தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவுடன் எப்போதும் நேருக்கு நேர் மோதும் சீனா, தற்போது இண்டர்நெட் உலகையே ஆட்டிப்படைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் Chatbot பிரிவிலும் இறக்கியுள்ளது. இதனால் இண்டர்நெட் உலகில் பெரும் போட்டி உருவாகியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா - சீனா மத்தியிலான போட்டி கடுமையாக இருக்கும் நிலையில் சீனாவின் பைடூ நிறுவனம் மைக்ரோசாப்ட், கூகுள்-ன் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் Chatbot-க்குப் போட்டியாக Ernie என்ற தளத்தை உருவாக்கியுள்ளது.
இதனால் பெரும் போட்டி உருவாகி வருகிறது.
சீனா
சீனாவின் கூகுள் எனப்படும் பைடூ நிறுவனம் 2019 ஆம் ஆண்டிலேயே Ernie என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகம் செய்திருந்திருந்து. Enhanced Representation through Knowledge Integration என்பதன் சுருக்கமே Ernie .
Ernie தொழில்நுட்பம்
சீனா தொழில்நுட்பம் என்பதால் உலக நாடுகளில் பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வராமல் அந்நாட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பைடூ நிறுவனத்தின் Ernie மொழி சார்ந்த பல பணிகளைச் செய்து வருகிறது.
சாட்பாட் அறிமுகம்
ஆனால் சாட்பாட் போன்ற சேவையைப் பைடூ நிறுவனம் மார்ச் மாதத்தில் மைக்ரோசாப்ட்-ன் 10 பில்லியன் டாலர் முதலீட்டில் இயங்கும் ChatGPT, கூகுள் Bard-க்குப் போட்டியாக அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் பைடூ நிறுவனம் தனது புதிய சாட்பாட்-ஐ சர்ச் இன்ஜின் உடன் இயக்க திட்டமிட்டு உள்ளது.
OpenAI நிறுவனம்
OpenAI நிறுவனத்தின் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தளம் மிகவும் குறுகிய காலகட்டத்தில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
ChatGPT தளம்
ChatGPT தளம் மனிதர்கள் பேசுவதைப் போலவே நாம் கேட்கும் கேள்விக்குப் பதிலையும், விளக்கத்தையும் அளிக்கும். இது வாய்ஸ் மூலம் இயங்குவது இல்லை, டெக்ஸ்ட் வாயிலாக இயங்கும் காரணத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் இது பயன்படும் என்றும், கம்பியூட்டர் கோடிங் முதல் மக்களின் அன்றான கேள்விக்கும் இது பதில் அளிக்கிறது.
கூகுள் Bard
OpenAI நிறுவனத்தின் ChatGPT, கூகுள்-ன் எதிர்காலத்தை முடிக்கப்போகிறது என்று பேச்சு அடிப்பட்டு வரும் நேரத்திலேயே நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்-டா என்ற வகையில் கூகுள் புதிய செயற்கை நுண்ணறிவு சேட்பாட் தளமான Bard-ஐ உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.
LaMDA தொழில்நுட்ப
கூகுள் தனது I/O 2021 கூட்டத்தில் அறிமுகம் செய்த LaMDA (Language Model for Dialogue Applications) தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் பார்ட் (BARD) என்ற chatbot-ஐ அறிமுகம் செய்தது. இக்கூட்டத்தில் பயன்படுத்திய பலரை வியக்க வைத்தாலும், மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இலவசம்
கூகுள் Bard தளத்தை மக்களுக்கு இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்ற நிலை இருக்கும் வேளையில், இலவசம் என்றால் கேட்கவே வேண்டாம் காட்டுத்தீ போலப் பரவும். ஆனால் chatGPT இப்போதே ஒரு மாதத்திற்கு 20 டாலர் என்ற கட்டணத்தை விதிக்கிறது.
100 மில்லியன் வாடிக்கையாளர்
chatGPT சேட்பாட் உலகிலேயே மிகவும் குறுகிய காலகட்டத்தில் அதாவது அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 2 மாதத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு டிக்டாக் தளத்தில் வெறும் 9 மாதத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் 2.5 வருடத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications