சீனாவின் வணிக அமைச்சகம் அரிய உலோக காந்தங்களின் (NdFeB, SmCo) ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, இதனால் இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என சமீபமாக அதிகளவில் கேள்விப்பட்டு இருக்கிறோம்.உண்மையில் என்ன பிரச்சனை..? இந்திய ஆட்டோமொபைல் துறை எந்த அளவுக்கு பாதித்துள்ளது..? சீனா அரிய உலோக துறையில் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது..? இந்த செய்தி உங்களுடைய ஆட்டோமொபைல் துறை முதலீட்டையும் மறுசீரமைப்பு செய்யவும் உதவும்.
பிரச்சனையின் ஆரம்ப புள்ளி அமெரிக்கா: சீனா - அமெரிக்க மத்தியிலான வர்த்தக போரின் போது, சீனா தனது ஆதிக்கத்தை முதல் முறையாக உலக நாடுகளுக்கு காட்ட துவங்கிய தினம் தான் ஏப்ரல் 4, 2025. ஆம், சீனா உற்பத்தி துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்துவது அனைவருக்கும் தெரியும், ஆனால் உற்பத்தி துறையில் மொத்த சப்ளை செயினில் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்பது இந்த ஒரு அறிவிப்பில் தான் உலக நாடுகளுக்கு தெரிய வந்தது.

சீனா அரசு போட்ட உத்தரவில், இனி சீனாவிடம் இருந்து அரிய உலோக தாதுக்கள், சுத்திகரிக்கப்பட்ட அரிய உலோகங்கள் மற்றும் அரிய உலோகத்தால் செய்யப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் முதலில் சீன ஏற்றுமதியாளர்கள் உரிமம் பெற வேண்டும். இதேபோல் சீனாவிடம் இருந்து அரிய உலோக பொருட்களை வாங்குவோர் தனிப்பட்ட முறையில் சீன அரசிடம் இருந்து இறுதி பயனர் சான்றிதழ்-ஐ பெற வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தப்படுத்தியது.
இந்த சான்றிதழ் இருந்தால் தான் இந்தியா முதல் அமெரிக்க வரையில் அரசாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி அரிய உலோக பொருட்களை வாங்க முடியும் என்ற இக்கட்டான நிலையை சீனா உருவாக்கியது. அரிய உலோக பட்டியலில் மொத்தம் 17 உலோகம் உள்ளது, இதில் 7 முக்கிய உலக பொருட்களை வாங்க இந்த சிறப்பு அனுமதி தேவை.
இதுமட்டும் அல்லாமல் சீனா இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றால், இந்த அரிய உலோக காந்தங்கள் ஆயுத உற்பத்தி அல்லது பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படாது என உறுதியளிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. இந்த அரிய உலோக காந்தங்கள் கார், பைக், முதல் விமான, ஏவுகணை முதல் பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டின் காரணமாக தான், அமெரிக்கா சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது என்றால் மிகையில்லை. இந்த ஒரு விஷயத்தில் தற்போது இந்திய ஆட்டோமொபைல் துறையும் சிக்கியுள்ளது.

இதன் விளைவாக, இந்தியாவைச் சேர்ந்த 21 நிறுவனங்கள்-Bosch India, Marelli Powertrain India, Mahle Electric Drives India, TVS Motor, Uno Minda, மற்றும் Sona Comstar உட்பட-சீனாவின் அனுமதிக்காக தற்போது காத்திருக்கின்றன. இரு வாரங்களுக்கு முன் அனுமதிக்காக காத்திருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தது, ஆனால் தற்போது 21 ஆக உயர்ந்துள்ளது. காரணம் அரிய உலோக காந்தங்களின் இருப்பு இந்தியாவில் வேகமாக குறைந்து வருகிறது. இதில் முக்கியமாக Sona Comstar-இன் முந்தைய விண்ணப்பம் நடைமுறை சிக்கல் காரணங்களால் சீன அரசு தரப்பில் நிராகரிக்கப்பட்டு, தற்போது மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த 21 நிறுவனங்களுக்கு எப்போது அனுமதி கிடைக்கும்..? எப்போது சப்ளை வரும் என்பது தெரியாத நிலை உள்ளது..? இதுக்குறித்து பஜாஜ் ஆட்டோ தலைவர் சில வாரங்களுக்கு முன்பே இந்திய அரசுக்கும், முதலீட்டாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். இந்திய அரசும் இப்பிரச்சனையை சமாளிக்க முயற்சிகள் எடுத்தும் பலன் இல்லாமல் உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை:
அரிய உலோகம் காந்தங்கள் எலக்ட்ரிக் வாகனங்களின் மோட்டார்கள், இருக்கை அமைப்புகள், மற்றும் முக்கிய பாகங்களுக்கு அவசியமானவை. இந்த காந்தங்களுக்கு மாற்று அமைப்பு தற்போது சந்தையில் இல்லாதது கூடுதல் பிரச்சனை. ஏனெனில் ஒரு பொருளின் வடிவமைப்பை மாற்றி அதை நடைமுறைக்கு கொண்டு வர பல ஆண்டுகள் தேவைப்படும்.
இதனால், Bosch India, TVS Motor போன்ற நிறுவனங்கள் இந்திய அரசுக்கு கடிதம் எழுதி இந்த அரிய உலோக காந்தங்களை சப்ளையை சீர்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த பிரச்சனை சரி செய்யப்படாவிடில் ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் இந்தியாவில் கார் மற்றும் பைக் உற்பத்தி நிறுத்தப்படலாம்.
இந்திய ஆட்டோமொபைல் துறை, 80%-க்கும் மேல் அரிய உலோகம் காந்தங்களை சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. இந்த காந்தங்கள் மின்சார வாகனங்களின் மோட்டார்கள் மற்றும் இயந்திர பாகங்களுக்கு அவசியம்.

சீனாவின் ஆதிக்கம்:
சீனா தற்போது தடை விதித்துள்ள 7 அரிய உலோகம் என்பது samarium, gadolinium, terbium, dysprosium, lutetium, scandium, yttrium ஆகியவை, மேலும் இதில் neodymium உலோகமும் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த 8 உலோக நாம் பயன்படுத்தும் ஹெட்போன் முதல் அணுஉலை வரையில், MRI ஸ்கேனர் முதல் கம்பியூட்டர் ஹார்ட் டிரைவ் வரையில் பல முக்கியமான பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அரிய உலோகம் தாதுக்கள் பூமியில் பரவலாக கிடைத்தாலும், ஒவ்வொரு பகுதியில் கிடைக்கும் அளவு என்பது மிகவும் குறைவு தான். மேலும் இந்த உலோகத்தை தூதுவில் இருந்து பிரித்தெடுப்பது செலவு மிகுந்ததும், நச்சுத்தன்மை மிக்கதும் ஆகும்.
1980கள் மற்றும் 1990களில், சீனா மலிவான நிலம், எளிதான அனுமதிகள், மற்றும் குறைந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை வழங்கி, உலகளாவிய அரிய உலோகம் சந்தையை மொத்தமாக கைப்பற்றியது. இதனால், உலக நாடுகளுக்கு போதுமான சப்ளை சீனாவில் இருந்து குறைந்த விலையிலேயே கிடைக்க துவங்கியது. இதனால் மேற்கத்திய நாடுகளின் சுரங்கங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டன.
இதனால் சீனா தற்போது உலகின் 70% அரிய உலோகம் உற்பத்தியையும், 90% பிராசசிங் பணிகளையும் கட்டுப்படுத்துகிறது. 2025 ஏப்ரலில், சீனாவின் இப்புதிய உத்தரவு காரணமாக அரிய காந்த ஏற்றுமதி 15% குறைந்தது, உலகளவில் பற்றாக்குறையை உருவாக்கியது. இதன் மூலம் அமெரிக்காவில் பல ஹைய் டெக் உற்பத்தி துறை முடங்கும் நிலைக்கு மாட்டிக்கொண்டு உள்ளது.

இந்தியாவில் அரிய உலோகம் உள்ளதா?:
இந்தியாவில் சுமார் 70 லட்சம் டன் அரிய உலோகம் இருப்பு உள்ளது, உலகளவில் ஐந்தாவது பெரிய இருப்பு கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது. ஆனால், 2023ஆம் ஆண்சடில் இந்தியா வெறும் 2,900 டன் மட்டுமே உற்பத்தி செய்தது, இது சர்வதேச உற்பத்தியில் 1%-க்கும் குறைவு. இதற்கு முக்கிய காரணம், IREL (India Rare Earths Limited) என்ற ஒரே பொதுத்துறை நிறுவனம் தான் இந்த பணிகளை செய்கிறது.
அதுவும் IREL தற்போது செய்து வரும் முக்கிய பணி என்றால், கடற்கரை மணலில் உள்ள மோனசைட் தாதுவை நியூக்ளியர் எனர்ஜி உற்பத்தி பயன்பாட்டிற்கு மட்டுமே பிரித்தெடுத்தது வருகிறது. ஆனால் மற்ற அரிய உலோகம் தாதுகளுக்காக எவ்விதமான முயற்சிகளையும் எடுக்கவிவ்லை. மேலும் இத்துறையில் தனியார் துறைக்கு அனுமதி இல்லை.

மாற நாடுகள்:
அரிய உலோக உற்பத்தியில் சீனா மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறதா? அதற்கு பதில் ஆம் என்பது தான். சில நாடுகள் இதில் ஈடுப்பட்டு இருந்தாலும் உற்பத்தி அளவு என்பது மிகவும் குறைவு என்பதால் சர்வதேச சந்தையின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.
சீனாவின் கட்டுப்பாட்டிற்கு பின்பு ஆஸ்திரேலியா, வியட்நாம், மலேசியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அரிய உலோகம் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்கின்றன, ஆனால் சீனாவின் பற்றாக்குறையை ஈடு செய்ய முடியவில்லை.
ஆஸ்திரேலியா: உலகின் நான்காவது பெரிய அரிய உலோக இருப்பு கொண்ட நாடாக உள்ளது. Lynas என்னும் நிறுவனம் 2023-ல் 13,000 டன் உற்பத்தி செய்தது, இது சீனாவின் 5%-க்கும் குறைவு.
வியட்நாம்: இந்த நாட்டிலும் பெரிய அளவிலான அரிய உலோக இருப்பு கொண்டு உள்ளது, ஆனால் வியட்நாம் நாட்டில் இந்த அரிய உலோக தாதுவில் இருந்து உலோகத்தை தனியாக பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் இல்லை.
மலேசியா: இங்கு தாது பிராசசிங் தளம் உள்ளகு, ஆனால் சுரங்கம் இல்லை.
அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இரு்ககும் அமெரிக்காவில் அதிகளவில் பழைய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் இருந்து மறுசுழற்சி செய்து அரிய உலோகத்தை தயாரிக்கிறது. ஆனால் உற்பத்தி அளவு என்றால் மிகவும் சொற்பமான அளவு தான்.
இந்த நாடுகள் உற்பத்தியை உயர்த்தினாலும், உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய இன்னும் 5-10 ஆண்டுகள் தேவைப்படும். 10 ஆண்டுகள் ஆனாலும் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது.

இந்தியாவின் அடுத்தக்கட்ட திட்டம்:
சீனாவின் ஆட்டத்திற்கு பின்பு, இந்திய அரசு அரிய உலோகம் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டு உள்ளது. 2024-ல், மத்திய அரசு அரிய உலோகத்தின் பிராசசிங் மற்றும் சுரங்கத்திற்கு தனியார் முதலீட்டை அனுமதிக்க பரிசீலித்து வருகிறது. மேலும் அரசு நிறுவனமான IREL-ஐ மறுசீரமைத்து, NdFeB மற்றும் SmCo காந்த உற்பத்திக்கு புதிய ஆலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாற்றங்கள் உடனடி தீர்வை அளிக்காது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications