சமூக ஊடகங்களில் பரவி வரும், எல்லை தாண்டிய டேட்டிங் கண்டென்ட்கள் மூலம் ஏமாற வேண்டாம் என்று வங்கதேசத்தில் உள்ள சீனத் தூதரகம் தனது குடிமக்களை கடுமையாக எச்சரித்துள்ளது. சீன அரசின் ஆதரவு பெற்ற குளோபல் டைம்ஸ் (Global Times) செய்தியின்படி, வங்கதேசத்திலிருந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு எதிராக சீனா தனது நாட்டில் உள்ள ஆண்களை ஞாயிற்றுக்கிழமை எச்சரித்துள்ளது. இது எல்லை தாண்டிய திருமண மோசடிகள் மற்றும் மனிதக் கடத்தல் குறித்த கடுமையான பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
வங்கதேசத்தில் உள்ள சீனத் தூதரகம், சமூக ஊடகங்களில் பரவும் எல்லை தாண்டிய டேட்டிங் தொடர்பான கண்டென்ட்கள் மூலம் ஏமாறுவதைத் தவிர்க்குமாறு அதன் குடிமக்களை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, சட்டவிரோத செயல்படும் திருமண முகவர்களிடமிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. வங்கதேச பெண்ணை திருமணம் செய்வதற்கு முன் இருமுறை யோசியுங்கள் என்று தூதரகம் நேரடியாகவே தெரிவித்துள்ளது.

ஷாட் வீடியோ தளங்களில் காதல் மோசடிகள் குறித்து சீனக் குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இதனால் அவர்கள் தனிப்பட்ட மற்றும் நிதி இழப்புகளைத் தவிர்க்க முடியும் என்றும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை பாதிக்கப்பட்டால், உடனடியாக சீன அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
வங்கதேசத்தின் நீதித்துறை நடைமுறைகள் மிகவும் நீண்டவை என்றும், அதனால் மனிதக் கடத்தல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் நீண்ட காலத்திற்குச் சட்ட சிக்கல்களில் (red tape) சிக்கிக் கொள்ள நேரிடும் என்றும் தூதரகம் எச்சரித்துள்ளது. லாபத்திற்காகவோ அல்லது ஏமாற்றுவதன் மூலமாகவோ திருமணப் பொருத்த சேவைகளில் ஈடுபட சீன சட்டம் ஏஜென்சிகளை அனுமதிக்கவில்லை என்பதையும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உண்மையில் நடந்த சோக சம்பவம்:
மணப்பெண் கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல்: இந்த எச்சரிக்கைகளுக்குக் காரணமான ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. ஜூலை 2023 இல், வங்கதேசத்தின் சுவாடங்காவைச் சேர்ந்த ஒரு விதவைப் பெண், தனது மகளை குய் போ வெய் (Gui Bo Wei) என்ற சீனக் குடிமகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். ஒரு திருமணப் பொருத்த நிறுவனம் என்ற போர்வையில் செயல்பட்ட கடத்தல்காரர்கள், காசிப்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த சீன நபர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டதாகவும், வங்கதேசத்தில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகவும் சிறுமியின் குடும்பத்தினரை நம்ப வைத்தனர்.
இருப்பினும், திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்த நபர் சிறுமியை சீனாவுக்கு அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. பின்னர் கடத்தல்காரர்கள் அந்தப் பெண்ணை சீன நபருக்கு 10 லட்சம் டாக்காக்களுக்கு (சுமார் 12,000 அமெரிக்க டாலர்) விற்றதும் அம்பலமானது. இந்தச் சம்பவம், எல்லை தாண்டிய திருமண மோசடிகள் எவ்வாறு மனிதக் கடத்தல் மற்றும் சுரண்டலுக்கு வழிவகுக்கின்றன என்பதற்கு ஒரு பயங்கரமான உதாரணமாகும்.
சீனாவின் எஞ்சியிருக்கும் ஆண்கள் பிரச்சனையும் பாலின ஏற்றத்தாழ்வும்: சீனாவில் திருமணமாகாத 30 மற்றும் 40 வயதுடைய சுமார் 35 மில்லியன் Leftover Men உள்ளனர். சீனா பல தசாப்தங்களாக அமல்படுத்திய ஒரு குழந்தை கொள்கை (One-Child Policy) மற்றும் ஆண் குழந்தைகளுக்கு சமூகத்தில் உள்ள விருப்பத்தால் ஏற்படும் தீவிரமான பாலின ஏற்றத்தாழ்வு காரணமாக பெண்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல ஆண்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளனர். இவர்களை தான் Left Over Men என அழைக்கப்படுகின்றனர்.
இந்தப் பாலின ஏற்றத்தாழ்வு, சீன ஆண்கள் வெளிநாட்டு மணப்பெண்களைத் தேட தூண்டியுள்ளது, வெளிநாடு பெண்களை திருமணம் செய்துக்கொள்ள தயாரான ஆண்களின் எண்ணிக்கையை தற்போது சீனாவில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கி, சட்டவிரோத திருமண முகவர்களும், மனிதக் கடத்தல்காரர்களும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஆண்களையும், பெண்களையும் குறிவைக்கின்றனர்.
இத்தகைய மோசடிகள், சீனா மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளின் சமூக அமைப்புகளிலும், சர்வதேச குற்றவியல் நெட்வொர்க்குகளின் பரவலிலும் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சீன அரசு தனது குடிமக்களை இது குறித்து எச்சரிப்பதன் மூலம், இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாக்கவும் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்தப் பிரச்சனை வெறும் தனிப்பட்ட நிதி இழப்பு மட்டுமல்லாமல், மனித உரிமைகள் மீறல் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடையது என்பதை இந்த எச்சரிக்கைகள் உணர்த்துகின்றன.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications