இந்தியா முழுவதும் மக்கள் 79வது சுதந்திர தினத்தை கொண்டாட தாயாராகி வரும் வேளையில், வர்த்தகர்கள் எப்படி அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை சமாளிப்பது என முட்டிமோதி வருகின்றனர். அமெரிக்காவுக்கு வர்த்தகம் செய்யும் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் 50 சதவீத வரி அமலாக்கம் செய்வதற்கு முன்பாக எவ்வளவு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியுமோ அவ்வளவும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் வரி விதிப்பை குறைக்கவும், நீக்கவும் மத்திய அரசு அந்நாட்டு அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் இதேவேளையில், இந்தியா சீனா, ரஷ்யா, ஐரோப்பா, இதர பிரிக்ஸ் நாடுகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்தியா - சீனா மத்தியிலான பிரச்சனைகளை தீர்க்க ஆகஸ்ட் 18 திங்கட்கிழமை அன்று, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியாவுக்கு வர உள்ளார் என பிடிஐ தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் சிறப்பு பிரதிநிதிகள் (Special Representatives) கட்டமைப்பு கீழ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களை சந்தித்து எல்லை பிரச்சினைகள் தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் SCO மாநாட்டில் கலந்துக்கொள்ளவும், ஜி ஜின்பிங்-ஐ சந்திக்கbgcd சீனா செல்ல உள்ள நிலையில், அடுத்த வாரம் இந்தியாவில் முக்கிய பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. பிரதமர் மோடி, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை SCO (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) மாநாட்டில் பங்கேற்க உள்ளார்
வாங் யி மற்றும் அஜித் தோவல் சந்திப்பு, இரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில், தற்போதைய இருநாட்டின் எல்லை பகுதியில் உள்ள நிலைமை மற்றும் Line of Actual Control பகுதியில் பாதுகாப்பை நிலைநாட்டுதல் ஆகியவற்று குறித்து இருக்கும்.
இதன் மூலம் இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முடிவு செய்ய உதவும். அஜித் தோவல் மற்றும் வாங் யி ஆகியோர் கடந்த ஜூன் மாதம் சந்தித்தனர், அப்போது தோவல் SCO நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்திற்காக சீனாவுக்கு பயணம் செய்தார்.
இந்திய அரசு அமெரிக்கா உடனான வர்த்தக பிரச்சனைகள் எழுந்ததை தொடர்ந்து சீனா உடனான நிலைப்பாட்டை மேம்படுத்த முடிவு செய்து, எலக்ட்ரானிக்ஸ் துறை உற்பத்தியில் சில சீன முதலீடுகளுக்கும், கூட்டணிக்கும் இந்திய அரசு பச்சை கொடி காட்டி வருகிறது. இந்த நிலையில் சீனா - இந்தியா மத்தியிலான நட்பு மற்றும் வர்த்தகம் ஆகஸ்ட் 18 சந்திப்பு மற்றும் பிரதமர் மோடி கலந்துக்கொளும் SCO மாநாட்டுக்கான சீன பயணம் முடிவு செய்யும்.


Click it and Unblock the Notifications