மோடி டேபிள்-க்கு வந்த புது பிரச்சனை.. இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் கதவை மூடும் சீனா..!

இந்தியாவும், இந்திய தொழிற்துறையும், சீனாவின் உதிரிபாகங்கள், இயந்திரங்கள், தொழில்நுட்ப திறனை அதிகம் நம்பியிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரையில் சீனாவின் உதிரிபாகங்கள், மூலதன பொருட்கள் என பலவற்றுக்கு சீனாவை நம்பி தான் இயங்கி வருகிறது.

ஆயினும் சீனா+1 கொள்கை மூலம் உலக நாடுகளில் இருந்து பல திட்டங்கள், உற்பத்தி ஆலைகள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறிய நிலையில் சீன தொழில்நுட்ப அதிகாரிகள், நிபுணர்களுகளை அதிகளவில் அழைத்து அவர்களின் உதவியுடன் இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டது.

மோடி டேபிள்-க்கு வந்த புது பிரச்சனை.. இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் கதவை மூடும் சீனா..!

இதை தடுக்கும் வகையில் இந்தியாவுக்கு செல்லும் சீன நிபுணர்களுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தற்போது சீனா அரசு, அடுத்தக்கட்டமாக இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செல்லும் நிபுணர்களுக்கான விசா வழங்குவதையும் குறைத்துள்ளது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

சீனா இயந்திரங்கள், சீன மூலப்பொருட்களை பயன்படுத்தி இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைத்திருக்கும் நிறுவனங்கள் பல, தங்களுடைய நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளை சீனாவுக்கு அனுப்பி வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது, பொருட்களை வாங்குவது, உற்பத்தி ஆப்ரேஷன்ஸ் குறித்து நிபுணத்துவம் பெறுவது என பல காரணங்களுக்காக அனுப்பி வந்தது.

முன்பெல்லாம் இந்தியாவில் இருந்து சீனவுக்கு பிஸ்னஸ் விசா பெற வேண்டும் என்றால் 100க்கு 100 விசா ஒப்புதல் அளிக்கப்படும். ஆனால் கடந்த சில மாதங்களுகாக பிஸ்னஸ் விசாவுக்காக செய்யும் விண்ணப்பங்களில் வெறும் 20-40 சதவீதம் தான் சீனா அதிகாரிகள் ஒப்புதல் அளித்து வருகின்றனர் என இந்தியாவில் இருக்கும் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் ஒப்பந்த உற்பத்தி நிறுவனங்கள் கூறுகிறது.

சீன அரசின் இந்த விசா கட்டுப்பாடுகள், விசா விண்ணப்பம் ரத்து மூலம் இந்தியாவில் வர்த்தகம், தொழிற்சாலை இயக்கம், புதிய திட்டங்களை செயல்படுத்துவது போன்றவை மிகவும் சவாலான காரியமாக மாறியுள்ளது. இத்தகைய பிரச்சனையை பல முன்னணி நிறுவனங்களும் எதிர்கொண்டு வருவதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகரிகள் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் பல நிறுவனங்கள் பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வமா கடிதம் எழுதி இந்த விசா பிரச்சனையால் எத்தகைய பாதிப்பை தாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என்பதை விளக்கியுள்ளனர்.

மேலும் இதற்கு விரைவில் தீர்வு காணவும், பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் சீனாவுக்கு பல ஆண்டுகளாக பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்கும் நபர்களும் இத்தகைய பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் சமுக வலைத்தளத்திலும், ரெட்டிட் தளத்திலும் பதவிட்டு வருகின்றனர்.

இந்தியா - சீனா மத்தியிலான உறவு 2020ஆம் ஆண்டு கல்வான் பகுதியில் இரு நாட்டு ராணுவத்திற்கு மத்தியில் ஏற்பட்ட மோதலுக்கு பின்பு பெரிய அளவில் தொய்வு அடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+