அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2ம் தேதியன்று, இந்தியா மற்றும் சீனா உள்பட சுமார் 150 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். குறிப்பாக சீனா பொருட்களுக்கு 54 சதவீதம் வரி விதித்தார். இதனையடுத்து வாரம் சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு பொருட்களுக்கு 34 சதவீதம் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக டிரம்ப் நிர்வாகம், சீன பொருட்களுக்கு 104 சதவீதம் வரி விதித்தது.
ஆனால் கொஞ்சமும் அசராத சீனாவோ, அமெரிக்க பொருட்களுக்கு மீதான வரியை 84 சதவீதமாக உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் அண்மையில் சீனாவை தவிர இந்தியா உள்பட பிற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். மேலும் சீன பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியதோடு, இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

டிரம்பின் இந்த நடவடிக்கையை சீனாவை திட்டமிட்டே தனிமைப்படுத்தியுள்ளதை வெளிப்படுத்துகிறது. அதேசமயம், சீனா தனது தொலைத்தொடர்பு தாக்குதல் மூலம், டிரம்பின் வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க மக்களே திசை திருப்பும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டிரம்பின் ஆக்ரோஷமான வர்த்தக கொள்கைகளுக்கான விலையை வெளிநாடுகள் அல்ல, சாமானிய அமெரிக்கர்களே ஏற்க வேண்டியிருக்கும் என்று சீனா எச்சரிக்கிறது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் எக்ஸில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில், அமெரிக்க இறக்குமதியாளர் ஒருவர், டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் அமெரிக்க பொதுமக்களிடம் பேசுகிறார், அப்போது அவர் டிரம்பின் பரஸ்பர வரி, விலைகளை உயர்த்தும் மற்றும் நுகர்வோருக்கு சுமையை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்.
மாவோ நிங் அந்த எக்ஸ் பதிவில், வெளிநாடுகள வரிகளை செலுத்துகின்றனவா? இல்லை- அமெரிக்க வணிக நிறுவனங்கள் வரியை செலுத்துகின்றன, பின்னர் வரியாக செலுத்திய செலவு தொகையை உங்களிடம் (அமெரிக்கர்கள்) வாங்குகின்றன. வரிகள உற்பத்தியை திரும்பக் கொண்டு வருவதில்லை, அவை அமெரிக்கர்கள் மீது ஒரு வரி மட்டுமே என்று பதிவு செய்து இருந்தார்.
இந்த செய்தி மூலம் அமெரிக்க குடிமக்களுடன் தொடர்பு கொள்ளவும், உள்நாட்டு விளைவுகள் இல்லாமல் வெளிநாட்டு பொருளாதாரங்களை குறிவைத்து வரிகள் விதிக்கப்படுகின்றன என்ற கதையை முன்வைக்கவும் சீனாவின் மூலோபாய மாற்றத்தை பிரதிபலிக்கிறது. மேலும் அமெரிக்காவின் சொந்த அரசியல் மரபை பயன்படுத்தி டிரம்பின் பாதுகாப்புவாத நிலைப்பாட்டை சவால் செய்வதற்கான சீனாவின் ஒரு திட்டமிட்ட முயற்சியை குறிக்கிறது.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?



Click it and Unblock the Notifications