அமெரிக்கக் கிழக்குக் கடற்கரையில் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா புதன்கிழமை கூறியுள்ளது.
ஆனால் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தினசரி விளக்கத்தின் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை, இதேபோல் நடவடிக்கைகள் எடுப்பதாக அறிவிக்கப்பட்ட விபரங்களையும் கொடுக்கவில்லை.
சீன அரசு இந்தப் பலூன் ஆளில்லா வானிலை விமானம் என்று கூறுகிறது, அது தற்செயலாகத் திசை மாறி அமெரிக்கா பக்கம் சென்றுள்ளது. ஆனால் அமெரிக்கா இதை F-22 போர் விமானத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டு வீழ்த்தி அமெரிக்கா மிகைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
சீன பலூன்
பிப்ரவரி 4ஆம் தேதி சீனாவின் உளவு பலூன் எனக் கூறப்பட்டு அமெரிக்க அரசு சுட்டு வீழ்த்தப்பட்டதில் இருந்து, பெய்ஜிங்கின் விண்வெளித் திட்டங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆறு சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஆறு சீன நிறுவனங்கள்
அமெரிக்க அரசு தடை செய்யப்பட்ட 6 நிறுவனங்கள் பட்டியல் இதுதான்
1. Dongguan Lingkong Remote Sensing Technology
2. Eagles Men Aviation Science and Technology Group
3.Guangzhou Tian-Hai-Xiang Aviation Technology
4. Shanxi Eagles Men Aviation Science and Technology Group
5. Beijing Nanjiang Aerospace Technology
6. China Electronics Technology Group Corporation
அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பல தலைவர்கள் சீனாவின் இந்த விசித்திரமான செயலை கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். இதேவேளையில் மாநில செயலாளர் ஆண்டனி பிளிங்கன் செல்ல திட்டமிட்ட நிலையில் இந்தப் பயணத்தை ரத்துச் செய்துள்ளார். ஏற்கனவே சீனா தைவான் மற்றும் தென் கிழக்கு கடல் பகுதி நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது பலூன் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ளது.
ஜப்பான்
இந்தப் பிரச்சனை அமெரிக்காவுக்கு மட்டுமல்ல செவ்வாயன்று, ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம், 2019 முதல் ஜப்பானிய வான்வெளியில் குறைந்தது மூன்று பறக்கும் பொருள்கள் கண்டதாகவும், அது சீன உளவு பலூன்கள் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஜப்பான், சீன அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
எப்22 ரகப் போர் விமானம்
3 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த சீனாவுக்குச் சொந்தமான பலூன் (UFO) ஒன்றை அமெரிக்க விமானப்படை முதல்முறையாகச் சுட்டு வீழ்த்தியது. இந்த அடையாளம் தெரியாத பொருளை அமெரிக்காவின் எப்22 ரகப் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. கிட்டத்தட்ட கார் அளவிற்கு இந்த யுஎப்ஓ இருந்துள்ளது.
3 பலூன்
இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் கனடா வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு (பலூன் - UFO) வீழ்த்தப்பட்டது. இதன் பின் நேற்றுக்கு முன் தினம் அதிகாலை மூன்றாவது முறையாக அமெரிக்கா - கனடா எல்லையில் லேக் ஹுரோன் என்று பகுதியில் மற்றொரு யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது.
பலூனில் என்ன இருந்தது
இந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அதில் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சாதனங்கள் அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா கிண்டல்
இதேவேளையில் அமெரிக்கா இதை UFO எனக் கூறி வருவதை ரஷ்யா கிண்டல் செய்து வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடா எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட 3 பலூன்களும் தீங்கற்றது அல்லது வர்த்தக ரீதியாகப் பறக்கவிடப்பட்ட பலூன்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 4 முறை சுட்டு 3 முறை பலூன் வீழ்த்தப்பட்டுக் கடலில் விழுந்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications