மனிதர்கள் மத்தியில் மிகவும் அரிதாக பரவும் பறவைக் காய்ச்சலால் உலகிலேயே முதல் முறையாக ஒருவர் சீனாவில் இறந்துள்ளார். சீனாவில் கொரோனா தொற்று உலக மக்களை வாட்டி வதைத்து முதல் அலை, 2வது அலை,3வது அலை என தொடர்ந்து மக்களை பாடாய்படுத்தி வரும் வேளையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

இதற்கிடையில் சீனாவில் இருந்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஒரு வகை பறவை காய்ச்சலால் ஒரு சீனப் பெண் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார் என உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதோடு இந்த விநோத பறவை காய்ச்சல் மக்களிடையே பரவுவதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளது WHO.
சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்க்-ஐ (Guangdong) சேர்ந்த 56 வயதான பெண் பறவைக் காய்ச்சலின் H3N8 துணை வகையான avian influenza-ஆல் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் என்று WHO செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. Avian influenza-வால் பாதிக்கப்பட்ட 3 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் தான். இதில் முதல் இரண்டு தொற்று பாதிப்பு கடந்த ஆண்டு பதிவாகியுள்ளன, மூன்றாவதாக பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்துள்ளார்.
குவாங்டாங் மாகாண நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் கடந்த மாத இறுதியில் Avian influenza-வால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் குறித்து உலக சுகாதார அமைப்புக்கு தகவல் அளித்தது. ஆனால் பெண்ணின் மரணம் குறித்து அறிவிப்பை சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

H3N8 துணை வகையான avian influenza-வால் பாதிக்கப்பட்ட 3வது நபர்
நோயாளி உடலில் பல பிரச்சனைகள் இருந்ததாகவும், இவர் கோழி பண்ணையில் பணியாற்றிய வரலாறு உள்ளதும் தெரிய வந்துள்ளது. சீனாவில் பறவைக் காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்படுவது அவ்வப்போது ஏற்படுவது தான் என்றாலும், avian flu virus பெரிய கோழி பண்ணைகள், காட்டு பறவைகளில் மட்டுமே காணப்படும் நிலையில் இதன் மூலம் பாதிக்கப்பட்டு ஒருவர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
H3N8 வகை தொற்று பறவைகள் மத்தியில் பரவுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், மனிதர்களுக்கு பாதிப்பு என்பது அரிதானது, அதிலும் இதன் மூலம் மரணம் என்பது இதுவரையில் நடக்காத ஒன்று. இதுவரையில் H3N8 துணை வகையான avian influenza-வால் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதால், உலகில் பிற நாட்டு மக்கள் பயப்பட தேவையில்லை.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications