சர்வதேச அளவில் பொருளாதார பலத்தில் நமது பங்காளி நாடான சீனா 2வது இடத்தில் உள்ளது. அதேசமயம் கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் நாங்கதான் கிங் என்று உலகின் முன் தன்னை நிரூபித்து வருகிறது. மனித ரோபோக்கள் அறிமுகம் செய்வது முதல் சுகாதார அமைப்புகளை மாற்றுவது வரை மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் திறனை எந்தவித தயக்கமும் இன்றி கம்யூனிஸ்ட் நாடு வெளிப்படுத்தி வருகிறது.
இப்போது பணம் பரிவர்த்தனையில் இந்தியாவின் யுபிஐ சிஸ்டத்தை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது சீனாவின் புதிய கண்டுபிடிப்பு. மளிகை கடைகளில் உள்ளங்கையை காட்டி பணம் செலுத்தும் தொழில்நுட்பத்தை சீனா பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. கோச் ராஜன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியர்களுக்கு ரொக்கம் தான் கிங் ஆனால் சீனர்களுக்கு என்ற தலைப்பிட்டு அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து இருந்தார்.

அந்த வீடியோவில், 7-Eleven convenience store என்ற சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்கிறார். அங்கு அவர் ஒரு பாட்டில் ஸ்பார்க்லரைட் வாட்டர் பாட்டில் வாங்கி விட்டு, பணம் செலுத்துவதற்கான இடத்துக்கு வருகிறார். அங்குள்ள ஸ்கேன் கருவில் தனது உள்ளங்கை காட்டுகிறார். இதனையடுத்து ஸ்கேன் கருவி அவர் பொருளுக்கான விலையை டிஜிட்டல் முறையில் பெற்று கொள்கிறது.
சூப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியே வந்த நபர், அதுதான் என்னுடய WeChat ID, நான என் கார்டுகள் அல்லது என் கையில் உள்ள பர்ஸையோ அல்லது என் தொலைபேசியோ இல்லாமல் பணம் செலுத்தினேன், இது ரொம்ப உற்சாகமானது, மனதை கவரும் என்று அவர் தெரிவித்தார்.
சீனா இந்த உள்ளங்கை தொழில்நுட்பத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு அறிமுகம் செய்து விட்டது. 2023 மே மாதத்தில் Weixin-ன் உள்ளங்கை அங்கீகார சேவை முதலில் பெய்ஜிங்கின் விமான நிலைய விரைவு ரயில் பாதையிலும், ஷென்ஷென் பல்கலைக்கழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அடுத்த 3 மாதங்களுக்கு (செப்டம்பருக்குள்) குவாங்டாங் மகாணம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட 7-Eleven convenience store சூப்பர்மார்க்கெட்டுகளுக்கும் இது வேகமாக விரிவடைந்ததாக தகவல்.
சீனாவில் இன்று பவர் பேங்க் வாடகை நிலையங்களிலும் உள்ளங்கையை பயன்படுத்தி பணம் செலுத்தும் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. மேலும் சில்லரை விற்பனை, போக்குவரத்து, உடற்பயிற்சி மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த சிஸ்டத்தை பயன்படுத்த, பயனர்கள் தங்கள் உள்ளங்கையை ஸ்கேனர் மூலம் சீரமைத்து, மொபைல் செயலி மூலம் சுருக்கமான பதிவை செய்தால் போதும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications