உலக மக்கள் யாரும் மறக்க முடியாத பகுதியாக சீனா-வின் வுஹான் விளங்குகிறது, கொரோனா தொற்று பாதிப்பை முதன் முதலில் இங்கிருந்த தான் கண்டறியப்பட்டது. சீனாவில் 1 வருடம் முன்பு வரையில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் பெரிய அளவிலான முதலீடுகள், குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்த முதலீடுகள் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் மத்திய சீன பகுதியில் இருக்கும் வுஹான் நகரத்தில் அமெரிக்க நிறுவனமான வால்ட் டிஸ்னி புதிய முதலீடுகளை செய்ய பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது. சமீபத்தில் கொத்துக்கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்த டிஸ்னி அதிக வருவாய் கிடைக்கும் சந்தையில் புதிய முதலீடுகளை செய்ய உள்ளது.

சனிக்கிழமை வெளியான தகவல் படி வுஹான் நகரத்தின் அரசு வணிக நிர்வாக அமைப்பு அமெரிக்க நிறுவனமான வால்ட் டிஸ்னி உடன் புதிய திட்டத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் சீனாவில் இருக்கும் வால்ட் டிஸ்னி தீம் பார்க்குகள் மூடப்பட்ட நிலையில் பலர் வேலைவாய்ப்பை இழந்தனர்.
இதேவேளையில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்த பின்பு சீனாவில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங்-ல் இருக்கும் வால்ட் டிஸ்னி தீம் பார்க்குகள் திறக்கப்பட்ட பின்பு அமோக வரவேர்பு கொடுக்கப்பட்டது. இதன் வாயிலாக அடுத்த தீம் பார்க் கட்டும் பணிகளை வால்ட் டிஸ்னி துவங்கியுள்ளது.

சீனாவில் இருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக மத்திய பகுதியான மற்றும் முக்கிய வர்த்தக நகரமாக இருக்கும் வுஹானில் தனது புதிய தீம் பார்க்-ஐ அமைக்க திட்டமிட்டு அதற்கான பணியில் இறங்கியுள்ளது வால்ட் டிஸ்னி. வுஹான் மாகாண அரசு அதன் அதிகாரப்பூர்வ WeChat கணக்கில் பேச்சுவார்த்தை குறித்து எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
சீனா கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல சீன நகரங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டிஸ்னி 2016 இல் ஷாங்காய் நகரத்தில் 5.5 பில்லியன் முதலீட்டில் அதன் முதல் ரிசார்ட்டைத் திறந்தது. ரிசார்ட் அதன் முதல் ஆண்டில் 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் ஈர்த்தது.


Click it and Unblock the Notifications