இந்தியாவுக்கு நெருக்கடி.. மீண்டும் வேலையை காட்டிய சீனா.. என்ன செய்ய போகிறது மத்திய அரசு?

நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் பாதைகள், சுரங்கப்பாதைகள் , மெட்ரோ ரயில்கள் என பல கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி சிக்கலான உள்கட்டமைப்புகளை உருவாக்க சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் (tunnel boring machine ) கட்டாயம் தேவை. இது சீனாவிடம் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் திடீரென சீனா சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

சீனாவின் வணிக அமைச்சகம் குறிப்பிட்ட வகையிலான சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உபகரணங்கள் மீது புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நவம்பர் 18, முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிகளின் கீழ் வரும் உபகரணங்களை ஏற்றுமதி செய்ய விரும்புவோர் முறையான உரிமங்களை பெற வேண்டும். தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு நெருக்கடி.. மீண்டும் வேலையை காட்டிய சீனா.. என்ன செய்ய போகிறது மத்திய அரசு?

சீனாவிடம் இருந்து அதிகமாக இந்த பொருட்களை இறக்குமதி செய்வது இந்தியா தான். இந்நிலையில் சீனாவின் இந்த திடீர் நடவடிக்கை இந்தியாவுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். மெட்ரோ ரயில், ரயில்வே மற்றும் சுரங்கப்பாதை திட்டங்களை வேகப்படுத்த இந்த இயந்திரங்கள் கட்டாயம் தேவை. மண் மற்றும் பாறைகளை துளையிட்டு நிலத்தடி பாதைகளை உருவாக்க பயன்படும் மிக முக்கியமான இயந்திரங்கள் இவை.

Also Read

சீனாவின் இந்த நடவடிக்கையால் நம் உள்கட்டமைப்பு பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பணிகளும் தாமதமாகும் சூழல் உண்டாகியுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவும் தனது உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. நம் நாட்டில் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் , தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி உபகரணங்களின் உற்பத்தியை ஆதரிக்க 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

Recommended For You

ராய்ட்டர்ஸ் செய்தியின் படி, உத்தேசமாக இந்த திட்டம் அடுத்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பு பிரத்யேக உள்கட்டமைப்பு உபகரணங்களுக்கான உள்நாட்டு திறனை வளர்க்கவும், சீனா போன்ற வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும் உதவும். இருப்பினும், இதன் உண்மையான பலன் என்பது திட்டத்தின் இறுதி வடிவம், அது செயல்படுத்தப்படும் விதம் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் திட்டத்திற்கேற்ற தொழில்நுட்ப தேவைகளை எந்தளவுக்கு பூர்த்தி செய்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+