உற்பத்தியிலும், தொழில்நுட்பத்திலும் முடி சூடா மன்னாக இருக்கும் சீனா பல துறையில் இருந்தாலும், விமான தயார்ப்பில் இதுவரையில் இல்லாமல் இருந்தது. சீனா போர் விமானங்களை சொந்தமாக தயாரித்தாலும் இதுவரையில் பயணிகள் விமான துறையில் களமிறங்காமலேயே இருந்தது.
பயணிகள் விமான போக்குவரத்து சந்தையில் சீனா மிகப்பெரிய சந்தையை கொண்டு இருக்கும் வேளையில் இத்துறையில் சீன நிறுவனம் இல்லாமல் இருப்பதும், தொடர்ந்து ஐரோப்பாவின் ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவின் போயிங் விமானங்களையே வாங்கி பயன்படுத்தி வந்தது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என 2008ல் சீனா C919 என்ற பெயரில் விமானத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தது. இந்த திட்டத்தில் பல தடைகள், பல சோதனைகளை தாண்டி தற்போது 160 பயணிகள் உடன் ஷாங்காய் முதல் பெய்ஜிங் வரையில் சுமார் 2 மணிநேரம் 25 நிமிடம் முதல் முறையாக வர்த்தக ரீதியாக பறந்து புதிய சாகாப்தம் படைத்துள்ளது சீனா.
அடுத்த 10 -15 வருடத்தில் ஐரோப்பாவின் ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவின் போயிங் நிறுவனங்களுக்கு இணையாக உலக நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்யலாம்.
சீனா அரசின் ஏரோஸ்பேஸ் நிறுவனமான Commercial Aircraft Corporation of China உருவாக்கிய விமானம் தான் இந்த C919, 2008 உருவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ் 2017ல் இந்த விமான முதல் சோதனை ஓட்டத்தை செய்தது. இதை தொடர்ந்து பல சோதனைகளை செய்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சீனா சிவில் ஏவியேஷன் நிர்வாகம் இந்த விமானத்தை விற்பனை செய்யவும், மக்களை ஏற்றி பறக்கவும் தகுந்தது என ஒப்புதல் அளித்து சான்றிதழ் வழங்கியது.
இந்த நிலையில் முதல் C919 விமானத்தை சீன அரசு விமான போக்குவரத்து சேவை நிறுவனமான China Eastern Airlines-க்கு விற்பனை செய்தது. இந்த விமானத்தில் தான் ஞாயிற்றுக்கிழமை 160 விமானங்கள் உடன் ஷாங்காய் முதல் பெய்ஜிங் வரையில் முதல் வர்த்தக ரீதியான பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்தது.

C919 விமானம் அனைத்து தட்டபவெப்ப நிலையிலும் பயணித்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதைவிட முக்கியமாக பயணிகள் விமானத்தின் முக்கிய சோதனையான 100 மணிநேர பயண சோதனைகளையும் முடித்துள்ளது.
டிசம்பர் 9 ஆம் தேதி முதல் C919 விமானத்தை China Eastern Airlines-க்கு டெலிவரி கொடுக்கப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டு முடிவில் சுமார் 32 வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமாக் 1035 விமானங்களுக்கன ஆர்டர் குவிந்துள்ளது.

இதன் மூலம் பயணிகள் விமான போக்குவரத்து சந்தையில் சீனா புதிய புரட்சியை செய்யப்போகிறது. இதுமட்டும் அல்லாமல் சீனாவின் வருகை போயிங், ஏர்பஸ் மட்டுமே உலக நாடுகள் நம்பியிருக்கும் நிலை மாறும்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications