சீனாவின் முக்கிய ஏற்றுமதி நகரில் கொரோனா தொற்று.. 4 மாத சரிவில் உற்பத்தி..!

கொரோனா தொற்றில் இருந்து வேகமாக மீண்டு வந்த சீன உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து பொருளாதாரத்தில் உலகளவில் உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில், ஜூன் மாதம் உற்பத்தி பொருட்களுக்கான மூலப் பொருட்களின் விலை உயர்வு, செமிகன்டெக்டர் தட்டுப்பாடு, Guangdong பகுதியில் உருவான கொரோனா தொற்று ஆகியவை ஜூன் மாதத்தில் இந்நிறுவனத்தின் உற்பத்தி பெரிய அளவில் பாதித்துள்ளது.

சீனா உற்பத்தி

சீனா உற்பத்தி

சீனா உற்பத்தி பிஎம்ஐ அளவீடு மே மாதம் 51.0 புள்ளிகளாக இருந்த நிலையில், ஜூன் மாதம் 50.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது எனச் சீனாவின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உற்பத்தி பிஎம்ஐ அளவீடு

உற்பத்தி பிஎம்ஐ அளவீடு

ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் இந்த உற்பத்தி பிஎம்ஐ அளவீடு 50 புள்ளிகளுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் உற்பத்தி சரிந்து வருவதாகப் பொருள், ஜூன் மாத அளவீடுகளைப் பார்க்கும் போது 50.9 புள்ளிகள் என்பது மிகவும் குறைவான அளவீடு. இது எப்போது வேண்டுமானாலும் சரிவு பாதைக்குத் திரும்பலாம்.

Guangdong பகுதி

Guangdong பகுதி

மேலும் சீனா-வின் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஏற்றுமதி வர்த்தகத்தில் இருக்கும் நிலையில் சீனாவின் மிக முக்கியமான ஏற்றுமதி நகரமான Guangdong பகுதியில் கொரோனா தொற்றுப் புதிதாக உருவாகியுள்ளதாலும், சீனாவில் சில பகுதியில் தற்போது உலகையே அச்சுறுத்தும் டெல்டா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு

கொரோனா கட்டுப்பாடு

சீனா கொரோனா கட்டுப்பாட்டில் கடுமையான நடவடிக்கை ஆரம்பம் முதலே எடுத்து வருகிறது. இதன் வாயிலாக ஏற்றுமதி நகரமான Guangdong பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள காரணத்தால் அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி

இதனால் Guangdong பகுதியில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவே தற்போது ஜூன் மாதத்தின் உற்பத்தி அளவீடு 50.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இதோடு சீனாவில் சில பகுதிகளில் வெள்ளம் வந்துள்ள காரணத்தால் வர்த்தகமும் பாதித்துள்ளது.

பெரிய மற்றும் அரசு உற்பத்தி நிறுவனங்கள்

பெரிய மற்றும் அரசு உற்பத்தி நிறுவனங்கள்

மேலும் சீனாவின் பிஎம்ஐ குறியீடு பிற நாடுகளைப் போல் அல்லாமல் பெரிய மற்றும் அரசு உற்பத்தி நிறுவனங்களை உற்பத்தி அளவீட்டை மையமாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் உற்பத்தி பிஎம்ஐ குறியீடு 50.9 புள்ளிக்காகச் சரிந்து 4 மாத சரிவைப் பதிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+