இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் அதிகப்படியான முதலீடுகளை செய்ய தயாராகியுள்ளது.
இரண்டு நாட்கள் முன்பு அமெரிக்காவின் டெஸ்லா இந்தியாவில் உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான தொழிற்சாலையை அமைக்கவும், தனது சப்ளையர்களை இந்தியாவுக்கு அழைக்கவும் விரும்புவதாக மத்திய அரசிடம் தெரிவித்தது.

இந்த நிலையில் சீனாவில் டெஸ்லா உடன் நேருக்கு நேர் உற்பத்தி, வர்த்தகம், தொழில்நுட்பம், தரம் என அனைத்தும் போட்டிப்போட்டு வரும் BYD நிறுவனம் தமிழ்நாட்டில் மட்டும் 3 தொழிற்சாலைகளை கொண்டு இந்தியாவில் 2 கார்களை அறிமுகம் செய்து சிறிய அளவிலான வர்த்தகத்தை கொண்டு உள்ளது. இதை விரிவாக்கம் செய்ய மாபெரும் திட்டத்தை தீட்டியுள்ளது.
சீனா-வின் BYD நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கவும், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை தயாரிக்கவும் உள்நாட்டு நிறுவனங்கள் உடன் கூட்டணி உடன் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய மத்திய அரசிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மத்திய அரசு சீனா மற்றும் சீன நிறுவனங்களின் புதிய முதலீடுகளை அனுமதிக்காமல் இருந்தது. ஆனால் BYD இந்தியாவில் பல வருடங்களுக்கு முன்பே வந்த நிலையில் இந்த பிரச்சனை இருக்காது, இதேபோல் BYD தனியாக முதலீடு செய்யாமல் இந்திய நிறுவன கூட்டணியில் முதலீடு செய்கிறது. இதனால் BYD நிறுவனத்தின் 8200 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டுக்கு மத்திய அரசு கட்டாயம் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் BYD மற்றும் ஹைதராபாத்-ஐ சேர்ந்த மிகவும் பிரபலமான மேகா இன்ஜினியரிங் & இன்பராஸ்டக்சர் ஆகியவை இணைந்து இந்த 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு விண்ணப்பத்தை கொடுத்துள்ளது. இந்த கூட்டணி நிறுவனம் தான் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கவும், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை தயாரிக்கவும் முதலீடு செய்ய உள்ளது.
சீனாவின் BYD சென்னையில் 3 தொழிற்சாலைகளை கொண்டு வெளிநாட்டில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து கார்களை அசம்பிளி செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சீனாவின் BYD தற்போது 500 கிலோமீட்டர் மைலேஜ் கொண்ட ஒரு பெரிய MPV கார்-ஐயும், அதிநவீன டிசைன் உடன் ஒரு காம்பெக்ட் எஸ்யூவி கார்-ஐயும் அறிமுகம் செய்துள்ளது.
சீன BYD நிறுவனத்தின் இந்த 1 பில்லியன் டாலர் முதலீடு இந்தியாவுக்கு வர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, காரணம் சென்னையில் ஏற்கனவே 3 தொழிற்சாலைகளை கொண்டு உள்ளது. ஆனால் கூட்டணியில் வரும் மேகா இன்ஜினியரிங் & இன்பராஸ்டக்சர் நிறுவனம் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் மிகப்பெரிய வர்த்தகத்தை கொண்டு இருக்கும் காரணத்தால் புதிய தொழிற்சாலைகள் இவ்விரு மாநிலத்திலும் அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications