அமெரிக்கா சீனா இடையில் வரலாறு காணாத வர்த்தகப் போர் நடந்து வருவது எல்லோருக்கும் தெரியும். இந்த வர்த்தகப் போரின் காரணமாகச் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் மிகப்பெரிய அளவிலான பாதிப்பு சந்தித்துள்ளது, இது அமெரிக்காவின் நாணயத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது. இருப்பினும் சீனா துவண்டுவிடாமல் அமெரிக்காவிற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராகச் சீனா புதிதாக 3-5-2 திட்டத்தைத் தீட்டியுள்ளது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா அதிபர் அல்லாமல் அமெரிக்க நிறுவனங்களும் காண்டாகியுள்ளது.
சீன அரசு உத்தரவு
சீன அரசு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை அமைப்பு, அலுவலகங்களில் பயன்படுத்தி வரும் வெளிநாட்டு கம்பியூட்டர் உபகரணங்கள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்துவதை அடுத்த 3 வருடத்திற்குள் நிறுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
3 வருட திட்டம்
வெளிநாட்டு கம்பியூட்டர் உபகரணங்கள் மற்றும் மென்பொருளை 30 சதவீத சீன தயாரிப்புகளாக 2020ஆம் ஆண்டுக்குள் மாற்ற வேண்டும், இதைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமும், 2022ஆம் ஆண்டுக்குள் 20 சதவீதம் என 3 வருடத்திற்கும் மொத்த 3 வருடத்திள்மொத்த அமெரிக்கக் கருவிகள் மற்றும் சேவைகளையும் மாற்ற வேண்டும் எனச் சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தைத் தான் 3-5-2 திட்டம் என அழைக்கிறது.
கிட்டத்தட்ட 30 மில்லியன் கருவிகள் உள்ளது. இந்த மாற்றம் அரசு அலுவலகங்களில் மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் இது மக்கள் மத்தியிலான பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிப்பு
சீன அரசின் இந்த அறிவிப்பு அமெரிக்க நிறுவனங்களான ஹெச்பி, டெல், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்க அரசு சீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவித்ததைப் போல் சீனாவும் அமெரிக்காவிற்கு எதிராக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகப் போர் தற்போது தொழில்நுட்ப போராக மாறியுள்ளது என்றால் மிகையில்லை.
டிரம்ப் டிவீட்
இது ஒருபக்கம் இருக்க, மறுபுறம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டரில், சீனாவிற்கு ஏன் உலக வங்கிக் கடன் கொடுக்கிறது? இது நடக்கலாமா..? சீனாவிடம் நிறை பணம் இருக்கிறது. இப்படி இல்லையெனில் அவர்களே அச்சிட்டுக்கொள்ளட்டும். கடன் கொடுப்பதை நிறுத்துங்கள். என டிவீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications