தடையை தாண்டி வேகமாக வளரும் சீன செயலிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் சீன செயலிகள் மக்களின் தரவுகளை அதிகளவில் திருடி வருகிறது என குற்றம்சாட்டப்பட்டு, 200க்கும் அதிகமான சீன செயலிகளை மத்திய அரசு மக்களின் தகவல் பாதுகாப்பு கருத்தில் கொண்டு தடை செய்தது.

இந்த தடைக்கு பின்பு இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்திற்கு மத்தியில் ஏற்பட்ட மோதலும் முக்கியமான காரணம் என பேசப்பட்டாலும், சீனா அரசு தற்போது தன் நாட்டின் தகவல் பாதுகாப்புக்காக சீன டெக் நிறுவனங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கையின் மூலம் மத்திய அரசு செய்தது சரி எனவும், எல்லை பிரச்சனைக்காக தடை செய்யப்படவில்லை என்பதும் நிருபனமாகியுள்ளது.

இவ்வளவு பிரச்சனைக்கு பின்பும் இந்தியாவில் இன்னும் சில சீன செயலிகள் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் கடந்த ஒரு வருடத்தில் அதாவது தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட பின்பு மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

சீன செயலிகள்

சீன செயலிகள்

இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்ட பின்பு பல முன்னணி நிறுவனங்களின் செயலிகள் கூட அதாவது அலிபாபா, சியோமி போன்ற நிறுவனங்களின் செயலிகள் தங்களது சீன அடையாளத்தை மறைத்து புதிய நிறுவனத்தின் பெயரிலும், சீன பெயர்கள் அல்லாத பெயரில் இந்தியாவில் வளம் வருகிறது.

 8 சீன செயலிகள்

8 சீன செயலிகள்

இந்நிலையில் இந்தியாவில் தற்போது டாப் 60 செயலிகள் பட்டியலில் 8 சீன செயலிகள் உள்ளது. இந்த 8 சீன செயலிகளில் சுமார் 211 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், ஜூலை 2020ல் இந்த 8 செயலிகளின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெறும் 96 மில்லியன் வாடிக்கையாளர்கள் மட்டுமே.

13 மாத வளர்ச்சி

13 மாத வளர்ச்சி

ஆனால் கடந்த 13 மாதத்தில் சீன செயலிகளாவே இருந்து, தனது அடையாளத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைத்து சுமார் 115 மில்லியன் வாடிக்கையாளர்களை பல்வேறு வழிகளில் பிடித்துள்ளது. இந்தியாவில் சீன செயலிகள் பாதுகாப்பற்றது என தெரிந்தும் சிலர் சீன செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளதும் நடந்துள்ளது.

 267 சீன செயலிகள் தடை

267 சீன செயலிகள் தடை

2020ல் சுமார் 267 சீன செயலிகள் ஐடி விதிகள் பிரிவு 69A கீழ் தடை செய்யப்பட்டது. இந்த தடையில் டிக்டாக், யூசி பிரவுசர், பப்ஜி, ஹலோ, அலி எக்ஸ்பிரஸ், லைகி, ஷேர்இட், மி கம்யூனிட்டி, வீ சேட், மைடூ, வெய்போ, பீகோ, லைவ் என பல செயலிகள் தடை செய்யப்பட்டது.

ப்ளேஇட் வேகமான வளர்ச்சி

ப்ளேஇட் வேகமான வளர்ச்சி

இந்த தடைக்கு பின்பு சுமார் 13 மாதங்களுக்கு பின்பு ப்ளேஇட் என்னும் சீன செயலி இந்தியாவிலேயே வேகமாக வளரும் செயலியாக உள்ளது வெறும் 28 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ப்ளேஇட் (Alibaba/Guanzhou Nemo) தற்போது 67 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று உள்ளது.

பிற செயலிகள்

பிற செயலிகள்

இதை தொடர்ந்து ஷேர்மி (சியோமி), ஜிலி (சியோமி), டிகி (YY இன்க்), ரெசோ (பையிட் டான்ஸ்), நாய்சி (YY இன்க்), mAst (Xiaoying Technologies), மிவி (பையிட் டான்ஸ்) ஆகியவை அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட பட்டியலில் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளது.

கூகிள் ப்ளே

கூகிள் ப்ளே

கூகிள் ப்ளே தளத்தில் இந்த செயலிகளின் உரிமையாளர்கள், நாடு ஆகியவற்றின் தரவுகள் மறைக்கப்பட்டாலும், இந்நிறுவனத்தின் இணையதளம் மற்றும் லின்ங்கிடுஇன் ப்ரொபைல் ஆகியவற்றில் இவை அனைத்தும் சீன நிறுவனங்கள் என வெளிப்படையாக தெரிகிறது. இந்த செயலிகளும் பல விதமான தரவுகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுகிறது என டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese apps growing fast in India again, after modi Govt App Ban

Chinese apps growing fast in India again, after modi Govt App Ban
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X