உலகின் உற்பத்தி இன்ஜின் ஆக விளங்கும் சீனாவில் எப்போதும் இல்லாத வகையில் மே மாதம் அந்நாட்டின் லேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. சீன அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புள்ளியியல் அமைப்பு இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
மே மாதம் சீனாவின் 16 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் எப்போதும் இல்லாத வகையில் 20.8 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இது ஏப்ரல் மாதம் வரலாற்று உச்ச அளவு முந்தியுள்ளது. இதேபோல் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் வேலைவாய்ப்பின்மை அளவு மே மாதம் 5.2 சதவீதமாக உள்ளது.

இதேவேளையில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அளவீடு மே மாதத்தில் 7.7 சதவீதமாக உள்ளது, பிரிட்டன் நாட்டின் ஏப்ரல் மாதம் 3.8 சதவீதம், ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3.6 சதவீதமாக உள்ளது. கடந்த 3 மாதத்தில் உலக நாடுகளில் வேலைவாய்ப்பின்மை விகிதம் சரிந்து வருகிறது.
அமெரிக்க பொருளாதாரத்துடன் போட்டிப்போட்டு வரும் சீனா அடுத்த சில வருடத்தில் ஜிடிபி அளவில் அமெரிக்காவை முந்தும் என கணிக்கப்படும் வேளையில், அந்நாட்டின் அதிகப்படியான மக்கள் தொகை காரணமாக தனிநபர் வருமானத்தில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்பதால் வல்லரசு நாடாக மாற முடியாது என்ற இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்த நிலையில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை அளவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏற்கனவே சீனாவில் முதியோர் மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருக்கும் வேளையில், நடுத்தர வயதுடையவர்கள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பது, இளம் தலைமுறையினர் சரியான வேலைவாய்ப்பு பெற முடியால் இருப்பது என சீனாவின் அடுத்த தலைமுறையின் நிலை மிகவும் மோசமான கட்டத்திற்கு செல்கிறது.
கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்பு சீனாவின் உள்நாட்டு ரீடைல் விற்பனை சூடுப்படித்துள்ளது. இதன் மூலம் மே மாதம் சீனாவின் ரீடைல் விற்பனை கடந்த ஆண்டை விடவும் 12.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் தொழிற்துறை உற்பத்தி 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சீனாவின் பொருளாதாரம் 2023ல் முதல் 2 காலாண்டுகள் தடுமாற்றத்துடன் காணப்பட்டாலும், அடுத்த 2 காலாண்டில் உயர்வுடன் காணப்படும். இதன் மூலம் 2023ல் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதம் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications