இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனை காரணமாக மத்திய அரசு இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து 200க்கும் மேற்பட்ட சீன செயலிகள் மீது தடை விதிக்கப்பட்டது. இதனால் சீன செயலிகள் பெரிய அளவிலான வர்த்தகத்தை இழந்தே வேளையில் இந்திய நிறுவனங்கள் இந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ளது.
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளின் அளவீட்டில் சீன செயலிகளின் பங்கு 29 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது 2019ல் 38 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சீன செயலிகள் மீது அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இந்திய நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இதன் வாயிலாக 2020ல் இந்தியச் சந்தையில் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளில் 39 சதவீத சந்தையை இந்திய நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது. சீனாவில் வீழ்ச்சியை இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் செயலிகளும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது
2020ல் இந்தியாவில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் மொபைல் பயன்பாட்டு அளவும், புதிய மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில், சுமார் 85 சதவீத ஆப் இன்ஸ்டால்கள் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கேமிங், பைனான்ஸ், பொழுதுபோக்கு பிரிவு சார்ந்த செயலிகள் அதிகளவில் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications