உங்க பாச்சா எங்களிடம் பலிக்காது.. அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த சீனா.. ஜி ஜின்பிங் செய்த OG சம்பவம்..!!

2025ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய வர்த்தக போர் நடந்தது யாராலும் மறந்திருக்க முடியாது. டிரம்ப் - ஜி ஜின்பிங் ஆகியோர் மாறி மாறி வரிகளை விதித்ததால் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் பெரிய அளவில் பாதித்தது. ஆயினும் சீனா இந்த வரி விதிப்புகள், வர்த்தக தடைகளை தாண்டி 2025ல் சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு இருந்த போதிலும், சீனா 2025 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வர்த்தக உபரியை பதிவு செய்துள்ளது. சீனா சுங்கத் துறை இன்று வெளியிட்ட தகவல்களின்படி, 2025-ல் மொத்த வர்த்தக உபரி (அதாவது இறக்குமதியை காட்டிலும் அதிக ஏற்றுமதி) 1.189 டிரில்லியன் டாலராக உள்ளது.

உங்க பாச்சா எங்களிடம் பலிக்காது.. அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த சீனா.. ஜி ஜின்பிங் செய்த OG சம்பவம்!

இந்த 1 டிரில்லியன் டாலர் என்பது சவுதி அரேபியா போன்ற உலகின் முக்கிய பொருளாதார நாடுகளின் ஜிடிபி-க்கு இணையான அளவு. இந்த உபரி அளவு நவம்பர் மாதத்தில் முதல் முறையாக 1 டிரில்லியன் டாலராக தாண்டியது. இந்த வர்த்தக உபரி அளவு 2024-ஐ விட 20 சதவீதம் அதிகமாகும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு சீனாவுக்கு எதிரான வர்த்தகத் தடைகள் மற்றும் வரி உயர்வுகள் இருந்தபோதிலும், சீனா இந்த சாதனையை படைத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி 20 சதவீதம் குறைந்துள்ளது, ஆயினும் சீன உற்பத்தியாளர்கள் தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற புதிய சந்தைகளை நோக்கி திரும்பியதால் உலகளாவிய ஏற்றுமதி வலுவாக இருந்தது.

2025ஆம் ஆண்டில் மட்டும் ஆப்பிரிக்காவுக்கான சீன ஏற்றுமதி 25.8 சதவீதம், ASEAN நாடுகளுக்கான ஏற்றுமதி 13.4 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 8.4 சதவீதம் உயர்ந்ததுள்ளது. அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய சரக்குகளை சீனா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து எளிதாக வர்த்தகத்தை சமன் செய்துள்ளது. இதே மாடலை தான் இந்தியா கையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

சீன அரசு உற்பத்தியாளர்களை அமெரிக்க சந்தையை சார்ந்திராமல் பல்வகைப்படுத்துமாறு ஊக்குவித்தது, இதற்காக கொள்கை தளர்வுகள், கட்டுப்பாடு தளர்வுகள் என பல வகையில் வாய்ப்பை உருவாக்கியது. இதன் மூலம் அமெரிக்க வரிகளின் தாக்கத்தை எளிதாக கடந்து சென்றது சீனா.

மேலும் யுவான் மதிப்பு குறைவாக இருந்ததும் ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்க உதவியாக இருந்தது. இதோடு பல நாடுதள் யுவான் நாணயத்தை பயன்படுத்தி வர்த்தகம் செய்ததும் சீனாவுக்கு பலமாக மாறியது. 2025ஆம் ஆண்டில் சுமார் 7 மாதம் சீனாவின் வர்த்தக உபரி 100 பில்லியன் டாலரை தாண்டியது. 2024-ல் ஒரு முறை மட்டுமே 100 பில்லியன் டாலரை தாண்டியுது, சொல்லப்போனால் டிரம்ப்-ன் வரி விதிப்புக்கு பின்பு தான் சீனா பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

2026ஆம் ஆண்டை பார்க்கும் போது சீனாவுக்கு பல சவால்கள் உள்ளது. உலக நாடுகள் சீனாவின் வர்த்தக முறைகள், அதிகப்படியான உற்பத்தி திறன் (overcapacity) மற்றும் முக்கிய பொருட்களில் அதிகளவில் சீனாவை சார்ந்து இருப்பதை ஆபத்தாக பார்க்கிறது. இதனால் சீனா உடனான வர்த்தகத்தை மாற்றியமைக்கலாம்.

மேலும் சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தை சரிவு மற்றும் உள்நாட்டு தேவை குறைவு போன்ற பிரச்சினைகளை ஏற்றுமதி மூலம் சமாளிப்பது எவ்வளவு காலம் தொடரும் என்பது சீன பொருளாதாரத்திற்கு இருக்கும் முக்கிய கேள்வி. இந்த பிரச்சனைகளை கடந்து வந்தால் மட்டுமே சீனா அமெரிக்கா பொருளாதாரத்துடன் போட்டிப்போட முடியும்.

சீனாவின் இந்த சாதனை உலக வர்த்தகத்தில் புதிய விவாதங்களை தூண்டியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து எப்படி உலக நாடுகள் தப்பிக்க வேண்டும் என்பதற்கான பாட புத்தகமாக சீனா மாறியுள்ளது. இதேவேளையில் அமெரிக்காவை சீனா தனது அரிய உலோகத்தால் எப்படி வரி விதிப்பில் இருந்து தப்பிக்க பயன்படுத்தியது என்பதையும் கவனிக்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+