3 குழந்தைகளை பெத்துக்கோங்க.. இளைஞர்களிடம் கெஞ்சும் சீன அரசு.. பட்ஜெட்டில் வந்த அறிவிப்பு..!!

சீனாவின் ராணுவ பட்ஜெட் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்த நிலையில், சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அந்நாட்டின் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்திர தொடக்கக் கூட்டத்தில், பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் சீனாவின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் அதிகரித்து வரும் முதியோர் மற்றும் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம் ஆகியவற்றுக்கான நடவடிக்கை எடுக்க ஜி ஜின்பிங் அரசு உறுதி அளித்துள்ளது.

3 குழந்தைகளை பெத்துக்கோங்க.. இளைஞர்களிடம் கெஞ்சும் சீன அரசு.. பட்ஜெட்டில் வந்த அறிவிப்பு..!!

சீனாவில் 1980 மற்றும் 2015 வரையில் நடைமுறையில் இருந்த ஒரு குழந்தை கொள்கையின் விளைவாகச் சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. 2021 முதல் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதிக்கிறது.

இந்த நிலையில் சீன பட்ஜெட் அறிக்கையில், வயதானோருக்கான வாழ்வியலை மேம்படுத்த, புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், ஓய்வூதிய விதிகளை மேம்படுத்தி, தனியார் ஓய்வூதிய முறையை ஊக்குவிப்பதற்கான திட்டங்களும் இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் சீனாவின் முதியோருக்கான நலன், செலவுகள், பாதுகாப்பு அதிகரிக்கும்.

சீனா அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்க முக்கியமான காரணம், 2023 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந்தது தான்.

மேலும் 2023 ஆம் ஆண்டில், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டின் பாதி அளவில் மட்டுமே இருந்தது. மேலும், 2022 ஆம் ஆண்டில் திருமணங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு குறைவாக இருந்தது.

குழந்தை பெறுதல் தொடர்பான செலவுகள், பெற்றோர்கள் ஆகும் பொறுப்பு, கல்விச் செலவுகள் போன்ற காரணங்களால் குழந்தை பெற விரும்பாத பெண்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருகிறது.

மேலும் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது தங்கள் தொழில் வாழ்க்கையை நிறுத்தவோ விரும்பாத பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பாலின பாகுபாடு இன்றும் இருந்து வருவது சீனாவின் இளம் தலைமுறையினருக்குக் கூடுதல் சிக்கலாக உள்ளது.

3 குழந்தைகளை பெத்துக்கோங்க.. இளைஞர்களிடம் கெஞ்சும் சீன அரசு.. பட்ஜெட்டில் வந்த அறிவிப்பு..!!

இதோடு சீன அரசு அந்நாட்டு மக்களைக் குழந்தை பெறுவதை ஊக்குவிக்க, பல்வேறு சலுகைகளை வழங்க முயன்றுள்ளது. இதில் முக்கியமாக மகப்பேறு விடுமுறை நீட்டிப்பு, குழந்தை பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்புக்கான நிதி மற்றும் வரிச் சலுகைகள், வீட்டு மானியங்கள் போன்றவை சீன அரசு வழங்கி வருகிறது.

ஆனால், மனித தனிநபர் வருவாயை (GDP per capita) ஒப்பிடும்போது, குழந்தை வளர்ப்புச் செலவு உலகிலேயே அதிகமாக உள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று என சமீபத்திய சீனாவின் முன்னணி திங்க் டேங்க் அமைப்பு ஒன்று பிப்ரவரியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+