1.5 கோடி வாடிக்கையாளர் இழப்பு.. ஆடிப்போன சீனா..!'

கொரோனா வைரசால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட சீனா தற்போது அதிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. சீனாவில் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் கொரோனா பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது யாராலும் மறக்க முடியாது, குறிப்பாகத் தொழிற்துறை, சேவைத் துறை ஆகியவற்றில். சீனாவில் உற்பத்தி பாதிப்பு ஒட்டுமொத்த உலகையும் பாதித்தது என்றால் மிகையில்லை.

கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்த காலத்தில் சீன டெலிகாம் துறையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளனர். இது வரலாறு காணாத வாடிக்கையாளர் இழப்பு சீன டெலிகாம் துறையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.

சீனா டெலிகாம் துறை

சீனா டெலிகாம் துறை

டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றியுள்ளனர். சீனா டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை எப்போதும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும் ஆனால் முதல் முறையாகச் சரிவைச் சந்தித்துச் சீன டெலிகாம் சந்தையைப் பயமுறுத்தியுள்ளது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

சீனாவில் மட்டுமல்லாமல் உலகளவில் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாகத் திகழும் சைனா மொபைல் லிமிடெட் நிறுவனத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத காலத்தில் மட்டும் சுமார் 80 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

சைனா டெலிகாம் கார்ப் என்னும் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் 56 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதேபோல் சீனா யூனிகார்ன் ஹாங்காங் லிமிடெட் ஜனவரி மாதத்தில் 12 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

டெலிகாம் சந்தை

டெலிகாம் சந்தை

கொரோனாவின் காரணமாகச் சீன டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர்கள் குறைந்தது மட்டும் அல்லாமல் வருவாயும் அதிகளவில் குறைந்துள்ளது. ஆனால் அடுத்தச் சில மாதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் குறைந்தது 3 மாத காலம் ஆகும் எனக் கூறப்படுகிறது.

என்ன காரணம்..?

என்ன காரணம்..?


பொதுவாகச் சீனாவில் வெளியூர்களில் பணியாற்றும் மக்கள், சொந்த ஊர் பகுதியை சேர்ந்த ஒரு எண்ணையும், வேலைக்குச் செல்லும் பகுதியைச் சேர்ந்த ஒரு எண் என 2 இணைப்பை வைத்திருப்பார்கள்.

சீனா புத்தாண்டின் போது தான் கொரோனா தனது கொடூரத்தை ஆரம்பித்தது. இதே நேரத்தில் தான் வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊருக்கு நீண்ட விடுமுறையின் காரணமாகச் சென்றனர். அப்போது சீன அரசு மக்களை வீட்டிலேயே தங்கும் படி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் மக்கள் வேலைக்குச் செல்லும் பகுதியைச் சேர்ந்த எண்ணை ரத்து செய்துவிட்டனர்.

இதன் காரணமாகத் தான் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்ததன் எதிரொலியாகச் சீன டெலிகாம் நிறுவனங்களின் பங்கு மதிப்பு சீன பங்குச்சந்தையில் தொடர்ந்து சரிந்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+