இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இருந்த பகைமை உணர்வு மாறி தற்போது தான் இரு நாடுகளும் நெருங்கி வர தொடங்கி இருக்கின்றன . இருந்தாலும் அவ்வப்போது சீனா தன்னுடைய வேலையை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது .
சீனா பிரம்மபுத்திரா அணை மூலம் குடைச்சல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது. பிரம்மபுத்திரா நதியின் மீது உலகின் மிகப்பெரிய நீர் கட்டுமான திட்டத்தை சீனா திட்டமிட்டு இருக்கிறது. இது இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதிகரித்திருக்கிறது. பிரம்மபுத்திரா நதியின் மீது பெரிய அளவிலான நீர்மின் அமைப்பை கட்டமைக்கிறது சீனா.

இது பிரம்மபுத்திரா படுகையை சார்ந்திருக்க கூடிய பகுதிகளில் எல்லாம் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. சீனாவில் யார்லுங் சாங்க்போ என அறியப்படும் நதி இந்தியாவில் பிரம்மபுத்திரா நதி என அழைக்கப்படுகிறது. இந்த நதி சீனா, திபெத் மற்றும் இந்தியா , வங்கதேசம் ஆகிய நாடுகளில் பயணம் செய்கிறது இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் இந்த பிரம்மபுத்திரா நதியை நம்பி தான் விவசாயம் செய்கிறார்கள்.
சீனா இந்த நதியின் மீது மிகப்பெரிய ஒரு அணையை கட்டுகிறது. சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவலின்படி இந்த பிரம்மபுத்திரா நதியின் இயற்கையான நீரோட்டத்தில் சீனா கொண்டு வரக்கூடிய மாற்றம் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என கூறுகிறது. 168 பில்லியன் டாலர்கள் மதிப்பில் சீனா பிரம்மபுத்திரா ஆணையின் குறுக்கே மிகப் பெரிய அணையை கட்டுகிறது. இது Climate friendly என சீனா கூறினாலும் இந்த நதியை பாயும், பகுதிகளில் சுற்றுச்சூழல் அமைப்பையே இது சீர்குலைக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இந்த இடமே சிக்கலான ஒரு இடம் , சென்சிடிவான இடம் என்கின்றனர் புவியியல் நிபுணர்கள். இங்கே கட்டுமான தொழில்நுட்ப ரீதியாகவே மிகவும் சிக்கலானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அணைகள் ,நீர் தேக்கங்கள் சுரங்கப் பாதைகளால் இணைக்கப்பட்ட நிலத்தடியில் செயல்படக்கூடிய மின் நிலையங்கள் உள்ளிட்டவை அனைத்தும் இணைந்த ஒரு பெரிய நீர் கட்டுமான அமைப்பாக இது இருக்கும் என்கிறது சீனா.

வாஷிங்டனில் இருக்கக்கூடிய சிம்சன் மையத்தின் இயக்குனர்களுள் ஒருவரான பிரைன் லயர் இந்த கட்டுமானத் திட்டம் இதுவரை பூமி கண்டிராத மிக ஆபத்தான திட்டம் என்று கூறியிருக்கிறார். சீனாவோ பல ஆண்டுகால ஆய்வுக்குப் பின்னர் தான் இந்த நீர் கட்டுமான திட்டத்தை நாங்கள் முடிவு செய்தோம் என விளக்கம் தந்திருக்கிறது.
சீனாவின் இந்த திட்டம் இந்தியாவிற்கு தான் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர் . ஏனெனில் ஒரு நதியின் மேல் பகுதியில் உள்ள நீரோட்டத்தில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் அந்த நதி பாய்ந்து செல்லக்கூடிய அனைத்து பகுதிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதாவது வண்டல் படிவுகளின் நகர்வு , மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களின் இடம்பெயர்வு , பருவ காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு என அனைத்துமே இதனால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எல்லைப் பகுதியில் பிரச்சனையை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே சீனா இது போன்ற கட்டமைப்பு திட்டங்களை கொண்டு வருவதாக குற்றம் சாட்டுகிறார் டெல்லியில் இருக்கும் ஆசிய சொசைட்டி பாலிசி நிறுவனத்தின் துணை இயக்குனரான ரிஷி குப்தா . முன்னதாக அருணாச்சல பிரதேச அரசு கூட சீனாவின் இந்த அணை திட்டம் மிகப்பெரிய ஒரு water bomb என குற்றம் சாட்டியது . மத்திய அரசு சீனாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியிருக்கிறது. இந்தியாவும் 11,200 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஒரு அணையை பிரம்மபுத்திரா மீது கட்ட முடிவு செய்திருக்கிறது.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications