கொரோனா பாதிப்பில் இருந்து உலகில் பிற நாடுகளை விடவும் வேகமாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனா தான்.
ஆனால் கடந்த சில மாதங்களாகக் கொரோனா பாதிப்பால் வர்த்தகத்தை இந்தக் காரணத்தால் இந்நாட்டில் பல நிறுவனங்கள் திவாலானது. இதுமட்டும் அல்லாமல் அண்டை நாடுகள் உடனான பிரச்சனை காரணமாகவும் சீனாவில் வர்த்தகச் சந்தை அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
இதோடு அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி சீனாவிற்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகச் சீனா மீதான டிரம்ப்-ன் நிலைப்பாடு ஜோ பிடன் தலைமையிலான ஆட்சியில் எவ்விதமான மாற்றமும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீன அரசு முதல் முறையாக மைனஸ் வட்டியில் அரசு பத்திரங்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அரசு பத்திரங்கள்
சீன அரசு தனது mid-swap விகிதமான -0.45 சதவீதத்தை அடிப்படையாக வைத்தே அரசு பத்திரங்களை விற்பனை செய்து வருகிறது. இதன் படி சுமார் 750 மில்லியன் யூரோ மதிப்பிலான 5 ஆண்டு அரசு பத்திரத்தை mid-swap விகிதத்தில் இருந்து 30 அடிப்படை புள்ளிகளில் விற்பனை செய்ய உள்ளது.
இதன் மூலம் சீனாவின் 5 ஆண்டு அரசு பத்திரத்தை 0.15% வட்டியில் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்கிறது
10 மற்றும் 15 ஆண்டுப் பத்திரங்கள்
இதேபோல் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான 10 வருட அரசு பத்திரங்களை mid-swap விகிதத்தில் இருந்து 55 அடிப்படை புள்ளி வட்டி விகிதத்திலும், 1.25 பில்லியன் யூரோ மதிப்பிலான 15 வருட அரசு பத்திரங்களை mid-swap விகிதத்தில் இருந்து 70 அடிப்படை புள்ளி வட்டி விகிதத்திலும் விற்பனை செய்கிறது.
மைனஸ் வட்டியில் அரசு பத்திரங்கள்
உலகம் முழுவதும் சுமார் 17 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்கள் மைனஸ் வட்டி விகிதத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இது கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகள் மத்தியிலும் தற்போது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது என Mirabaud நிறுவன உயர் அதிகாரி Daniel Moreno தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலத்தில் இதன் அதுபோன்று பல நாடுகள் மைனஸ் வட்டியில் அரசு பத்திரங்களை விற்பனை செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதம்
கொரோனா பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் வட்டி விகிதம் அதிகளவில் குறைந்துள்ளது. குறிப்பாகக் குறுகிய காலம் மற்றும் நடுநிலை காலம் கொண்ட அரசு பத்திரங்கள் பெரும்பாலும் மைனஸ் வட்டியில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் முதலீட்டாளர்களுக்கு அரசு பணம் கொடுத்து வாங்க வைக்கும் நிலை உருவாகியுள்ளது.
கடன் சந்தை
தற்போது உலகம் முழுவதும் கடன் சந்தையில் அதிகளவிலான முதலீடுகளைத் திரட்டப்படும் காரணத்தால் தற்போது வளரும் நாடுகள் அரசு பத்திரங்கள் திட்டமிட்டு மைனஸ் வட்டியில் அரசு பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications