சர்வதேச அளவில் பொருளாதார பலத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள சீனா தனது புதிய அதிரடியான கண்டுபிடிப்புகளால் உலகத்தை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், சீனாவை சேர்ந்த டீப் சீக் நிறுவனம் தனது ஏஐ சாட்பாட்டான டீப் சீக்கை அறிமுகம் செய்தது. அறிமுகம் சில தினங்களிலேயே உலகம் முழுவதும் டிரெண்டானது. இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஓப்பன் ஏஐ-யை விட, டீப் செக்கில் தகவல்கள சற்று தெளிவாகவும், திருத்தமாகவும் உள்ளது என்று இதன் பயனர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் டீப் சீக் பெரும் வரவேற்பு காணப்படுவதால் அந்நாட்டு ஏஐ துறையை சேர்ந்த நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். டீப் சீக் குறித்த பேச்சு இன்னும் உலகம் முழுவதும் அடங்காமல் ஒலித்து கொண்டிருக்கும் வேளையில், சீனா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உலகின் கவனத்தை தன் பக்கம் மீண்டும் திருப்பியுள்ளது.

சீனாவில் மனிதர்களுடன் இணைந்து நடனமாடும் பல மனித ரோபாக்களின் வீடியோ தான் தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோ கிளிப்பில், சீனாவில் நடந்த வசந்த விழா காலாவில் மனித நடன கலைஞர்களுடன் மனித ரோபாக்கள் நடனமாடும் காட்சி இடம் பெற்று இருந்தது.
அந்த மனித ரோபாக்களுக்கு மனித டச் கொடுக்கும் வகையில் ஆடைகளும் அணிவிக்கப்பட்டு இருந்தது. இந்த டான்ஸ் வீடியோ உலக முழுவதுமுள்ள மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த டான்ஸ் ஆடும் மனித ரோபாக்களை யூனிட்ரீ ரோபாட்டிக்ஸ் தயாரித்துள்ளது.
யூனிட்ரீ ரோபாட்டிக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்து இருந்தது. இந்நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் ரோபாக்கள் டான்ஸ் ஆடும் வீடியோவை பதிவேற்றம் செய்து, வசந்த விழா காலாவில் மனித ரோபா அறிமுகமாகிறது.
அனைவருக்கும் வணக்கம். மீண்டும் என்னை அறிமுகப்படுத்துக் கொள்கிறேன். நான் யூனிட்ரீ எச்1 ஃபக்ஸி, நான் இப்போது வசந்த விழா காலாவில் ஒரு நகைச்சுவை நடிகன்,அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் நம்பிக்கையுடன், ஒவ்வொரு நாளும் எல்லைகளை தாண்டி எதிர்காலத்தை ஒன்றாக வடிவமைப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனிட்ரீ நிறுவனம் கடந்த மாதம் 28ம் தேதி பதிவிட்டு இருந்தது. இதுவரை இந்த வீடியோவை 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோவுக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. பெரும்பாலான நபர்கள் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை பாராட்டினர். அதேசமயம் சிலர், ஏஐ ரோபாக்கள் புத்திசாலி மற்றும் மனிதனை போல மாறி வருவதாக தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.


Click it and Unblock the Notifications