடியாமல் இன்று வரையில் தவித்து வருகிறது.
ஏற்கனவே சீனா தனது பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்திக்காட்டுவதாக குற்றச்சாட்டு இருக்கும் வேளையில் இத்தகையை பெரும் வித்தியாசம் இதை உண்மை என கேள்வியும், அச்சமும் நிபுணர்களிடையே எழுந்துள்ளது. கொரோனா-வுக்கு பின்பு பல நாடுகள் பொருளாதார சரிவில் இருந்து பெரிய அளவில் மீண்டு உள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.

இதற்கிடையில் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை சீன அதிபர் ஜி ஜின்பிங் முக்கியமான எச்சரிக்கை உடன் துவங்கியுள்ளார். தைவான் நாட்டை சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுக்க முடியாது, விரைவில் தைவான் சீனாவின் ஒரு பகுதியாக மாறும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் ஜனவரி 20ஆம் தேதி டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், புதிய அரசை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறது சீனா. இதனால் 2025 ஆம் ஆண்டு சீனாவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக மாறும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
அமெரிக்காவுடன் போட்டிப்போடும் சீனா, அந்நாட்டின் மக்களின் வாழ்க்கைத் தரம் வளர்ந்த நாடுகளை விட மிகவும் குறைவாக உள்ள நிலையில், இந்த மந்தநிலை கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற கருத்தையும் பொருளாதார வல்லுனர்கள் முன்வைக்கின்றனர். தற்போது சீனா பொருளாதாரம் குறித்து விவாதம் எழுவதற்கு முக்கியமான காரணம் சீனாவின் உற்பத்தித்திறன் குறைந்தது தான்.
இந்த பொருளாதார மந்தநிலைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று மொத்த உற்பத்தித்திறன் (total factor productivity - TFP) குறைவதாகும். TFP என்பது ஒரு நாடு தனது ஊழியர்களையும் மற்றும் மூலதன வளங்களைப் பயன்படுத்தி எவ்வளவு சிறப்பாக உற்பத்தி திறனை வெளியிடுகிறது என்பது தான். கடந்த 15 வருடங்களில் இல்லாத வகையில் மொத்த உற்பத்தித்திறன் அளவிடும் TFP குறைந்து வருவது தற்போது சீனா பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது.
உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் பால் க்ரூக்மேன், சீனாவின் இந்த பொருளாதார மந்தநிலைக்கு 2008 உலகளாவிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு கணிசமாக மாறியதையே காரணமாக கூறுகிறார். இதேவேளையில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறையும் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
சீன அரசும், சீன மக்களும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட துறைகளிலிருந்து முதலீட்டை குறைந்த வேலைவாய்ப்பை உருவாக்கும், குறைந்த உற்பத்தி திறன் கொண்ட ரியல் எஸ்டேட் துறைக்கு திருப்பியது மூலம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைத் தடுத்துள்ளது என்று பால் க்ரூக்மேன் கூறுகிறார்.
மேலும், 2022 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் சீன அரசு, அதன் நிதி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாகவும், இதை சரி செய்யும் வரையில் சீனா பொருளாதாரம் நிலையாக வளர்ச்சி அடையும் சூழல் உருவாகாது என தெரிவித்துள்ளது.
இதேபோல் சீனாவின் பொருளாதாரம், உயர் வருமானம் கொண்ட பொருளாதார நாடாக மாறுவதற்கு போராடும் பிற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
இதனால் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உற்பத்தித்திறன் சார்ந்த வளர்ச்சி மூலம் வெற்றிகரமாக மாற்றியமைத்த ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளைப் போலல்லாமல், சீனாவின் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications