சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது டிக்டாக் செயலி. வீடியோவை அடிப்படையாக கொண்ட இந்த சமூகவலைதள செயலிக்கு அமெரிக்காவே அடிமையாகிப் போய் கிடக்கிறது. இதனால் டிக்டாகை முழுமையாக கைவிடவும் முடியாமல் வைத்து கொள்ளவும் முடியாமல் அமெரிக்க அரசு திண்டாடுகிறது.
சீனாவை சேர்ந்த சமூக வலைத்தள செயலியான டிக்டாக் அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது ஆதிக்கம் செலுத்துகிறது . வீடியோவை அடிப்படையாகக் கொண்ட இந்த டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், சிறிது காலம் இந்த தடையை ஒத்தி வைத்திருந்தார்.

இந்த சூழலில் டிக் டாக் செயலி தொடர்ந்து அமெரிக்காவில் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றால் சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் இந்த செயலியின் கட்டுப்பாட்டை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்து விட வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். ஏற்கனவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வரும் நிலையில் சீனா டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்தால் சீனா மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளில் சலுகை தர திட்டமிட்டு இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால் சீன அரசு டொனால்ட் டிரம்பின் இந்த சலுகையை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை சேர்ந்த 4 நிறுவனங்கள் டிக் டாக் நிறுவனத்தை கையகப்படுத்த தயாராக இருக்கின்றன எனக் கூறியிருந்தார். அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்திடம் டிக் டாக்கின் பெரும்பான்மையான பங்குகளை பைட் டான்ஸ் நிறுவனம் விற்பனை செய்து விட வேண்டும் அல்லது அமெரிக்காவில் இந்த செயலி முழுமையாக தடை செய்யப்பட்டு விடும் என டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
சீனா அரசு டிக் டாக் செயலியின் மூலம் அமெரிக்கர்களை உளவு பார்ப்பதாகவும், பொது மக்களின் கருத்துக்களை மாற்றியமைக்க திட்டமிடுவதாகவும் அமெரிக்க அரசும் உளவு அமைப்புகளும் சந்தேகப்படுகின்றன. இதனாலேயே டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க பல முறை நடவடிக்கை எடுத்தது. பைடன் நிர்வாகம் இதற்காக சட்டமியற்றி அமெரிக்காவில் 2025, ஜனவரி 19ஆம் தேதிக்கு பிறகு டிக் டாக் செயலி செயல்படாது என தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து அமெரிக்காவில் செல்போன்களில் பிளே ஸ்டோர்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்பட்டது. இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற உடனேயே இந்த தடையை சிறிது காலம் ஒத்தி வைப்பதாக கூறினார். அதாவது இந்த தடையை ஏப்ரல் 5ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்திருந்தார். அதுவரை அமெரிக்காவில் வழக்கம் போல டிக் டாக் செயலி இயங்கும் என அவர் அப்போது கூறினார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்ட் டிரம்ப், சீனா டிக் டாக் செயலி தொடர்பாக பாசிட்டிவான முடிவை வழங்கினால் அவர்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரியை சற்றே குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்திருந்தார். இதற்காக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 5ஆம் தேதி உடன் இந்த தடை நீட்டிப்பு காலம் முடிவடைவதால் டொனால்ட் டிரம்ப் மேலும் அதனை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சீன அரசு டிக் டாக் தொடர்பான டிரம்ப்பின் சலுகையை ஏற்க மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீன வெளியுறவு துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிக் டாக் செயலி பொறுத்தவரை நாங்கள் எங்களுடைய முந்தை நிலைபாட்டில் தீர்மானமாக இருக்கிறோம் என கூறியுள்ளது. அமெரிக்கா எங்கள் நாட்டு பொருட்கள் மீது இறக்குமதி வரியை அதிகரித்தால் நாங்கள் அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவோம் என தெரிவித்துள்ளது.
டிரம்ப் அதிபராக முதன்முறை பதவி வகித்த போது அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் அப்போது அவரால் அதனை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தான் தன்னுடைய இரண்டாவது பதவி காலத்தில் டிக் டாக் செயலிக்கு முழுமையாக தடை விதிக்காமல் அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்து விடுங்கள் என சீனாவுக்கு வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் சீன அரசும் பைட் டான்ஸ் நிறுவனமும் டிக்டாக் செயலியை யாரிடமும் விற்பனை செய்ய மாட்டோம் என்பதில் திட்டவட்டமாக இருப்பதால் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்காவில் டிக் டாக் செயலி இயங்குமா இயங்காதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே பல்வேறு மாநிலங்களிலும் ஏற்கனவே டிக் டாக் செயலி செயல்படவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவில் ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனமான பெர்பிளெக்ஸிட்டி டிக் டாக் செயலி வாங்குவதில் ஆர்வம் காட்டியது. இந்த தொடர்பாக தங்களுடைய ப்ளாக் பக்கத்திலும் எழுதி இருந்தது. எங்களுடைய தேடுபொறி மற்றும் டிக் டாக்கின் மிகப்பெரிய இந்த வீடியோ நூலகம் அமெரிக்க பயனர்களுக்கு உலகிலேயே மிகச்சிறந்த தேர்தல் அனுபவத்தை வழங்கும் என அந்த நிறுவனம் கூறியிருந்தது.
ஆனால் டிக் டாக் தரப்பிலிருந்து இதற்கு எந்த ஒரு பாசிட்டிவான பதிலும் வழங்கப்படவில்லை. மைக்ரோசாப்ட் கூட டிக் டாக் செய்தியை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
டிக்டாக் அமெரிக்காவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளதே அமெரிக்க நிறுவனங்கள் இதனை வாங்க போட்டி போட காரணம். அதே காரணத்தால் தான் சீனாவின் பை டான்ஸும் இதனை விற்பனை செய்ய மறுக்கிறது. டிரம்பும் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க சீனாவை எப்படியாவது சம்மதிக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறார். இறக்குமதி வரியை குறைப்பதாக சீனாவுக்கு ஆசை காட்டி வருகிறார். ஆனால் சீனாவோ அதற்கு அடிபணிய மாட்டேன் என்கிறது.
டிக்டாக் செயலி இந்தியாவிலும் புகழ்பெற்ற செயலியாக தான் இருந்தது. ஆனால் சீனாவை சேர்ந்த சில செயலிகள் இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி 2020ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு தடை விதித்து விட்டது. ஈரான், ஆப்கானிஸ்தான், சோமாலியா , நேபாளம் ஆகிய நாடுகளும் இந்த செயலியை தடை செய்து விட்டன.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications