டிரம்ப் உருவாக்கிய வர்த்தக போர் தற்போது அமெரிக்காவுக்கு எதிராக மாறி வருகிறது. சற்றும் எதிர்பார்க்காத வகையில் பல பின்னடைவுகளை அமெரிக்கா எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக சீனா அமெரிக்காவை மட்டும் அல்லாமல் உலகில் எந்தொரு நாடாக இருந்தாலும் எதிர்த்து நிற்க முடியும். இதற்கு முக்கிய காரணம் சுயசார்பு.
ஒருப்பக்கம் எப்போதும் இல்லாத வகையில் ரஷ்யா, இந்தியா, சீனா மத்தியிலான நட்பு அதிகரித்துள்ளது அமெரிக்காவுக்கு பெரிய பின்னடைவாக அந்நாட்டு அரசு வட்டாரத்தில் சூடு கிளப்பியுள்ளது.

ரஷ்யா இந்தியா, சீனா பொருட்களை வாங்க தயாராகியுள்ளது. இதேபோல் இந்தியா, சீனா ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்து வருகிறது. சீனா இந்தியாவுக்கு பல துறையில் தொழில்நுட்பத்தை பகிர தயாராகியுள்ளது. இந்தியாவும் சீனாவின் முதலீட்டை ஏற்க தயாராகி வருகிறது.
மறுபுறம் டிரம்ப்-ன் வரி விதிப்பால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இதனால் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க அரசின் தங்க இருப்பை காட்டிலும் அதிகமாகியுள்ளது. இது அனைத்தும் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியுள்ளது.
இப்படியிருக்கியில் சீனாவின் சுயசார்பு கொள்கை உலக நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவுக்கு முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது.
சீனாவில் கடந்த 10 மாதங்களாக எல்என்ஜி (திரவம் இயற்கை எரிவாயு) இறக்குமதியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, இது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாட்டில் எரிசக்தியில் யாரையும் நம்பாமல் சுயசார்பு நிலையை அடையும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம், உலக எல்என்ஜி ஏற்றுமதி நாடுகளுக்கு சவாலாகவும், இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு நன்மையாகவும் அமையும். கடந்த 10-15 ஆண்டுகளில் சீனாவின் எரிசக்தி தேவையில் எந்த அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது தெரியுமா..?

2019 முதல் டீசல் தேவை குறைவு
சீனாவின் டீசல் தேவை 2019 ஆம் ஆண்டு வரலாற்று உச்சத்தை தொட்டது. ஆனால் அதன் பின்பு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறை சரிவு அடைந்தது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரியல் எஸ்டேட் பங்கீடு 2019ல் 30 சதவீதத்திலிருந்து தற்போது 18 சதவீதமாக சுருங்கியது.
கட்டுமானத் துறையில் குறைந்த தேவை, போக்குவரத்து மற்றும் உபகரணங்களின் பயன்பாடு குறைவு, மேலும் எல்என்ஜி டிரக்குகளின் அதிகரிப்பு ஆகியவை சீனாவில் டீசல் நுகர்வை வெகுவாகக் குறைத்துள்ளன. இது சீனாவின் பொருளாதார மாற்றத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
சீனா டீசல்-ஐ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வந்த காரணத்தால் விலை குறைவான எல்என்ஜி பயன்பாட்டை அதிகரிக்க கொள்கை வழியில் மாற்றத்தை ஏற்படுத்தியது சீனா. இதன் விளைவாக டீசல் பயன்பாடு 2019 முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது.
2023-ல் பெட்ரோல் உச்சம்
2019-ல் டீசல் உச்சத்தை எட்டியது போலவே, 2023 ஆம் ஆண்டில் பெட்ரோல் தேவையும் சீனாவில் உச்சத்தை தொட்டது. இதை குறைக்கும் முயற்சியாக எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் விற்பனை வேகமாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டது. இப்போது சீனாவில் விற்கப்படும் கார்களில் பாதிக்கும் மேல் இந்த EV வாகனங்கள்.
இதன் விளைவாக, 2024 ஆம் ஆண்டில் பெட்ரோல் விற்பனை வருடாந்திர அளவில் 9 சதவீதம் சரிந்தது. இந்த மாற்றம் மூலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் குறைந்தது மட்டுமல்லாமல், சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பான போக்குவரத்து முறை உருவானது.

எல்என்ஜி இறக்குமதி தொடர் வீழ்ச்சி
சீனா டீசல், பெட்ரோல் தொடர்ந்து தற்போது எல்என்ஜி பயன்பாட்டை குறைத்து வருகிறது. சீனாவின் எரிசக்தி சுயசார்பு முயற்சிகள் வேகமெடுத்ததன் விளைவாக கடந்த 10 மாதங்களாக எல்என்ஜி இறக்குமதியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் எல்என்ஜி இறக்குமதி வருடாந்திர அளவில் 9 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
இதனால், 2024 ஆம் ஆண்டில் சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக குறைந்தது. இந்த வேகமான மாற்றம், உலகில் இதுவரை காணாத ஒன்று, சீனாவின் எரிசக்தி சுயசார்பு உலக நாடுகளுக்கு பெரும் பாடமாக அமைந்துள்ளது.

செமிகண்டக்டர்:
சீனா எரிசக்தியில் மட்டுமல்ல செமிகண்டக்டர் துறையிலும் சுயசார்பு நிலையை அடைந்து வருகிறது. அமெரிக்கா அரசு கடந்த 5 வருடத்தில் சீனாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க நடப்பு நாடுகளின் நிறுவனங்கள் செமிகண்டக்டர் சிப், சிப் தயாரிப்புகள் கருவிகள், சிப் தயாரிப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை விற்க கூடாது என சட்டத்தை இயற்றியது.
இதை தொடர்ந்து டிரம்ப் ஆட்சியில் சீனா தனத அரிய உலோகத்தை அமெரிக்காவுக்கு விற்க கூடாது என உத்தரவிட்ட நிவையில், டிரம்ப் அரசு சீனா மீதான நிலைப்பாட்டை ஓவர்நைட்டில் மாற்றியது. இதை தொடர்ந்து என்விடியா, ஏஎம்டி ஆகிய நிறுவனங்கள் சீனாவுக்கு சிப் விற்கவும் அனுமதி கொடுத்தது.

ஆனால் சீனா அரசு, அந்நாட்டு நிறுவனங்களை என்விடியா, ஏஎம்டி சிப்களை வாங்க வேண்டாம் எனவும், உள்நாட்டு நிறுவனங்களை பயன்படுத்தி தேவையை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யவும் கட்டளையிட்டது. இது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இப்படி சீனா ஒவ்வொரு துறையிலும் சுயசார்பு நிலையை அடைந்து வரும் வேளையில் அமெரிக்கா மட்டும் அல்லாமல் எந்தொரு நாடாக இருந்தாலும் எதிர்த்து நிற்கும். இதேபோன்ற திறனை இந்தியாவும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
More From GoodReturns

தமிழ்நாட்டில் எத்தனை நாட்களுக்கு பெட்ரோல் இருப்பு உள்ளது? – பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் தகவல்

15 நாட்களில் 40% மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை: ஈரான் போர் முடிவது தான் தீர்வா?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications