ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆன்லைன் விற்பனையானது, முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், மொத்த விற்பனையில் கிட்டதட்ட பாதிக்கும் மேல் ஆன்லைன் விற்பனை என்கிறது ஒரு அறிக்கை.
அதிலும் இந்த கொரோனாவிற்கு பின்பு நுகர்வோரின் மொத்த ஷாப்பிங் செய்யும் திறனே மாறியுள்ளது எனலாம். ஏனெனில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், மக்கள் வீடுகளை விட்டே அனாவசியமாக வெளியே வர வேண்டாம் என யோசிக்கின்றனர்.
இதனாலேயே தற்போது பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறி வருகின்றனர். இதனாலேயே ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் கல்லா கட்டி வருகின்றன.
ஸ்மார்ட்போன் சந்தை
தற்போது நுகர்வோரின் இத்தகைய மாற்றத்தினால் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் நிறுவனங்கள், இந்தியாவில் முளைத்து வருகின்றன. சொல்லப்போனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜூன் காலாண்டில் 43% ஆன்லைன் விற்பனை தான். 47% சந்தை பங்கினை கொண்ட அமேசான் தான் ஒட்டுமொத்த ஆன்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையின் தளமாகவும் இருந்துள்ளது.
பிளிப்கார்ட் விற்பனை
இதே பிளிப்கார்ட் நிறுவனமானது தனது விற்பனையில் 50% செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமேசானுக்கு பிறகு பிளிப்கார்ட், சியோமியின் ஆன்லைன் வியாபாரம் களை கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் விற்பனை முறையே 42% மற்றும் 10% ஆக உள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
ஜியோமி தான் டாப்
ஜூன் காலாண்டில் ஜியோமின் ரெட்மி 8A டூயல் ஸ்மார்ட்போன் தான் அதிக விற்பனையை செய்துள்ளதாகவும் தரவுகள் சொல்கின்றன. ஆன்லைனில் முதல் 10 ஸ்மார்ட்போன்களில் ஆறு ஸ்மார்ட்போன்கள் ஜியோமியை சேர்ந்தவையாகும். மற்ற மூன்றும் சாம்சங் நிறுவனத்திற்கு உடையதாகும்.
ஜியோமி முதலிடம்
என்ன தான் சீன பொருட்கள் வேண்டாம் என்ற பரப்புரைகள் இருந்து வந்தாலும், ஆன்லைன் சந்தையினை பொறுத்தவரையில் மீண்டும் ஜியோமி முதலிடத்தில் 44% சந்தை பங்கினைக் கொண்டுள்ளது. இது முந்தைய ஆண்டிலும் இதே 44% சந்தை பங்கினைக் கொண்டுள்ளது. எனினும் ஜூன் காலாண்டில் நல்ல வளர்ச்சி கண்ட பிராண்டுகளில் சாம்சங் உள்ளது. முடிவடந்த ஜூன் காலாண்டில் 25% பங்கினை கொடுள்ளது. இது முந்தைய ஆண்டில் 11% பங்கினைக் கொண்டுள்ளது.
ஆஃப்லைனில் வீழ்ச்சி
ஜியோமியை பொறுத்த வரையில் ஆன்லைன் விற்பனையானது 46% ஆக அதிகரித்து இருந்தாலும், ஆஃப்லைன் விற்பனையில் 54% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கொரோனாவின் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மார்ச் மாத இறுதியில் தொடங்கிய கொரோனாவின் தாக்கம், ஏப்ரல் உள்ளிட்ட மாதங்களில் மொத்தமாக இல்லாமல் போனது.
லாக்டவுனால் பாதிப்பு
ஈகாமர்ஸ் நிறுவனங்களும் டெலிவரி செய்ய முடியாமல் தவித்து வந்தன. எனினும் தற்போது லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், இனி தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்களில் விற்பனையை அதிகரிக்க பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இதனை தற்போது இன்னும் பிரச்சனையை அதிகரிக்கும் விதமாக, சீனா இந்திய பிரச்சனையும் வந்துள்ளது. இனி என்னவாகுமோ?
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications