சீனா உலகளவில் பல தொழில்களில் தனது ஆதிக்கத்தை நாம் நினைக்கு முடியாத அளவுக்கு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. சீனா உலக நாடுகளுக்கு நெருங்கிய தொடர்பு இல்லாமல் இருந்தாலும், தனது மக்கள் தொகையின் பலத்தின் வாயிலாக உற்பத்தி துறையில் பெரும் ஆதிக்கத்தை கடந்த 30 வருடங்களாக நிலைநிறுத்தி வருகிறது.
ஆரம்பத்தில் மேற்கத்திய நாடுகளின் பொருட்களை அப்படியே காஃபி அடித்து போலியான பொருட்களை தயாரித்து சீப்பான விலையில் உலகம் முழுவதும் விற்பனை செய்தது. இது பல காலமாக பெரும் விமர்சனமாக இருந்தாலும், சீனா இதை மிகப்பெரிய அளவிலான படிப்பினையாக எடுத்துக்கொண்டது.

கடந்த 15 வருடத்தில் டெக்னாலஜி முதல் உற்பத்தி வரையில், உற்பத்தி பொருட்கள் தயாரிப்பதில் இருந்து உலகம் முழுவதும் சப்ளை செயின் கொண்டு இருப்பது வரையில் பல விஷயங்களை சீனா முடிசூடா மன்னாக உள்ளது. சீனா மட்டும் தனது உற்பத்தி, சப்ளை செயினை முடிக்கினால் சர்வதேச பொருளாதாரம் ஸ்தம்பித்து போகும் அளவுக்கு தான் இன்று உலக நாடுகள் உள்ளது.
சீனா தற்போது உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது, ஆயினும் சுமார் 8 துறையில் சீனா அமெரிக்காவை விடவும் மிகப்பெரிய பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றால் மிகையில்லை. இப்படி எந்த 8 துறையில் சீனா மாஸ் காட்டி வருகிறது என்பதை தான் இந்த செய்தியில் முழுமையாக பார்க்கப்போகிறோம்.
முதல் பாலில் சிக்சர்:
EV துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் இல்லாமல் அனைவருக்கும் மலிவான விலையில் உயர்தர பொருட்களை வழங்குவது எப்படி என்ற நோக்கத்தில் சீனாவின் எலக்ட்ரிக் வாகன (EV) துறை சீன அரசின் உதவிகளோடு தனது பணிகளை துவங்கியது. இதன் விளைவு சீனாவில் 80 சதவீத இரு சக்கர வாகனம் எலக்ட்ரிக் வாகனம். இதேபோல் கார் விற்பனையில் வேமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதில் முக்கியமாக BYD நிறுவனம் டெஸ்லாவை முந்தி உலகளாவிய விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பகுதிகளுக்கு அதிகளவிலான கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் இதன் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது.

பேட்டரி மற்றும் எனர்ஜி சேமிப்பு துறை:
பேட்டரி மற்றும் எனர்ஜி சேமிப்பு துறையில் சீனா மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. CATL மற்றும் BYD நிறுவனங்கள் உலகளாவிய EV பேட்டரிகளில் 50%க்கும் மேற்பட்ட பங்கைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், சீனா லித்தியம் சுத்திகரிப்பு தொழிலில் உலகளவில் 70 சதவீதத்திற்கும் அதிகமாகவும், பேட்டரி செல் உற்பத்தில் சுமார் 75 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டுப்படுத்தி வருகிறது.
இந்த ஆதிக்கம், கிரீன் எனர்ஜி துறையில் சீனாவின் முக்கிய பங்கை உறுதிப்படுத்துகிறது, இது உலகளாவிய சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைகிறது. சீனா தனது பேட்டரி டெக்னாலஜி, பேட்டரி உற்பத்தி, லித்தியம் சுத்திகரிப்பை நிறுத்திவிட்டால் சர்வதேச EV துறை ஒட்டுமொத்தமாக முடங்கும் அளவுக்கு நிலைமை உள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை:
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உபகரணங்களில் சீனாவின் ஆதிக்கம் பிரம்மிக்க வைக்க கூடிய வகையில் உள்ளது. சோலார் பேனல்களை உற்பத்தி செய்யும் துறையில், சீனா உலகளாவிய PV செல்கள் மற்றும் மாட்யூல்களில் 80%க்கும் மேற்பட்ட பங்கைக் கொண்டுள்ளது. காற்றாலை துறையில், Goldwind மற்றும் Envision போன்ற சீன நிறுவனங்கள் உலகளவில் முக்கிய நிறுவனங்களாக உள்ளன.

