சீனாவின் அந்த ஒற்றை முடிவு.. எல்லாம் தலைகீழா மாறி போச்சு.. ஜின்பிங் அரசுக்கு நீடிக்கும் சிக்கல்!

உலக நாடுகள் பலவும் மெதுவான பொருளாதார வளர்ச்சியில் சிக்கித் தவித்து வருகின்றன என்றால், அதற்கு முக்கிய காரணிகள் சர்வதேச அரசியல் பதற்றங்களாகத் தான் இருக்கும். இதனால் ஏற்பட்ட மந்த நிலையாகத் தான் இருக்கும்.

ஆனால் சீனாவின் நிலையோ வேறு. யானை தன் தலையில் தானே மண்னை வாரி போட்டுக் கொண்டது என்பது போல, சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசியால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டு வருகின்றது.

சொல்லப்போனால் உலகின் முன்னணி பொருளாதார நாடான சீனா, ரெசசனுக்கும் நுழையலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்தளவுக்கு பொருளாதாரம் மந்த நிலையினை எட்டியுள்ளது.

பெரும் தலைவலி

பெரும் தலைவலி

இதனால் ஜின்பிங் அரசு பெரும் தலைவலிகளை எதிர்கொண்டு வருகின்றது. முதல் காலாண்டிலேயே வளர்ச்சி விகிதம் மெதுவாக இருந்த நிலையில், ஜூலை - செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி விகிதமானது வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது. இதுவும் வளர்ச்சியில் மந்த நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சியே இருக்காது

வளர்ச்சியே இருக்காது

சீன அரசு நடப்பு ஆண்டில் 5.5% வளர்ச்சியினை எதிர்பார்த்தாலும், நிபுணர்கள் சீனாவின் வளர்ச்சி விகிதமானது அந்தளவுக்கு இருக்காது என்றும் கூறி வருகின்றனர். பிபிசி கருத்தின் படி, நிபுணர்கள் சீனாவில் எந்த வளர்ச்சியும் இருக்காது. சீனா மற்ற முக்கிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்தினை காட்டிலும் பணவீக்கத்தின் பிடியில் இருந்து தப்பித்தாலும், சீனாவுக்கு பிரச்சனை வேறு வழிகளில் உள்ளதை சுட்டிக் காட்டிகின்றனர்.

ரியல் எஸ்டேட் துறை

ரியல் எஸ்டேட் துறை

அதில் முதலாவதாக சுட்டிக் காட்டுவது ரியல் எஸ்டேட் சந்தையை தான். சீனாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது அதன் ரியல் எஸ்டேட் சந்தை தான். ஜிடிபி-யில் மூன்றில் ஒரு பங்கு ரியல் எஸ்டேட் துறை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் தற்போது சீனா மோசமான கட்டத்தில் உள்ளது எனலாம். இதற்கு சீனாவின் மிக பெரிய ரியல் எஸ்டேட் ஜாம்பவான் ஆன எவர்கிராண்டே-வே மிக சிறந்த உதாரணம் எனலாம். எவர்கிராண்டே பிரச்சனைக்கு பிறகு பற்பல நிறுவனங்களும் மோசமான சரிவினை எட்டி வருகின்றன. வீடுகள் விற்பனை செய்யப்படாமல் தேங்கி நிற்கின்றன. பாதி கட்டிய வீடுகள் போதிய நிதி இல்லாமல் அப்படியே நிற்கின்றன.

ஜீரோ கோவிட் பாலிசி

ஜீரோ கோவிட் பாலிசி

இரண்டாவது சீனாவின் பிரபலமான ஜீரோ கோவிட் பாலிசி. நிபுணர்களால் மிக மோசமான கொள்கை என்று வர்ணிக்கப்படும் இந்த கொள்கையால் சீனாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையினை எட்டியுள்ளது. சொல்லப்போனால் மற்ற பிரச்சனைகளுக்கும் ஒரு வகையில் இது தான் காரணமோ என்ற எண்ணத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் எந்தவொரு நாடும் இப்படி ஒரு மோசமான கொள்கையை கடைபிடிக்குமா? என்பது தெரியவில்லை என்ற விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. இது சீனாவின் பொருளாதாரத்தினை சீரழித்ததில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்றும் லாக்டவுன்

இன்றும் லாக்டவுன்

குறிப்பாக சீனாவின் மிக முக்கிய உற்பத்தி நகரங்களும் இந்த ஜீரோ கோவிட் பாலிசியால் முடங்கி போயின. இதன் காரணமாக சீனாவின் உற்பத்தியானது மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் பல லட்சம் பேர் அந்த சமயத்தில் வேலையினை இழந்து தவித்தனர். உலகில் பல நாடுகளும் கொரோனாவின் பிடியில் இருந்து விலகினாலும் கூட, சீனாவில் இன்றளவும் கொரோனாவின் தாக்கம் உள்ளது. அங்கு பல பகுதிகளில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.

அரசு என்ன செய்கிறது?

அரசு என்ன செய்கிறது?

அரசு கடந்த 2.5 வருடங்களாக கொரோனா பெருந்தொற்றினை தடுக்க ஜீரோ கோவிட் பாலிசியினை கடைபிடித்து வருகின்றது. எனினும் பெய்ஜிங் அரசு சிறு தொழில்கள், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் வணிகங்களை ஊக்குவிக்க 1 டிரில்லியன் யுவானை கடந்த ஆகஸ்ட் மாதமே அறிவித்தது. ஆனால் இது சீனாவின் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க போதுமானது அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரசு செய்ய வேண்டியது

அரசு செய்ய வேண்டியது

குறிப்பாக உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். கடன் தேவையை ஊக்குவிக்க வேண்டும். அரசு வரி குறைப்பு செய்திட வேண்டும். மொத்தத்தில் அன்னிய முதலீடுகளை பெற அரசு வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. ஆனால் சீனாவின் கொள்கையால் அது நடக்குமா? என்பதும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

வேலை சந்தை

வேலை சந்தை

சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவினை சந்தித்து வரும் நிலையில், சீனாவுக்கு அடுத்த பெரிய சவாலாக இருப்பது வேலை வாய்ப்புகள் தான். ஏற்கனவே பொருளாதார மந்தம், ஜீரோ கோவிட் பாலிசியால் பல லட்சம் பேரின் வேலை கேள்வி குறியானது. தற்போது ரியல் எஸ்டேட் பிரச்சனை, அரசின் புதிய புதிய கட்டுப்பாடுகள் மேற்கொண்டு இதனை ஊக்குவிக்கலாம். ஏற்கனவே மில்லியன் கணக்கான இளைஞர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு போட்டியினை அதிகரிக்கலாம். சமீபத்திய ஆய்வொன்றில் 5ல் 1 இளைஞருக்கு வேலை என்பது சுட்டிகாட்டியது குறிப்பிடத்தக்கது.

கால நிலை மாற்றம்

கால நிலை மாற்றம்

சீனாவில் கால நிலை மாற்றம் என்பதும் மிக மோசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுவும் சீனாவின் பொருளாதார சரிவில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளாது. சீனாவின் மிக மோசமான வெப்ப நிலை, மின்சார தேவையினை அதிகளவில் ஊக்குவித்தது. ஆனால் மின்சார உற்பத்தியும் பாதிருந்த நிலையில், இதனால் தொழிற்சாலைகள், மக்கள் என பல விதத்திலும் பாதிப்பினை எதிர்கொண்டனர்.

முதலீடுகள் சரிவு

முதலீடுகள் சரிவு

சீனாவின் கொரோனா பாலிசியால் ஏற்கனவே 2.5 ஆண்டுகளை இழந்துவிட்டது. இதற்கிடையில் மற்ற வெளி நாட்டு வணிகங்களும் சீனாவில் மிக மோசமான தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. இதுவே சீனாவில் இருந்து பல வெளி நாட்டு நிறுவனங்கள் தங்கள் வணிக நடவடிக்கையை வேறு இடங்களுக்கு மாற்ற வழிவகுத்தது. பல நாடுகளின் நிறுவனங்களும் தங்களது வணிகத்தினை வேறு நாடுகளுக்கு ஏற்கனவே மாற்றத் தொடங்கியுள்ளன.

இது தான் முக்கிய காரணம்

இது தான் முக்கிய காரணம்

சீனாவின் இந்த மோசமான சரிவுக்கு பல காரணிகள் காரணமாக இருந்தாலும், சீனாவின் முக்கிய கொள்கையான ஜீரோ கோவிட் பாலிசியே மிக முக்கிய காரணம் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் இன்றும் சீனாவின் சில முக்கிய பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சீனாவின் பல முக்கிய பங்குகளும் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. இது தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. மொத்தத்தில் ஜின்பிங் அரசுக்கு பெரும் சவால்கள் காத்துக் கொண்டுள்ளது எனலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+