மஹிந்திரா தார்-க்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது, இளம் தலைமுறையினர் முதல் 70களில் இருக்கும் மார்டன் தாத்தா வரையில் மஹிந்திரா தார்-க்கு அடிமை என்றால் மிகையில்லை. பொதுவாக கார்களை ஓட்டும் போது தான் கொத்தான ஃபீல் வரும், மஹிந்திரா தார் வைத்திருந்தாலே கெத்து தான்.
இப்படி இந்தியாவில் கொண்டாடப்படும் மஹிந்திரா தார் சர்வதேச சந்தைகளில் விற்கப்படவில்லை என்பது ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்படும் நிலையில், இதனை சீன ஆட்டோமொபைல் நிறுவனம் காப்பி அடித்து பாகிஸ்தானில் ஏகப்பட்ட விலைக்கு விற்பனை செய்கிறது.

மஹிந்திரா தார் காரை ஆட்டோமொபைல் சந்தையில் மலிவான ஜீப் ரேங்லர் காருக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. மஹிந்திரா தார் அடுத்தாக 5-கதவுகளை கொண்ட காரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார் புதிய சாதனைகளை எட்டும் என எதிர்பார்க்கப்படும் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மஹிந்திரா தார் சர்வதேச சந்தையில் விற்கப்படாத நிவையில், சீன ஆட்டோமொபைல் நிறுவனமான BAIC, மஹிந்திரா தார் மற்றும் பொலிரோவின் கலவையைப் போல தோற்றமளிக்கும் எஸ்யூவி காரை பாகிஸ்தானில் அதிகப்படியான விலைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய நிறுவனமான மஹிந்திராவின் டிசைன்-ஐ காப்பி அடித்துள்ளது சீனாவின் BAIC.
சீனாவின் ஆட்டோமொபைல் சந்தை மிகப்பெரியது, உலகமே வியக்கும் வண்ணம் பல கார்களை தயாரித்திருக்கும் சீன நிறுவனங்களில் சில நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான வாகனங்களிலிருந்து டிசைன்களை காப்பி அடித்து புதிய கார்களை தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அறிமுகம் செய்வது வழக்கம். இதில் ஒன்று தான் BAIC BJ40 Plus-ன் பாகிஸ்தான் அறிமுகம்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Pakwheels இணையதளத்தின்படி, பாகிஸ்தானில் BAIC BJ40 Plus காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 1.12 கோடி ரூபாய் ஆகும், இதில் ரூபாய் என்பது பாகிஸ்தான் ரூபாய். இந்தியாவில் மஹிந்திரா தார் விலை ரூ.10.54 லட்சத்தில் தொடங்குகிறது.
சீனாவின் BAIC BJ40 Plus காரின் வடிவமைப்பை பார்க்கும் போது ஒரு காரின் காப்பி ஆக இதை பார்க்க முடியாத பல கார்களின் காப்பியாகவே உள்ளது. BAIC BJ40 Plus-ல் ஜீப் போன்ற கிரில், லேண்ட் ரோவர் கார்களை போல ஹெட்லைட், காரின் ப்ரொபைல் ரேங்லர் எஸ்யூவி உடன் ஒத்துப்போகிறது.
நீங்களே சொலுங்க சீனாவின் BAIC BJ40 Plus கார் நல்லா இருக்கா..? நம்ம ஊரு மஹிந்திரா தார் நல்லா இருக்கா..?
பாகிஸ்தானில் BAIC BJ40 Plus காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 1.12 கோடி ரூபாய் என்றால் இந்திய ரூபாய் மதிப்பின் படி 32.28 லட்சம் ரூபாய்.


Click it and Unblock the Notifications