அமெரிக்காவுக்கு 'டா டா'.. முதல் இடத்தை பிடிக்கும் சீனா..!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் இடத்தை அடுத்த 8 வருடத்தில் சீனா பிடித்துவிடும் எனப் பொருளாதார ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் அமெரிக்கா பெரிய அளவிலான பொருளாதார மற்றும் வர்த்தகச் சரிவை சந்தித்திற்கும் நிலையில், சீனா முந்தைய கணிப்பை விடவும் குறைவான காலத்திற்குள் அமெரிக்காவை இரண்டாவது இடத்திற்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடிக்க உள்ளது.

சீனா Vs அமெரிக்கா

சீனா Vs அமெரிக்கா

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா நீண்ட காலமாக முதல் இடத்தில் ஆதிக்கம் செய்து வரும் நிலையில், கடந்த 20 வருடத்தில் சீனாவின் பிரம்மாண்ட வளர்ச்சி அமெரிக்காவின் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

சீனா ஆதிக்கம்

சீனா ஆதிக்கம்

சீனா கடந்த 20 வருடத்தில் உற்பத்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், ஏற்றுமதியில் ஆதிக்கம், உலக நாடுகளில் முதலீடு, உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களில் சீனா நிறுவனங்களின் முதலீடு எனப் பல பிரிவுகளில் சீனா தனது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்துள்ளது.

அமெரிக்காவின் இடம்

அமெரிக்காவின் இடம்

இதனால் சீனாவின் பொருளாதாரம் அதிரடியாக வளர்ச்சி அடைந்து 2033ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை 2வது இடத்திற்குத் தள்ளி முதல் இடத்தை அடையும் எனக் கணிப்புகள் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது.

வளர்ச்சிப் பாதையில் சீனா

வளர்ச்சிப் பாதையில் சீனா

இந்நிலையில் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்டுள்ள பொருளாதாரம், வர்த்தகப் பாதிப்பின் மூலம் அமெரிக்கா பொருளாதாரம் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது. இதேவேளையில் சீனா சில மாதங்களுக்கு முன்பே கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர்த்தக சந்தையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

அமெரிக்காவை முந்தும் சீனா

அமெரிக்காவை முந்தும் சீனா

இதன் எதிரொலியாக முந்தைய கணிப்புகளை விடவும் சீனா 5 வருடம் குறைவான காலத்தில் பொருளாதாரத்தில் அமெரிக்காவை முந்திவிடும் எனப் பொருளாதார ஆய்வு அமைப்பான Centre for Economics and Business Research, தனது வருடாந்திர ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடு

கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடு

சீனா கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலகில் எந்தொரு நாடுகளிலும் அறிவிக்காத அளவிற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் கட்டுப்படுத்தியதன் விளைவாக வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை குறைந்த காலகட்டத்திலேயே மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இதேவேளையில், அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் குறைவாக இருந்த காரணத்தால் நீண்ட கால வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சீனா பொருளாதார வளர்ச்சி

சீனா பொருளாதார வளர்ச்சி

CEBR அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய வர்த்தகச் சூழ்நிலையில் சீனா 2021-25 வரையிலான காலகட்டத்தில் சராசரியாக 5.7 சதவீதம் வருடாந்திர பொருளாதார வளர்ச்சியையும், 2026-30 வரையிலான காலகட்டத்தில் 4.7 சதவீதம் அளவில் வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா பொருளாதார வளர்ச்சி

அமெரிக்கா பொருளாதார வளர்ச்சி

கொரோனா பாதிப்புக்குப் பின் அமெரிக்கா சிறப்பான வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 1.9 சதவீதமும், அதன்பின்பு 1.6 சதவீதம் வளர்ச்சி அடையும் என CEBR அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நிலை என்ன..?

இந்தியாவின் நிலை என்ன..?

சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஜப்பான் 3வது இடத்திலும், இந்தியா 4வது இடத்திலும், ஜெர்மனி 5வது இடத்திலும், பிரிட்டன் 6வது இடத்திலும் இருக்கும் CEBR அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த 10 வருடத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+