அமெரிக்காவுக்கு நெத்தியடி.. சீனா-வின் புதிய K VISA.. "அதே டெய்லர் அதே வாடகை..!!" ஆடிப்போன டிரம்ப்..!!

உலகளவில் பல பொருளாதார அறிஞர்கள் அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஆயுதமாக பார்ப்பது, ஹெச்1பி விசாவை தான். அமெரிக்காவின் மேம்பட்ட வாழ்க்கை, அதிகப்படியான சம்பளம் ஆகியவற்றின் ஈர்ப்பால் உலகலாவிய திறன்வாய்ந்த ஊழியர்கள் அமெரிக்காவுக்கு படையெடுக்கின்றனர்.

இதனாலேயே அமெரிக்க பல துறையில் முன்னோடியாக உள்ளது குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து துறையிலும் அமெரிக்கர்களை காட்டிலும் வெளிநாட்டவர்கள் தான் பெரும் ஆதிக்கம் செய்து வருகின்றனர். கூகுள் துவங்கி என்விடியா வரையில் வெளிநாட்டவர்கள் உருவாக்கிய அமெரிக்க சாம்ராஜ்ஜியம் தான் தற்போது உலகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

அமெரிக்காவுக்கு நெத்தியடி.. சீனா-வின் புதிய K VISA..

இதை மறந்து விட்டு டிரம்ப் அமெரிக்காவின் H-1B விசா திட்டத்தில் புதிய கட்டணத்தை விதித்து இளம் ஊழியர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவுடன் அனைத்து துறையிலும் போட்டிப்போட்டு வரும் சீனா ஹெச்1பி விசா போலவே புதிய விசா-வை அறிமுகம் செய்து அமெரிக்காவுக்கு நெத்தியடி கொடுத்துள்ளது.

சீனா ஏற்கனவே பல துறையில் அமெரிக்காவுக்கு இணையாக போட்டிப்போட்டு வரும் வேளையில், தற்போது அமெரிக்காவை போலவே உலக நாடுகளில் இருக்கும் திறன்வாய்ந்த ஊழியர்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஹெச்1பி விசா மீது 100000 டாலர் கட்டணம் விதிக்கப்பட்ட பின்பு கே விசா திட்டத்தில் சீனா தீவிரமாக உள்ளது.

சீனா அதன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்தும் நோக்கத்தில், 'K விசா' என்ற புதிய விசா வகையை அறிமுகப்படுத்துகிறது.

அமெரிக்காவுக்கு நெத்தியடி.. சீனா-வின் புதிய K VISA..

இது அக்டோபர் 1, 2025 அன்று அமலுக்கு வரும், இதன் மூலம் சீனா உலகின் இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களை தன்னாட்டில் பணியில் அமர்த்தி வேகமாக வளர்ச்சி அடைய முடிவு செய்துள்ளது.

சீன அரசின் சமூக ஊடக நிறுவனமான சின்ஹுவா அறிக்கையின்படி, இந்த விசா உலகெங்கிலும் உள்ள தகுதியான இளம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும். இது சீனாவின் 'அடுத்த தலைமுறை' அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கும் உத்தியாகக் கருதப்படுகிறது, இதன் மூலம் சீனாவின் இன்னோவேஷன் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். இதேபோல் அமெரிக்காவை ஓரம்கட்ட கே விசா புதிய ஆயுதமாக செயல்படலாம்.

K விசாவின் அறிமுகம்:
சீனாவின் புதிய K விசா, அமெரிக்காவின் H-1B போன்ற திட்டங்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் மற்ற விசாக்களை காட்டிலும் இளம் தொழிலாளர்களுக்கு அதிகப்படியான சுதந்திரம் அளிக்கிறது. 2025 ஜூலை 16 அன்று சீன அரசின் இந்த கே விசா-வை அங்கீகரிக்கப்பட்டது.

இந்த விசா பெற சீனாவின் உள்நாட்டு ஊழியர் அல்லது நிறுவனத்தின் அழைப்பிதழ் இல்லாமல் விண்ணப்பிக்கலாம், இது விசா செயல்முறையை எளிமையாக்குகிறது. சீனா உலகின் பல்வேறு துறைகளிலிருந்து திறமையாளர்களை வரவேற்கிறது என்பதை காட்டும் முயற்சி தான் இந்த கே விசா.

K விசாவுக்கு தகுதி:
K விசாவுக்கு விண்ணப்பிக்கும் தகுதியானவர்கள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியல் அல்லது கணிதம் (STEM) துறைகளில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்த இளம் பட்டதாரிகள் மற்றும் ஊழியர்களாக இருக்க வேண்டும்.

சீன நீதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சீனாவிலோ வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து STEM துறைகளில் பட்டம் பெற்ற இளம் ஊழியர்கள் இந்த விசா பெற தகுதியானவர்கள். இவர்களின் வயது, கல்வி பின்னணி அல்லது வேலை அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+