சீனா அரசு சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஹைய் டெக் உற்பத்தித் துறையை அடியோடு காலி செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் உயர் தொழில்நுட்ப தொழில்களில் பயன்படுத்தப்படும் பிற முக்கிய தாது மற்றும் உலோகங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது.
சீன அரசின் இந்த நடவடிக்கையை முதலில் பெரிதாக கண்டுகொள்ளாத டிரம்ப் அரசு, சீனா மீது கண்மூடித்தனமாக வரியை விதித்தது. ஆனால் சீனாவின் இந்த முடிவு அமெரிக்காவின் பாதுகாப்பு உற்பத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு துறைகளை ஆபத்தில் தள்ளியுள்ளது என்பது தான் உண்மை.

இந்த நிலையில் டிரம்ப் அரசு கடந்த வாரம் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பின் மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை முழுமையாக உணர்ந்து வரியை திரும்ப பெற்று நிதானத்திற்கு வந்தது. இந்த நிலையில் தான் சீனாவின் இந்த முடிவு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை டிரம்ப் நிர்வாகம் உணர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து இந்த வாரம் முதல் சீன அரசு ஆறு அரிய பூமி உலோகங்கள் மற்றும் அரிய பூமி காந்தங்களின் ஏற்றுமதியையும் நிறுத்தியுள்ளது. இதேபோல் சீனாவில் இருந்து இந்த உலோகங்களை வாங்கி அமெரிக்காவுக்கும், அதன் நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களையும் சீனா தடை செய்யப்பட்ட பட்டியலில் வைத்தது.
இதனால் அமெரிக்காவில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள், விண்வெளி உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள் மற்றும் இராணுவ ஒப்பந்தக்காரர்களுக்கு முக்கியமான பாகங்களின் விநியோகமும் முடக்கியுள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை ஏப்ரல் 15ஆம் வெளியிட்ட அறிவிப்பில் டொனால்ட் டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் முக்கியமான தாதுக்கள் மற்றும் அதன் இணை பொருட்கள் தொடர்பாக அமெரிக்கா எந்த அளவுக்குப் பிற நாடுகளை நம்பியுள்ளது, எந்த துறைக்கு எந்த உலோகம் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பது தொடர்பாக விசாரணை தொடங்க ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
இந்த விசாரணையின் முடிவில் ஒரு அறிக்கை வெளியிடப்படும். அதில் அமெரிக்கா எதிர்கொள்ளும் அபாயங்கள் விரிவாக விளக்கப்பட்டு இருக்கும். இதன் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துதல், வெளிநாட்டு சப்ளையர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல், அமெரிக்க பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அமெரிக்க அரசு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிய பூமி தாதுக்கள், பிராசஸ் செய்யப்பட்ட பிற முக்கிய தாதுக்கள் மற்றும் அவற்றின் துணை பொருட்களை கொண்டு தான் முக்கிய கட்டுமானத் பொருட்கள் மற்றும் ஜெட் என்ஜின்கள், ஏவுகணை அமைப்புகள், அட்வான்ஸ் கம்பியூட்டிங், ரேடார் அமைப்புகள், அட்வான்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது. சீனாவின் இந்த ஏற்றுமதி நிறுத்தம் அமெரிக்காவில் முக்கிய துறைகளை கடுமையாக பாதித்துள்ளது.
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications