இந்தியாவுடனான உறவில் தலையிடாதீர்கள்.. அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவுடனான எங்களுடைய உறவில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகளை சீனா எச்சரித்துள்ளது என அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை காரணமாக, அமெரிக்கா இந்தியா இடையேயான உறவு என்பது மேம்பட்டு வரும் நிலையில், சீனா இப்படியொரு நடவடிக்கை எடுத்துள்ளதாக பென்டகன் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் லடாக் பகுதியில் நிலவிய அத்துமீறல் நடவடிக்கையை தொடர்ந்து, சீனா இந்தியா இடையேயான பிரச்சனை வெடித்தது. அந்த சமயத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த பிரச்சனையில் பல வீரர்கள் உயிரிழந்தனர்.

தொடரும் பதற்றமான நிலை

தொடரும் பதற்றமான நிலை

இதன் பிறகு இந்தியா சீனா இடையேயான பதற்றம் என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. எனினும் இப்பிரச்சனையை சுமூக நிலைக்கு கொண்டு செல்லும் விதமாக, அவ்வப்போது பேச்சு வார்த்தையும் நடந்து வருகின்றன. இதனால் பிரச்சனைகள் என்பது சற்று ஓய்ந்திருந்தாலும், சீனாவின் படைகள் அவ்வப்போது எல்லையில் ஊடுருவதும், பதற்ற நிலை அவ்வப்போது தொற்றிக் கொள்வதுமான நிலையே என்பதே தொடர்ந்து கொண்டுள்ளது.

பெண்டகன் கருத்து

பெண்டகன் கருத்து

இந்தியா எல்லையில் இருக்கும் சீனா படைகள் முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டு வரும் நிலையில், அதனை சீனா தரப்பில் முழுமையாக ஏற்றதாக தெரியவில்லை. இந்தியாவில் இதனால் ஒரு அதிருப்தியான நிலையே இருந்து வருகின்றது. இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான் இந்தியா - அமெரிக்கா உறவு என்பது வலுவடைந்து வருவதாகவும், இதனை சீனா விரும்பவில்லை என்றும் பெண்டகன் தெரிவித்துள்ளது.

சீன மக்கள் குடியரசு கட்சிஅதிகாரிகள் எச்சரிக்கையா?

சீன மக்கள் குடியரசு கட்சிஅதிகாரிகள் எச்சரிக்கையா?

இந்தியா சீனா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், பிற துறைகளும் பாதிக்கப்படுவதாக, சீனாவின் சீன மக்கள் குடியரசு கட்சி அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் தான் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு வலுப்படுவதாகவும் சீன மக்கள் குடியரசு கட்சி அதிகாரிகள் கூறியுள்ளதாகவும், இதனால் பிரச்சனையை சீனா குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது. இப்பிரச்சனைகளுக்கு நடுவில் அமெரிக்காவினை தலையிட வேண்டாம் என சீன மக்கள் குடியரசு கட்சி அதிகாரிகள் எச்சரித்திருப்பதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

பதற்றமான  நிலை

பதற்றமான நிலை

சீனா இந்தியா இடையேயான பதற்றத்தில் மத்தியில் ஒரு புறம் பதற்றமான நிலை இருந்து வரும் நிலையில், மறுபுறம் எல்லை பகுதியில் சீனா தனது ராணுவ கட்டமைப்புகளை பலப்படுத்தியும் வருகின்றது. .

மொத்தத்தில் இந்திய எல்லைக்குள் சீனாவும், சீன எல்லைக்குள் இந்தியாவும் நுழைந்ததாக பரபரப்பான ஒரு சூழலே இருந்து வருகின்றது.

வணிகம் என்னவாகும்?

வணிகம் என்னவாகும்?

இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் என்பது தொடர்ந்து கொண்டிருந்தாலும், அதில் ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இன்றளவிலும் இந்தியா மிகப்பெரிய சந்தை என்பதால் சீன நிறுவனங்கள் பலவும் இங்கு தங்களது வணிகத்தினை செய்து வருகின்றது. அதேசமயம் சமீபத்திய ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கு இடையேயான வணிக போக்கு என்பது வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது.

மாறி மாறி குற்றம்

மாறி மாறி குற்றம்

இரு நாடுகளும் முன்பு இருந்த அதே சுமூக நிலை தொடர வேண்டும் என்று நினைத்த நிலையில், படைகளை திரும்ப பெற வேண்டும் என இந்தியாவும் சீனாவும் வலியுறுத்தின. ஆனால் இரு நாடுகளும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களுக்கு சொந்தமான பகுதியில் இந்திய உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தியதாக ஏற்படுத்தியதாக சீனா குற்றம் சாட்டியது. அனால் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில் சீனா உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தியதாக, இந்தியா குற்றம் சாட்டியும் வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China warned USA officials not to interfere with India relationship: Pentagon

China warned USA officials not to interfere in our relations with India, the Pentagon said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X