சீனாவில் பல பகுதிகளில் மீண்டும் தலையெடுக்கும் கொரோனா தொற்று, அமெரிக்கா உடனான பிரச்சனை, இந்தியா உட்படப் பல நாடுகளில் சீன நிறுவனங்களும், சீன பொருட்களுக்கும் தடை எனப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் இந்தச் சூழ்நிலையிலும் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி நவம்பர் மாதம் 3 வருட உச்சத்தை அடைந்துள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பில் இருந்து கிட்டத்தட்ட 90 சதவீதம் மீண்டுள்ள சீனாவின் PMI குறியீடு நவம்பர் மாதம் 52.1 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது அக்டோபர் மாதம் 51.4 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பர் மாதம் சீன தொழிற்துறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி செப்டம்பர் 2017ஆம் ஆண்டு அடைந்த அளவீடாகும்.
சீன தொழிற்துறை
சீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தொழிற்துறை உற்பத்தி தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தால் பல துறைகள் இன்னும் மீண்டு வர முடியாமல் தவித்து வந்தாலும் தொழிற்துறை உற்பத்தி அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி
கடந்த 2 மாதமாக சீனாவில் பல இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் சீன அரசு பெரிய அளவில் கொரோனா பரிசோதனை செய்து சிறப்பான முறையில் கட்டுப்படுத்தி வருகிறது. புதிய கொரோன தொற்றுக் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்றுமதி அளவீடுகள் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்ட போதிலும் சிறப்பான வர்த்தகத்தை அடைந்து வருகிறது சீனா.
அரசு நிறுவனங்கள்
சீனாவின் உற்பத்தித் துறை Purchasing Manager's Index குறியீட்டில் பெரிய தொழிற்துறை நிறுவனங்களையும், சீன அரசின் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதோடு புதிய ஏற்றுமதி அளவீடுகள் 51.0 புள்ளிகளில் இருந்து 51.5 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இதேபோல் சிறு உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி அளவீடுகள் 49.4 புள்ளிகளில் இருந்து நவம்பர் மாதத்தில் 50.1 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
ஈகாமர்ஸ்
மேலும் சீனாவில் நவம்பர் மாதம் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அறிவித்த பல் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தின் மூலம் சீனாவில் நுகர்வோர் சந்தை வர்த்தகம் மிகவும் சிறப்பான வளர்ச்சியை அடைந்தது.
இதனால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகளவிலான வர்த்தகம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கட்டுமானம்
இதேபோல் சீனாவில் கட்டுமானமான துறை பணிகள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இயங்கும் காரணத்தால் அக்டோபர் மாதத்தில் 59.8 புள்ளிகளாக இருந்த construction activity நவம்பர் மாதத்தில் 60.5 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இந்தியா
செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முக்கியமான 8 உற்பத்தித் துறையில் கச்சா எண்ணெய் துறை மற்றும் அதைச் சார்ந்துள்ள துறைகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்துள்ளது.
- நிலக்கரி: 11.6 சதவீதம்
- கச்சா எண்ணெய்: - 6.2 சதவீதம்
- இயற்கை எரிவாயு: - 8.6 சதவீதம்
- சுத்திகரிப்புப் பொருட்கள்: - 17.0 சதவீதம்
- உரங்கள்: 6.3 சதவீதம்
- எஃகு: - 2.7 சதவீதம்
- சிமென்ட்: 2.8 சதவீதம்
- மின்சாரம்: 10.5 சதவீதம்
உற்பத்தித் துறை
செப்டம்பர் காலாண்டில் நாட்டின் விவசாயத் துறை 3 சதவீத வளர்ச்சியும், உற்பத்தித் துறை 0.6 சதவீத வளர்ச்சியும் அடைந்திருக்கும் இதேவேளையில், சேவைத் துறையில் வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்துத் துறைகள் ஏப்ரல் - ஜூன் காலாண்டை விடவும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications