நிறுவனம் சீனாவோடது தான்.. ஆனால் உற்பத்தி மேட் இன் இந்தியா தான்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சீனாவின் ஸ்மார்ட்போன் பிராண்டான ஜியோமி, நிறுவனம் சீனாவாக இருந்தாலும், அதன் சில்லறை வர்த்தக கடைகளில் மேட் இன் இந்தியா லோகோவை பயன்படுத்துகின்றனவாம்.

 

அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பதற்றம் காரணமாக சீன பொருட்கள் வேண்டாம், சீனா வேண்டாம் என்ற பரப்புரைகள் வேகமாக பரவலாக பரவி வருகின்றன.

இதன் காரணமாக சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி, அதன் சில்லறை வர்த்தக கடைகளில் தனது சில்லறை கடை முத்திரையை, மேட் இன் இந்தியா என்ற வெள்ளை நிற லோகோவை பயன்படுத்தி மறைக்க தொடங்கியுள்ளதாக, அகில இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

போர்டுகளை அகற்ற கோரிக்கை

போர்டுகளை அகற்ற கோரிக்கை

இது குறித்து விற்பனையாளர்கள் சங்கம் எழுதிய கடிதத்தின் படி, நாங்கள் துணி அல்லது வேறு ஏதேனும் பயன்படுத்தி சில்லறை விற்பனையாளர்களை அவர்களது பிராண்டுகளை மறைக்க அனுமதிக்கும் படி கோரியிருந்தோம். மேலும் சீனா இந்தியா பதற்றம் காரணமாக சில்லறை கடைகளின் முன்பு உள்ள போர்டுகளை அகற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தோம்.

 மேட் இன் இந்தியா லோகோ

மேட் இன் இந்தியா லோகோ

இந்த நிலையில் தான் ஜியோமி மேட் இன் இந்தியா லோகோவை வெள்ளை நிறத்தில் வைக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் மற்ற நிறுவனங்களில் இது போன்ற நடவடிக்கைகளை காணவில்லை. எனினும் அவர்கள் நிலைமையை கண்கானித்து வருகின்றன என்றும் AIMRA சங்கத்தின் தலைவர் அர்விந்தர் குரானா கூறியுள்ளார்.

சீனா பொருட்களை அகற்ற கோரிக்கை
 

சீனா பொருட்களை அகற்ற கோரிக்கை

மேலும் சில சமூக விரோத ஆர்வளர்கள், சமீபத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல சந்தைகளுக்கு சென்று, மொபைல் போன் கடைகளை சேதப்படுத்தப்போவதாக அச்சுறுத்துவதாகவும், அதோடு சீன வர்த்தகத்தினை தங்கள் விற்பனை நிலையங்களில் இருந்து அகற்றும் படி கேட்டுக் கொண்டதாகவும் குரானா கூறியுள்ளார்.

ஆகிரமிரப்பு அதிகரித்தால் அச்சுறுத்தல் அதிகமாகும்

ஆகிரமிரப்பு அதிகரித்தால் அச்சுறுத்தல் அதிகமாகும்

ஆக்கிரமிரப்பு அதிகரித்தால் சில்லறை விற்பனையாளர்களுக்கு இது அச்சுறுத்துலாக இருக்கும் என்றும், ஆக சீன விற்பனையாளர்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் இந்த பலகை இருக்கக்கூடாது என்றும் குரானா கூறியுள்ளார். மேலும் இந்த உணவு ஏதேனும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு, நிச்சயம் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றும் குரானா கூறியுள்ளார்.

சாம்சங்கிற்கு வாய்ப்பு

சாம்சங்கிற்கு வாய்ப்பு

எனினும் இது சீனரல்லாத பிராண்டான சாம்சங்குக்கு இதன் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோடு இது இந்திய பிராண்டுகளை ஊக்கப்படுத்தும் நேரம் இது என்று நான் நினைக்கிறேன். சீனா எப்படி சீன நிறுவனங்களுக்கு எப்படி ஆதரவை அளிக்கிறதோ, அதே போல் இந்தியாவும் வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

ஏறக்குறைய இரண்டு மாதத்திற்கும் மேலான லாக்டவுன் காரணமாக வீட்டில் இருந்து படித்தல், வீட்டிலிருந்து வேலை செய்தல் காரணமாக ஸ்மார்ட்போன் தேவை அதிகரித்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை நாட வேண்டியுள்ளது. எனினும் சீன நிறுவனங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

வணிக்கத்தில் பாதிப்பில்லை

வணிக்கத்தில் பாதிப்பில்லை

இதற்கிடையில் ஜியோமி இந்தியாவின் இந்திய தலைவர் மனு ஜெயின், சீனவின் எதிரான உணர்வு முக்கியமான சமூக ஊடகங்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது எவ்வகையிலும் தங்களது வணிகத்தனை பாதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 24 அன்றும் ஜியோமியின் நோட் 9 புரோ 50 வினாடிகளுக்குள் விற்று தீர்த்ததாகவும், அதற்கு மேல் ஸ்டாக் இல்லை என்றும் கூறியுள்ளார்.

5ல் நான்கு சீனாவோடது

5ல் நான்கு சீனாவோடது

இந்தியாவில் முதல் ஐந்து ஸ்மார்ட்போன் லிஸ்டுகளில், நான்கு சீனாவுடையது தான், மார்ச் 2020 காலாண்டில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட 32.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களில் கிட்டதட்ட 76 சதவீதம் சீனா ஸ்மார்ட்போன்களுடையது. தென் கொரியாவின் சாம்சங் மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது, இந்த காலாண்டில் 15.6 சதவீதம் அதன் பங்கு ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China’s Xiaomi puts made in india logo outside stores

China’s xiaomi covering its retail store branding with mad in india logo in white colour.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X