செயற்கை நுண்ணறிவு துறை:
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படை மாடல்களில் DeepSeek, Baichuan, Zhipu AI, மற்றும் iFLYTek போன்ற சீன நிறுவனங்கள் GPT-அளவிலான திறனைகளை காட்டும் ஒரு ஏஐ மாடலாக உள்ளது. சினா தற்போது அதிகளவிலான AI மாடல்களை உருவாக்குவது மட்டும் அல்லாமல் அதை அப்பிளிகேஷன் மாடலாக உருவாக்கி வருகிறது.
அதாவது ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற திறன் வாய்ந்த ஏஐ மாடல்களை உருவாக்கியும், மேம்படுத்தியும் வருகிறது. இதை இன்னும் எந்த நாடும் கையில் எடுக்கவில்லை என்பது முக்கியமாக விஷயம்.
உதாரணமாக சீனாவின் உற்பத்தி துறைக்கென தனி ஏஐ மாடல் உருவாக்கப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள், இது துறை சார்ந்த ஏஐ மாடல் என்பதால் இதன் செயல்பாட்டு திறன் அதிகமாக இருக்கும், இதேபோல் உற்பத்தி திறனை ராக்கெட் வேகத்தில் வேகப்படுத்த முடியும். இதையே ஷிப்பிங், லாஜிஸ்டிக்ஸ், உற்பத்தி பொருட்கள் சப்ளையர்களுக்கான ஏஐ மாடல்களுடன் இணைக்கப்பட்டால், இதன் பவரை சொல்லில் அடங்காது.
கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் துறை:
கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் துறையில், Xiaomi, Lenovo, மற்றும் TCL போன்ற நிறுவனங்கள் Apple மற்றும் Samsung போன்ற உலக பிரபல நிறுவனங்களை காட்டிலும் உற்பத்தி, வர்த்தகத்தில் முன்னோடியாக உள்ளது. இந்த வளர்ச்சி, சீனாவின் புதுமையான தயாரிப்புகள் மற்றும் சந்தை ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது.

அதிவேக ரயில் துறை:
High-Speed Rail(HSR) துறையில், சீனா உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்கை வைத்துள்ளது. மேலும் ரயில் உற்பத்தி முதல் ரயில் இயக்கம் வரையில் சொந்த தயாரிப்பு என்பதால் இந்த தொழில்நுட்பத்தை சீனா அரசு இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு துறை:
தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு துறையில், Huawei மற்றும் ZTE போன்ற நிறுவனங்கள் 5G தொழில்நுட்பத்தில் தலைசிறந்த நிறுவனமாக நிற்கிறது. இந்த நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்கு செலவு குறைந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வருகின்றன. இதேபோல் சீன டெலிகாம் நிறுவனங்கள் உலகளவில் பல சவால்களையும், தடைகளையும் எதிர்கொண்டுள்ளது.
உலகின் தொழிற்சாலை துறை:
சீனா இன்னும் "உலகின் தொழிற்சாலை" என்று அழைக்கப்படும் உற்பத்தி மையமாக உள்ளது. ரசாயனங்கள், நெசவு பொருட்கள் மற்றும் இயந்திர கருவிகள் போன்ற பல துறைகளில் தலைசிறந்து சினா தனித்து நிற்கிறது. உலகளாவிய உற்பத்தியில் சீனாவின் பங்கு மட்டும் 45 சதவீதம்.

சீனாவின் வளர்ச்சி இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் அமெரிக்க போன்ற வல்லரசு நாடுகளுக்கே சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. சீனாவின் இந்த வேகமாக வளர்ச்சியை போட்டியாக பார்ப்பதை காட்டிலும் பாடமாக எடுத்துக்கொண்டால் வேகமாக வளர்ச்சி அடைய முடியும்.
இதேபோல் சீன அரசு, அந்நாட்டு உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப தனது வர்த்தக வழிகளையும், வர்த்தக ஒப்பந்தங்களையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சீன நிறுவனங்களுக்கு வர்த்தகம் செய்ய தொடர்ந்து புதிய சந்தை கிடைத்து வருகிறது. இதேபோல் சீன பொருட்களுக்கு ஏதேனும் ஒரு நாடு தடை விதித்தால் அத்துறையில் ஏற்படும் பாதிப்பை குறைக்க வரி குறைப்பு, ஊக்க தொகை, கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பது, மானியம், நிதியுதவி அளிப்பது என அரசு பல வகையில் உதவி செய்கிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications