சீனாவின் அந்த ஒரு முடிவு.. இந்தியாவுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?

டெல்லி: கொரோனாவின் வருகையால் உலக நாடுகள் பலவும் தத்தளித்து வந்த காலத்தில் கூட, சீனாவின் பெரியளவில் தாக்கம் ஏற்படவில்லை. ஆனால் தற்போது உலக நாடுகள் பலவும் பிரச்சனையில் இருந்து சற்றே விடுபட்டுள்ள நிலையில், சீனா சிக்கித் தவித்து வருகின்றது.

குறிப்பாக சீனாவின் ஜீரோ கோவிட் பாசிலியானது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக உலகின் முன்னணி பொருளாதார நாடான சீனாவின் பொருளாதாரம், பெரும் பின்னடைவினை சந்தித்தும் வருகின்றது.

ஏற்றுமதி இறக்குமதியில் தாக்கம்

ஏற்றுமதி இறக்குமதியில் தாக்கம்

சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக அதன் உற்பத்தி துறையானது பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது. இதனால் சீனாவின் ஏற்றுமதியிலும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது. அதேபோல சீனாவின் தேவையிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு பிரச்சனையா?

இந்தியாவுக்கு பிரச்சனையா?

ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. எனினும் இந்த காலகட்டத்தில் சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக சீனாவின் பொறியியல் பொருட்கள் இறக்குமதியிலும் பெரும் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு இந்தியாவின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதிக்கு பிரச்சனையாக மாறக்கூடும்.

இந்தியாவினை பாதிக்கும்

இந்தியாவினை பாதிக்கும்

கடந்த ஆகஸ்ட் 2022லியே பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியானது 70% சரிவினைக் கண்டு. 173.7 மில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 619.5 மில்லியன் டாலராக இருந்தது. இது சீனாவில் போடப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது புதியதாக சீனாவின் பல மாகாணங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதிக்கு பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி

பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி

ஏற்கனவே ஒட்டுமொத்த பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 12.64% குறைந்தும், செப்டம்பர் மாதத்தில் 17% குறைந்தும் காணப்படுகின்றன. இந்த வீழ்ச்சியானது விரைவில் மீண்டு வருமா என்பது சந்தேகமாகத் தான் உள்ளது என இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் அருன் குமார் கரோடியா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு முழுவதுமே சீன சந்தையானது மிக கடினமாக இருந்து வருகின்றது. இதற்கிடையில் இந்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவை அளிக்க முயற்சித்து வருகின்றது.

இந்திய அரசு ஆதரவளிக்குமா?

இந்திய அரசு ஆதரவளிக்குமா?

சீனாவில் வர்த்தக தடை இல்லை. ஆனால் தேவை குறைந்துள்ளது. சிலவற்றை அவர்களே உற்பத்தி செய்ய தொடங்கியிருக்கலாம். இதற்கிடையில் இந்திய அரசு இரும்பின் மீதான வரியை நீக்குவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றது. இது இந்தியாவின் இழந்த சந்தையை தக்க வைத்துக் கொள்ள மீண்டும் உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரி தள்ளுபடியா?

வரி தள்ளுபடியா?

இந்தியாவில் வரவிருக்கும் பட்ஜெட்டில் இரும்பு ஸ்கிராப் மீதான ஏற்றுமதி வரி தள்ளுபடி செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்றுமதியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதி வரியினை 50% வரையிலும், ஒரு சில இரும்பு இடைத்தரகர்களுக்கு வரியினையும் 15% வரையிலும் கடந்த மே மாதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு வாய்ப்பு

இந்தியாவுக்கு வாய்ப்பு

இந்தியாவின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில் முக்கிய ஐந்து இடங்களில் சீனாவும் ஒன்றாகும். மேலும் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கமானது இந்தியாவிலும் அதன் ஏற்றுமதியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகினது.

அதேசமயம் சீனாவில் ஏற்படும் நிதி பிரச்சனையானது, இந்தியாவில் உற்பத்தியினை அதிகரிக்க வாய்ப்பாக அமையலாம். இந்திய நிறுவனங்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம்.

இந்தியா - பிரேசில் ஏற்றுமதி விகிதம்

இந்தியா - பிரேசில் ஏற்றுமதி விகிதம்

உதாரணத்திற்கு பிரேசிலை சுட்டி காட்டிய கரோடியா, பிரேசிலுக்கான வாகன உதிரி பாகங்கள் சப்ளையில் முதல் 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்று தான். எனினும் இந்தியாவின் பங்கு சுமார் 2.7% மட்டுமே. ஆனால் சீனாவின் பங்கு 12.8% ஆகும்.

நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் பிரேசிலுக்கான ஏற்றுமதியானது 43.6% வளர்ச்சி அடைந்தது. இது இந்தியா பொறியியல் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சீன இடத்தை பிடிக்க முடியுமா?

சீன இடத்தை பிடிக்க முடியுமா?

எனினும் சீனா விட்டு சென்ற இடைவெளியினை இந்தியாவால் நிரப்ப முடியுமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் இந்தியாவில் அந்தளவுக்கு உற்பத்தி இல்லை. எனினும் தற்போது அதற்கான முயற்சிகளை பி எல் ஐ திட்டம் மூலம் அரசு எடுத்து வருகின்றது. எனினும் இது எம் எஸ் எம் இ-களை ஊக்குவிக்காது. இது பெரும் நிறுவனங்களுக்கான திட்டமே. ஆக எம் எஸ் எம் இ-களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க இன்னும் சில காலம் ஆகலாம் எனவும் கரோடியா தெரிவித்துள்ளார்.

மற்ற சந்தைகளும் பிரச்சனை தான்

மற்ற சந்தைகளும் பிரச்சனை தான்

அதோடு சீனா மட்டும் அல்ல, இந்தியாவின் மற்ற முக்கிய சந்தைகளான ஐரோப்பிய நாடுகளிலும் மந்த நிலை இருந்து வரும் நிலையில் அதுவும் இந்தியாவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் உலக நாடுகளின் பொருளாதார மந்த நிலை இந்தியாவுக்கும் ஒரு வகையில் பிரச்சனையே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+