பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியில் உலக நாடுகளுக்குத் தொடர்ந்து வியப்பு அளித்து வந்த சீனா இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 30 வருட குறைவான அளவீட்டை நிர்ணயம் செய்துள்ளது. இது சீன மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா அமெரிக்காவுடன் போட்டிப்போட்டு வரும் நிலையில், பல உற்பத்தி மற்றும் மூலப் பொருட்களுக்காக உலக நாடுகள் சீனாவை நம்பியிருக்கும் வேளையில், வளர்ச்சி அளவீட்டை 30 வருட குறைவான அளவீட்டை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
சீன பொருளாதாரம்
கொரோனா வைரஸ் தாக்கம், ரியல் எஸ்டேட் துறை சரிவு, உக்ரைன் மீதான போர் மூலம் நிலவும் "கடுமையான மற்றும் நிச்சயமற்ற" கண்ணோட்டத்தை இந்த ஆண்டுச் சீனா பொருளாதாரம் எதிர் கொள்ளும் எனச் சீனா நாடாளுமன்றத்தின் ப்ரீமியரான லி கெகியாங் எச்சரித்து உள்ளார்.
ஜிடிபி 5.5 சதவீதம்
இதன் மூலம் 2022ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதாவது ஜிடிபி அளவு 5.5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என லி கெகியாங் சீனா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த 5.5 சதவீத வளர்ச்சி என்பது சீனாவின் 1991 ஆம் ஆண்டின் வளர்ச்சி அளவீடாகும்.
சீன நாடாளுமன்றம்
உலகிலேயே 2வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனா, 2022ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி அளவீட்டை இன்று 3000 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட Great Hall of the People கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் லி கெகியாங் தற்போது சீனாவிற்குப் பல ஆபத்துக்களும், சவால்களும் இருக்கிறது, அதை விரைவில் சரி செய்வோம் எனவும் கூறினார்.
ஜி ஜின்பிங்
சீன அதிபரான ஜி ஜின்பிங் தலைமையில் சீனாவின் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வியல் மேம்பட்டு வரும் நிலையில், டெக் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாட்டில் சீனாவின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. ஆனால் தனியார் டெக் நிறுவனங்களில் சீன அரசின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இது விரைவில் சீனாவுக்குப் பலன் அளிக்கும்.
30 வருட சரிவு
இதேவேளையில் உற்பத்தி துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா 30 வருட குறைவான வளர்ச்சி டார்கெட்-ஐ நிர்ணயம் செய்துள்ளது, உலக நாடுகளில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் முக்கியமாகக் கொரோனா தொற்றை முதலில் வென்று பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த நாடாக சீனா விளங்குகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications