பிளிப்கார்டில் ரூ.2060 கோடி முதலீடு செய்த சீன நிறுவனம்.. உண்மையா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்டு நிறுவனத்தில் சீனா நிறுவனம் ஒன்று மிகப்பெரியளவில் முதலீட்டினை செய்துள்ளது.

அது என்ன நிறுவனம்? எவ்வளவு முதலீடு செய்துள்ளது? எதற்காக இந்த நிதி திரப்பட்டுள்ளது. மற்ற முக்கிய காரணிகள் என்ன? இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனம் சீன நிறுவனத்தின் முதலீடு எதற்காக? இதனால் மற்ற போட்டி நிறுவனங்களுக்கு என்ன பிரச்சனை வாருங்கள் பார்ப்போம்.

ஒரே கல்லில் 2 மாங்காய்.. ரஷ்யாவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க தயாராகும் இலங்கை..! ஒரே கல்லில் 2 மாங்காய்.. ரஷ்யாவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க தயாராகும் இலங்கை..!

சீனா நிறுவனத்திற்கு விற்பனை

சீனா நிறுவனத்திற்கு விற்பனை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை சீனாவின் முன்னணி டெக் நிறுவனமான டென்சென்ட் (Tencent) வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது 2060 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிள்ளது. இது குறித்து வெளியான தகவலின் படி, 264 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை, பிளிப்கார்டின் துணை நிறுவனர் பின்னி பன்சால் டென்சண்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடும் அதிர்ச்சி

கடும் அதிர்ச்சி

சீனா நிறுவனங்களின் முதலீடுகளை இந்தியா தடை செய்து வரும் நிலையில், பிளிப்கார்டில் சீன நிறுவனம் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் பிளிப்கார்டு நிறுவனம் சிங்கப்பூரினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் அமெரிக்காவினை சேர்ந்த வால்மார்ட்டின் கட்டுப்பாட்டில் இயங்கியும் வருகின்றது.

எது உண்மை?
 

எது உண்மை?

இதில் கவனிக்கதக்க மற்றொரு விஷயம் என்னவெனில், 2021ம் ஆண்டில் அக்டோபர் 26ம் தேதியே பின்னி பன்சாலிடம் இருந்து வாங்கியதாக ஆவணங்கள் கூறுகின்றன. இதில் டென்சென்ட் நிறுவனம் நேரடியாக பங்கினை வாங்காமல், தனது ஐரோப்பிய பிரிவான டென்சென்ட் கிளவுட் யூரோப் வாயிலாக பங்குகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

நிறுவனத்தின் மதிப்பு

நிறுவனத்தின் மதிப்பு

இந்த பங்கு விற்பனைக்கு பிறகு டென்சென்ட் வசம் 0.72% பிளிப்கார்டின் பங்குகள் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 264 மில்லியன் டாலராகும். பிளிப்கார்டின் மதிப்பானது கடந்த ஜூலை 2021 நிலவரப்படி 37.6 பில்லியன் டாலாராகும். இது கடைசியாக பத்திரங்கள் சிபிபி முதலீடு என பல முதலீட்டாளர்களிடம் இருந்து 3.6 பில்லியன் டாலர் முதலீட்டினை திரட்டிய நிலையில் நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது.

இப்படியும் ஒரு விஷயம் இருக்கா?

இப்படியும் ஒரு விஷயம் இருக்கா?

இந்தியா அரசு, தனது எல்லையோர நாடுகள் அனுமதி பெற்று தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுள்ள நிலையில், சீன நிறுவனம் அதன் ஐரோப்பிய கிளை மூலம் முதலீடு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's technology firm Tencent buys stake worth Rs.2060 crore in Flipkart: check key details

China's leading tech company Tencent has reportedly bought a stake in Flipkart worth Rs 2,060 crore.
Story first published: Sunday, June 12, 2022, 18:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X