ஆப்பிள், சாம்சங்-ஐ ஓரம்கட்டத் திட்டமிடும் விவோ.. சாத்தியமா..?!

உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் மிகப்பெரிய வர்த்தக வளர்ச்சி வாய்ப்பை கொண்டு இருக்கும் சந்தையாக இந்தியா விளங்கும் நிலையில் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் கவனம் இந்தியா மீது திரும்பியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே தனக்கான இடத்தை உறுதியாகப் பிடித்துள்ள ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் உடன் போட்டிப்போடச் சீனாவின் விவோ களத்தில் இறங்கியுள்ளது.

விவோ

விவோ

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ. இந்தியாவில் ஆப்பிள் மற்றும் சாம்சங்-கிற்குப் போட்டியாக ப்ரீமியம் போன்கள் பிரிவில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

ப்ரீமியம் போன்கள்

ப்ரீமியம் போன்கள்

Zeiss உடன் இணைந்து தனது ப்ரீமியம் போன்களை உருவாக்கும் விவோ நிறுவனம், கடந்த 12 மாதங்களில் ஆஃப்லைன் பிரிவில் ரூ. 30,000 மற்றும் அதற்கும் அதிகமான விலைப் பிரிவில் சுமார் 300% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டும் அதே வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது விவோ.

300% விற்பனை வளர்ச்சி

300% விற்பனை வளர்ச்சி

பிரீமியம் பிரிவில், சரியான நேரத்தில் சரியான தயாரிப்பை நாங்கள் அறிமுகப்படுத்தியதன் விளைவாக ப்ரீமியம் பிரிவில் 300 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம். இதன் மூலம் புதிய தயாரிப்புகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்யும் திட்டத்தில் உறுதியாக உள்ளோம் என விவோ இந்திய தலைவர் பைகாம் தானிஷ் தெரிவித்துள்ளார்.

ரீடைல் கடைகள்

ரீடைல் கடைகள்

மேலும் விவோ நிறுவனம் ஆப்லைன் அதாவது ரீடைல் கடைகளின் வாயிலாகத் தான் அதிகளவிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. ஆன்லைன் பிரிவு வர்த்தகம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் மிகவும் குறைவான அளவிலான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகம்

ஆன்லைன் வர்த்தகம்

இதன் மூலம் ஆன்லைன் சந்தை வர்த்தகத்தில் முன்னணி நிறுவனங்கள் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த ஆதிக்கத்தின் மூலம் புதிய நிறுவனங்களும், சிறு நிறுவனங்களும் நுழைய முடியாத அளவிற்குத் தற்போது சூழ்நிலை உருவாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+