சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட சீனா.. இனி திண்டாட்டம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனா கடந்த 10 வருடமாக உள்கட்டமைப்புத் திட்டத்திற்குக் கடன் அளிக்கும் BRI திட்டத்தின் வாயிலாக 97 நாடுகளுக்குச் சுமார் 850 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கொடுத்து உள்ளது.

இதில் சீனா பல நாடுகளின் சொத்துக்களைக் கைப்பற்றினாலும் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சொல்லப்போனால் சொந்த காசி சூனியம் வைத்துக்கொண்டு உள்ளது சீனா.

என்ன நடக்கிறது, வாங்க பார்ப்போம்..?

 சீனா-வின் பிடியில் இருக்கும் 97 நாடுகள்.. யாரு சாமி நீ..! சீனா-வின் பிடியில் இருக்கும் 97 நாடுகள்.. யாரு சாமி நீ..!

 உள்கட்டமைப்புத் திட்டங்கள்

உள்கட்டமைப்புத் திட்டங்கள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு உலக வங்கி, IMF, OECD அமைப்புகள் முதலில் சுகாதாரம் மற்றும் கல்விக்கு முதலில் கடன் அளிக்கும், இப்படியிருக்கையில் எப்படி உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவது.

சீனா ஸ்மார்ட்

சீனா ஸ்மார்ட்

இந்தக் கேப்-ஐ பயன்படுத்திச் சீனா பல்வேறு சலுகை, எளிய பேமெண்ட் முறைகள் ஆகியவற்றை அளித்து அதிகப்படியான தொகை அதாவது அந்த நாடுகளில் திருப்பி அளிக்க முடியாத தொகையைக் கடனாக அளிப்பது.

ஆப்ஷோர் கணக்கு
 

ஆப்ஷோர் கணக்கு

இந்தக் கடனை பெறுவதற்குப் பினையாக அந்த நாட்டிடம் இருந்து ஏதேனும் ஒரு சொத்து அல்லது பணத்தை ஆப்ஷோர் கணக்கில் வைக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது. இதன் மூலம் சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகள் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் அதைக் கைப்பற்றி விடும். இதுபோன்ற கண்டிஷன் 100 சீன ஒப்பந்தங்களில் இருந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

லாவோஸ், அங்கோலா, இலங்கை

லாவோஸ், அங்கோலா, இலங்கை

இப்படிக் கடனால் திவாலான நாடுகளில் லாவோஸ்-யிடம் இருந்து முக்கியமான பவர் கிரிட்-ஐ 25 வருடத்திற்குச் சீனா கைப்பற்றியுள்ளது. இதேபோல் அங்கோலா தனது பெரும்பகுதி கச்சா எண்ணெய் ஏற்றுமதியைச் சீனாவுக்குக் கடன் செலுத்துவதற்குப் பதிலாக அனுப்பி வருகிறது, இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடத்திற்குக் கைப்பற்றியுள்ளது.

சீனா முதலீடு

சீனா முதலீடு

இதுவரை பார்க்கும் போது சீனாவுக்கு லாபமாக இருப்பது போன்று தெரியும், ஆனால் உண்மையில் சீனா முதலீட்டில் உருவாக்கப்பட்ட திட்டங்களில் எவ்விதமான வர்த்தகம் செய்யப்படவில்லை. பட்டுப்பாதையில் பாகிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகம், கம்போடியாவில் உள்ள சிஹானூக்வில்லே மற்றும் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் வரை பெரும்பாலான துறைமுகங்கள் சுடுகாடாகத் தான் உள்ளது.

திவாலான நாடுகள்

திவாலான நாடுகள்

இதேபோல் கிர்கிஸ்தான், மங்கோலியா மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் திவாலான காரணத்தால் சீனாவுக்குத் தான் பெரிய சுமை, இதேபோல் BRI திட்டத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள 35 சதவீத திட்டங்கள் எப்போது முடியும் என்பது கூடச் சொல்ல முடியாத அளவில் தான் உள்ளது.

சீனா பொருளாதாரம்

சீனா பொருளாதாரம்

மேலும் சீனா பல நாடுகளில் கடனை மறுசீரமைப்பு தான் செய்து வருகிறது, காரணம் சீனா பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் காரணத்தால் பணமாகப் பெறுவது தான் சரி என முடிவு செய்துள்ளது. இதனால் சீனாவுக்குப் பெரும்பாலான இடத்தில் தோல்வி மட்டுமே கிடைத்துள்ளது.

850 பில்லியன் டாலர் கடன்

850 பில்லியன் டாலர் கடன்

ஆனால் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இந்த 850 பில்லியன் டாலர் கடன் பலன் அளித்தாலும், இதற்கு இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இதேவேளையில் பல நாடுகளைக் கடன் வலையில் சிக்க வைத்து வரும் சீனா-வை பார்த்துத் தற்போது உலக நாடுகள் உஷாராகத் துவங்கியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: சீனா china
English summary

China total investments $850 billion under Belt and Road Initiative; Does it benefits China..?

China's total investments cross $850 billion under Belt and Road Initiative to 97 countries; Does it really benefits China, because most of the infra projects are like graveyard around the world..?
Story first published: Monday, October 3, 2022, 21:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X