சீனாவின் உற்பத்தி சரிவானது இந்தியாவுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும். இது உலக சந்தையில் இந்தியா தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் என்று உதய் கோட்டக் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் என்பது பரவலாக இருந்து வருகின்றது.
சில தினங்களுக்கு முன்பு சீனாவின் கட்டுபாடுகளால் கலவரம் வெடித்த நிலையில், சீன அரசு லாக்டவுனில் தளர்வுகளை அறிவித்தது.
அதிகரிக்கும் கொரோனா
ஆனால் இத்தகைய தளர்வுகளுக்கு மத்தியில் புதிய கொரோனா வழக்குகள் கணிசமாக அதிகரித்தது வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுகிழமையன்று பல கடைகள் என பலவும், மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தியாவுக்கு பலன் தான்
சீனாவில் நிலவி வரும் இத்தகைய கட்டுப்பாடுகள் அந்த நாட்டு தொழில்துறையில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்போது அது இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். சீனா உற்பத்தி குறையும்போது அது இந்தியாவில் உற்பத்தியினை அதிகரிக்க வழிவகுக்கும் எனவும், இது சர்வதேச சந்தையில் இந்தியா தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும் உதவும் என தெரிவித்துள்ளார்.
இழந்த இடத்தை பிடிக்க இது சரியான வாய்ப்பு
CIIயின் கூட்டத்தில் இது குறித்து பேசிய உதய் கோட்டக், உலக உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகள் (சீனா), அதனை சரியாக செய்யாததால், அது மற்ற நாடுகளுக்கு பலனாக அமையும் என கூறியுள்ளார்.
இந்தியாவில் உற்பத்தியினை தவற விட்டு விட்டோம், ஆக சேவையில் ஆவது கவனம் செலுத்த வேண்டும் என பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் சீனா தற்போது எதிர்கொண்டு வரும் சிக்கல்கள், இந்தியாவின் இழந்த இடத்தினை பிடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பினை கொடுத்துள்ளது.
இது சரியான சான்ஸ்
இந்தியா அரசும் நிறுவனங்களும் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும். முதலீட்டாளர்களை கவர வேண்டும். வணிகம் செய்வதை எளிதாக்க வேண்டும். இது சர்வதேச சந்தையில் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பு. ஆக இதனை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சீனா சரிவு
இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தியானது ஜிடிபியில் 16% உள்ளது. இது 20% ஆக அதிகரிக்க வேண்டும்.
சீனாவில் கடந்த இரண்டு மாதங்களவே அதன் உற்பத்தி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் 49. 2 ஆக இருந்த உற்பத்தி விகிதமானது, நவம்பரில் 48 ஆக சரிவினைக் கண்டது. இது கடந்த பிப்ரவரி 2020-க்கு பிறகு மோசமான சரிவினைக் கண்டுள்ளது.
ஏற்றுமதி சரிவு
சீனாவின் ஏற்றுமதி விகிதமானது நவம்பர் மாதத்தில் 8.7% சரிவினைக் கண்டுள்ளது. இந்த விகிதமும் பிப்ரவரி 2020- க்கு பிறகு மோசமான அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், சர்வதேச அளவில் மந்த நிலை இருந்து வருகின்றது. இதன் காரணமாக சர்வதேச பொருளாதாரம் என்பது அழுத்தத்தில் காணப்படுகிறது.
இந்திய பொருளாதாரம்
பல நாடுகளும் எரிபொருள் விலையேற்றத்தால் பெரும் பிரச்சனையயை எதிர்கொண்டுள்ளன. சர்வதேச அரசியல் பதற்றம் என்பது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இந்திய பொருளாதாரத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஆக அதனை தக்கவைத்துக் கொள்ள இந்தியாவுக்கு இது சரியான நேரம். இதனை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நிபுணர்களின் பார்வையாக உள்ளது.


Click it and Unblock the Notifications